புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ இந்த நாளில் அறிமுகமாகிறதா? இணையத்தில் வெளியான தகவலால் பெரும் எதிர்பார்ப்பு!

புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவியின் அறிமுகம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை எகிற செய்துள்ளன. இதுகுறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ இந்த நாளில் அறிமுகமாகிறதா? இணையத்தில் வெளியான தகவலால் பெரும் எதிர்பார்ப்பு!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ. மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் மிக நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில் மஹிந்திரா நிறுவனம் புதிய தலைமுறை ஸ்கார்பியோ காரை பொது பார்வைக்கு கொண்டு வருவதற்கு தற்போது தயாராகி விட்டது.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ இந்த நாளில் அறிமுகமாகிறதா? இணையத்தில் வெளியான தகவலால் பெரும் எதிர்பார்ப்பு!

புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ வரும் ஜூன் 20ம் தேதி பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கார்வாலே செய்தி வெளியிட்டுள்ளது. புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ மிக நீண்ட காலமாகவே இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் ஏற்கனவே பலமுறை வெளியாகி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை எகிற செய்துள்ளன.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ இந்த நாளில் அறிமுகமாகிறதா? இணையத்தில் வெளியான தகவலால் பெரும் எதிர்பார்ப்பு!

அத்துடன் புதிய தலைமுறை ஸ்கார்பியோ காரின் டீசர் வீடியோக்களையும் மஹிந்திரா நிறுவனம் சமீப நாட்களாக வெளியிட்டு வந்தது. இந்த நிலையில்தான் மஹிந்திரா நிறுவனம் புதிய தலைமுறை ஸ்கார்பியோ கார் மீது போர்த்தப்பட்டிருந்த திரையை விலக்கி இந்திய வாடிக்கையாளர்களுக்கு காட்டவுள்ளது. ஆனால் வரும் ஜூன் 20ம் தேதி புதிய தலைமுறை ஸ்கார்பியோ காரின் டிசைன் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்த தகவல்களை மட்டுமே மஹிந்திரா நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ இந்த நாளில் அறிமுகமாகிறதா? இணையத்தில் வெளியான தகவலால் பெரும் எதிர்பார்ப்பு!

இதை தொடர்ந்து அடுத்த ஒரு சில மாதங்களில் அதிகாரப்பூர்வமாக விலை அறிவிக்கப்பட்டு, புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ கார் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்படும். வரும் ஜூன் 20ம் தேதி விலை அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என கூறப்படுகிறது. ஆனால் கடந்த காலங்களில் காரை பொது பார்வைக்கு கொண்டு வரும் தினத்திலேயே மஹிந்திரா நிறுவனம் சர்ப்ரைஸாக விலையை திடீரென அறிவித்த வரலாறுகளும் உண்டு.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ இந்த நாளில் அறிமுகமாகிறதா? இணையத்தில் வெளியான தகவலால் பெரும் எதிர்பார்ப்பு!

கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி700 காரை பொது பார்வைக்கு கொண்டு வந்தது. அன்றைய தினமே யாரும் எதிர்பார்க்காத வகையில் எக்ஸ்யூவி700 காரின் விலையையும் திடீரென அறிவித்து, மஹிந்திரா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது. எனவே புதிய தலைமுறை ஸ்கார்பியோ விஷயத்தில் என்ன நடக்க போகிறது? என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ இந்த நாளில் அறிமுகமாகிறதா? இணையத்தில் வெளியான தகவலால் பெரும் எதிர்பார்ப்பு!

புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் டிசைன் மாற்றியமைக்கப்படவுள்ளது. இதன்படி முன் பகுதியில் புதிய க்ரில் அமைப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்களும் வழங்கப்படலாம். மேலும் ரீ-டிசைன் செய்யப்பட்ட முன் பக்க பம்பர், புதிய பனி விளக்குகள் அறை, எல்இடி பகல் நேர விளக்குகள் ஆகியவையும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ இந்த நாளில் அறிமுகமாகிறதா? இணையத்தில் வெளியான தகவலால் பெரும் எதிர்பார்ப்பு!

பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரையில், புதிய ட்யூயல்-டோன் அலாய் வீல்கள், க்ரோம் பூசப்பட்ட டோர் ஹேண்டில்கள், ஜன்னல்களை சுற்றிலும் க்ரோம் லைன்கள் ஆகியவை இடம்பெறலாம். வெளிப்புற டிசைனை போல், உட்புற கேபினும் மாற்றியமைக்கப்படவுள்ளது. இதன்படி பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், புதிய தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டியரிங் வீல் ஆகியவற்றை புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ பெறவுள்ளது.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ இந்த நாளில் அறிமுகமாகிறதா? இணையத்தில் வெளியான தகவலால் பெரும் எதிர்பார்ப்பு!

இதுதவிர மூன்றாவது வரிசையில் முன்னோக்கிய இருக்கைகள், மேற்கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பீக்கர்கள், யூஎஸ்பி-சி சார்ஜிங் போர்ட்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் கீலெஸ் எண்ட்ரி போன்ற அம்சங்களும் புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ காரில் இடம்பெறவுள்ளது. அதேநேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகையான இன்ஜின் தேர்வுகளையும் புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ இந்த நாளில் அறிமுகமாகிறதா? இணையத்தில் வெளியான தகவலால் பெரும் எதிர்பார்ப்பு!

அதேபோல் டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில் மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படலாம். புதிய தலைமுறை ஸ்கார்பியோ தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை மஹிந்திரா நிறுவனம் கூடிய விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக வாடிக்கையாளர்கள் பலர் ஆர்வத்துடன் காத்து கொண்டுள்ளனர்.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ இந்த நாளில் அறிமுகமாகிறதா? இணையத்தில் வெளியான தகவலால் பெரும் எதிர்பார்ப்பு!

மஹிந்திரா ஸ்கார்பியோ இந்திய சந்தையில் மிக நீண்ட காலமாக மிகவும் பிரபலமாக இருந்து வரும் எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாகும். புதிய தலைமுறை தார் மற்றும் எக்ஸ்யூவி700 ஆகிய கார்களின் வரிசையில், புதிய தலைமுறை ஸ்கார்பியோ எஸ்யூவி காருக்கும் இந்திய சந்தையில் பிரம்மாண்டமான வரவேற்பு கிடைக்கும் என மஹிந்திரா நிறுவனம் எதிர்பார்க்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 19, 2022, 18:02 [IST]
English summary
New gen mahindra scorpio suv india debut date leaked details here
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+