மீண்டும் யாரிஸ் காரை இந்தியாவிற்கு கொண்டுவருமா டொயோட்டா? புதிய மாடல் அறிமுகமாகுது!!

டொயோட்டா யாரிஸ் டீசர் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் மூலம் நமக்கு தெரியவந்துள்ள விஷயங்களையும், புதிய யாரிஸ் கார் இந்தியாவிற்கு வருமா என்பது பற்றியும் இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மீண்டும் யாரிஸ் காரை இந்தியாவிற்கு கொண்டுவருமா டொயோட்டா? புதிய மாடல் அறிமுகமாகுது!!

ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனமான டொயோட்டா அறிமுகமானதில் இருந்து கடந்த வருடங்களில் ஹேட்ச்பேக் & செடான் என இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற சிறிய அளவிலான கார்கள் பலவற்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

மீண்டும் யாரிஸ் காரை இந்தியாவிற்கு கொண்டுவருமா டொயோட்டா? புதிய மாடல் அறிமுகமாகுது!!

ஆனால் அவற்றில் பெரும்பாலானவை சந்தையில் வெற்றி பெறவில்லை என்பதே உண்மை. இதனால் இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனம் கார்களை அறிமுகம் செய்தும், அதன்பின் சில வருடங்களில் அவற்றின் விற்பனையை நிறுத்தியும் உள்ளது. இந்த வகையில் சமீபத்தில் விற்பனை நிறுத்தப்பட்ட மாடல் தான் யாரிஸ் செடான்.

மீண்டும் யாரிஸ் காரை இந்தியாவிற்கு கொண்டுவருமா டொயோட்டா? புதிய மாடல் அறிமுகமாகுது!!

இன்னும் சொல்லப்போனால், யாரிஸ் செடான் கார் தற்சமயம் விற்பனையில் இருக்கும் வெளிநாடுகளும் குறைவுதான். சில நாடுகளில் ஹேட்ச்பேக் வடிவில் யாரிஸ் விற்பனையில் உள்ளது. இந்த நிலையில் விரைவில் சர்வதேச அளவில் வெளியீடு செய்யப்பட உள்ள புதிய தலைமுறை யாரிஸ் செடான் காரின் டீசர் வீடியோ டொயோட்டா நிறுவனத்தின் யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.

மீண்டும் யாரிஸ் காரை இந்தியாவிற்கு கொண்டுவருமா டொயோட்டா? புதிய மாடல் அறிமுகமாகுது!!

அது தொடர்பான படங்களை தான் இங்கே காண்கிறீர்கள். இந்த படங்களின் மூலம் புதிய தலைமுறை யாரிஸ் செடான் காரின் வெளிப்பக்க தோற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. புதிய தலைமுறை யாரிஸ் கார் 2017இல் இந்தோனிஷியாவில் காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் செடானின் அடிப்படையிலானதாக இருக்கும் என கூறப்படுகிறது.

மீண்டும் யாரிஸ் காரை இந்தியாவிற்கு கொண்டுவருமா டொயோட்டா? புதிய மாடல் அறிமுகமாகுது!!

டைஹட்சூ டிஎன்-எஃப் என அழைக்கப்படுகின்ற அந்த கான்செப்ட் செடான் மாடலும் யாரிஸின் வழக்கமான டிஎன்ஜிஏ சேசிஸில் தான் தயாரிக்கப்பட்டுள்ளதாக டொயோட்டா அந்த சமயத்தில் தெரிவித்திருந்தது. புதிய டீசரில் பெரிய அளவிலான ரேடியேட்டர் க்ரில்லை புதிய தலைமுறை யாரிஸ் கொண்டுள்ளதை காணமுடிகிறது.

மீண்டும் யாரிஸ் காரை இந்தியாவிற்கு கொண்டுவருமா டொயோட்டா? புதிய மாடல் அறிமுகமாகுது!!

