புதிய தலைமுறை மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எப்போது விற்பனைக்கு வருகிறது தெரியுமா? சந்தோஷமான செய்தி!

புதிய தலைமுறை மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி தெரியவந்துள்ளது. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எப்போது விற்பனைக்கு வருகிறது தெரியுமா? சந்தோஷமான செய்தி!

புதிய தலைமுறை மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா (New-Gen Maruti Suzuki Vitara Brezza) கார் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என வாடிக்கையாளர்கள் பலர் ஆர்வத்துடன் காத்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்க கூடிய செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதுவும் இது அதிகாரப்பூர்வமான செய்தி என்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எப்போது விற்பனைக்கு வருகிறது தெரியுமா? சந்தோஷமான செய்தி!

ஆம், புதிய தலைமுறை மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய மாடல் வரும் ஜூன் 30ம் தேதி (June 30) இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. ஆனால் புதிய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸா காருக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை ஏற்கும் பணிகளை மாருதி சுஸுகி நிறுவனம் இன்னும் தொடங்கவில்லை.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எப்போது விற்பனைக்கு வருகிறது தெரியுமா? சந்தோஷமான செய்தி!

இருப்பினும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பல்வேறு டீலர்ஷிப்களில் முன்பதிவுகள் ஏற்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் புதிய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் தற்போது டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கி விட்டன. இது இந்த காரின் அறிமுகம் வெகு விரைவில் நிகழப்போகிறது என்பதை உணர்த்தி வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எப்போது விற்பனைக்கு வருகிறது தெரியுமா? சந்தோஷமான செய்தி!

வெளிப்புற டிசைனை பொறுத்தவரையில், புதிய தலைமுறை மாருதி சுஸுகி விட்டாரா வெகுவாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரில், புதிய முன் பக்க மற்றும் பின் பக்க பம்பர்கள், ட்யூயல் 'J' வடிவ எல்இடி பகல் நேர விளக்குகள், எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில்லைட்கள், சில்வர் ஸ்கிட் பிளேட்கள் மற்றும் ரூஃப் ரெயில்கள், புதிய அலாய் வீல்கள், பின் பக்க பம்பரில் ரெஃப்லெக்டர்கள், சுறா துடுப்பு ஆன்டெனா ஆகியவை வழங்கப்படலாம்.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எப்போது விற்பனைக்கு வருகிறது தெரியுமா? சந்தோஷமான செய்தி!

அத்துடன் பூட் லிட் மீது 'Brezza' என்ற பெயரும் இடம்பெற்றிருக்கலாம். தற்போது விட்டாரா பிரெஸ்ஸா என அழைக்கப்பட்டு வரும் இந்த கார், விட்டாரா என்ற பெயரை இழக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பிரெஸ்ஸா என்ற பெயரில் மட்டுமே இந்த கார் அழைக்கப்படலாம். வசதிகளை பொறுத்தவரையில், 360 டிகிரி கேமரா, டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பேடில் ஷிஃப்டர்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், சுஸுகி கனெக்ட் போன்றவை இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எப்போது விற்பனைக்கு வருகிறது தெரியுமா? சந்தோஷமான செய்தி!

அதே சமயம் இந்த புதிய மாடலில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 103 பிஹெச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் புதிய 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படலாம் என தெரிகிறது.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எப்போது விற்பனைக்கு வருகிறது தெரியுமா? சந்தோஷமான செய்தி!

பல்வேறு விதங்களில் அப்டேட் செய்யப்படுவதால், புதிய தலைமுறை மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் விலை அதிகமாக இருக்கலாம். தற்போது விற்பனை செய்யப்படும் மாடலின் விலையை விட சற்று அதிகமாக நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட் ஏற்கனவே கடுமையான போட்டி நிறைந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எப்போது விற்பனைக்கு வருகிறது தெரியுமா? சந்தோஷமான செய்தி!

இந்த சூழலில் இந்த செக்மெண்ட்டில் வரும் நாட்களில் போட்டி இன்னும் கடுமையாக மாறவுள்ளது. ஏனெனில் ஹூண்டாய் நிறுவனம் தனது வெனியூ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள இந்த புதிய மாடல் வரும் ஜூன் 16ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எப்போது விற்பனைக்கு வருகிறது தெரியுமா? சந்தோஷமான செய்தி!

இதை தொடர்ந்து புதிய தலைமுறை மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் விற்பனைக்கு வருகிறது. எனவே இந்த செக்மெண்ட்டில் போட்டி இன்னும் கடுமையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர், டொயோட்டா அர்பன் க்ரூஸர் மற்றும் கியா சொனெட் போன்ற பிரபலமான கார்களும் ஏற்கனவே இந்த செக்மெண்ட்டில்தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எப்போது விற்பனைக்கு வருகிறது தெரியுமா? சந்தோஷமான செய்தி!

புதிய தலைமுறை மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரை தொடர்ந்து, டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரின் புதிய தலைமுறை மாடலும் விற்பனைக்கு வரவுள்ளது. இவை இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே கார்கள்தான் என்பது ரெகுலர் வாசகர்களுக்கு தெரியும். அதாவது மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரைதான் டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டின் கீழ் ஒரு சில மாற்றங்களுடன் ரீ-பேட்ஜ் செய்து, அர்பன் க்ரூஸர் என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, June 6, 2022, 14:08 [IST]
English summary
New gen maruti suzuki vitara brezza official launch date check here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+