ரேடியேட்டர் க்ரில்லின் இரு பக்கங்களிலும் ஹெட்லைட்கள் கணக்கச்சிதமாக பொருத்தப்பட்டுள்ளன. முன்பக்க பம்பரின் பெரும்பகுதியை அளவில்-பெரிய ஏர்டேம் ஆக்கிரமித்துள்ளது. முன்பக்க பம்பர் அமைப்பில் ஃபாக் விளக்கிற்கான குழிகள், ஸ்போர்டியரான லோயர் லிப் உள்ளிட்டவை உள்ளன. மெஷின்-கட் இரட்டை-நிற அலாய் சக்கரங்களை புதிய யாரிஸ் பெற்றுவரலாம்.

மீண்டும் யாரிஸ் காரை இந்தியாவிற்கு கொண்டுவருமா டொயோட்டா? புதிய மாடல் அறிமுகமாகுது!!

வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் இருக்கும் யாரிஸ் மாடல் 2013இல் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் இந்த கார் மூன்று முறை அப்டேட் செய்யப்பட்டுள்ளது. ஆனால் புதிய தலைமுறை யாரிஸ் இனி தான் வெளியீடு செய்யப்பட இருக்கிறது. வெளிப்பக்கத்தை போல் உட்புறத்திலும் புதிய யாரிஸ் குறிப்பிடத்தக்க அப்டேட்களை பெற்றுள்ளதை காண முடிகிறது.

மீண்டும் யாரிஸ் காரை இந்தியாவிற்கு கொண்டுவருமா டொயோட்டா? புதிய மாடல் அறிமுகமாகுது!!

இந்த வகையில் பெரிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு, ரீடிசைனில் ஸ்டேரிங் சக்கரம், லக்சரி உள்ளமைவு மற்றும் கனெக்டட் கார் திறன்கள் உள்ளிட்டவற்றை புதிய யாரிஸ் பெற்றுள்ளது. மற்றப்படி இந்த காரில் வழங்கப்பட உள்ள என்ஜின் தேர்வுகள் குறித்து எந்த விபரத்தையும் டொயோட்டா தற்போதைக்கு வெளியிடவில்லை.

மீண்டும் யாரிஸ் காரை இந்தியாவிற்கு கொண்டுவருமா டொயோட்டா? புதிய மாடல் அறிமுகமாகுது!!

ஆனால் நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, புதிய யாரிஸ் ஆனது 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தேர்வு உடன் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே புதிய யாரிஸ் விற்பனை செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த 2023இல் விற்பனைக்கு வரலாம் என கூறப்படும் புதிய யாரிஸ் செடான் கார் ஸ்போர்ட், ஸ்மார்ட், பிரீமியம் மற்றும் பிரீமியம் லக்சரி வேரியண்ட்களில் விற்கப்படலாம்.

மீண்டும் யாரிஸ் காரை இந்தியாவிற்கு கொண்டுவருமா டொயோட்டா? புதிய மாடல் அறிமுகமாகுது!!

2023இல் ஜப்பான் உள்பட சில வெளிநாட்டு சந்தைகளில்தான் முதலாவதாக புதிய தலைமுறை யாரிஸ் செடான் அறிமுகப்படுத்தப்படுமே தவிர்த்து, இந்தியாவில் இந்த செடான் கார் எப்போதும் அறிமுகப்படுத்தப்படும் என்பது தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை. இந்தியாவில் டொயோட்டா நிறுவனம் அடுத்ததாக ஹைரைடர் அர்பன் க்ரூஸர் காம்பெக்ட் எஸ்யூவி காரை வருகிற ஆகஸ்ட் 16இல் அறிமுகம் செய்யவுள்ளது.

மீண்டும் யாரிஸ் காரை இந்தியாவிற்கு கொண்டுவருமா டொயோட்டா? புதிய மாடல் அறிமுகமாகுது!!

அந்த நாளில் இருந்து புதிய ஹைரைடர் அர்பன் க்ரூஸருக்கான முன்பதிவுகளை ஏற்கும் பணிகளை டொயோட்டா துவங்கும். புதிய ஹைரைடர் மாடல் பெங்களூருக்கு அருகே உள்ள டொயோட்டாவின் பிடாடி தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. புதிய ஹைரைடரின் அடிப்படையில் தான் மாருதி சுஸுகி தனது புதிய விட்டாரா மாடலை வடிவமைத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. புதிய விட்டாராவின் அறிமுகம் அடுத்த செப்டம்பர் மாதத்தில்.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
New gen toyota yaris teaser released could come to india know here details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X