ஹூண்டாயின் புதிய க்ரெட்டா நைட் எடிசன்!! விலைகள் இணையத்தில் வெளியாகின!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா நைட் (Hyundai Creta Knight) எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் குறித்த விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

ஹூண்டாயின் புதிய க்ரெட்டா நைட் எடிசன்!! விலைகள் இணையத்தில் வெளியாகின!

பிரபல தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் இந்திய சந்தையில் க்ரெட்டாவின் புதிய நைட் எடிசனை அறிமுகப்படுத்த அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த ஸ்பெஷல் க்ரெட்டா காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஹூண்டாயின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தின் வாயிலாக நமக்கு கிடைத்துள்ளன.

ஹூண்டாயின் புதிய க்ரெட்டா நைட் எடிசன்!! விலைகள் இணையத்தில் வெளியாகின!

இதன்படி பார்க்கும்போது, புதிய ஹூண்டாய் க்ரெட்டா நைட் எடிசன் ரூ.13.35 லட்சம் என்கிற ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதை அறிய முடிகிறது. எஸ்+ நைட் & எஸ்.எக்ஸ் (ஆப்ஷனல்) நைட் என்கிற இரு விதமான வேரியண்ட்களில் இந்த புதிய க்ரெட்டா ஸ்பெஷல் எடிசன் விற்பனை செய்யப்பட உள்ளது. இவை பெட்ரோல் & டீசல் என 2 விதமான என்ஜின் தேர்வுகளிலும் கிடைக்குமாம்.

ஹூண்டாயின் புதிய க்ரெட்டா நைட் எடிசன்!! விலைகள் இணையத்தில் வெளியாகின!

ரூ.13.35 லட்சம் என்பது பெட்ரோல் என்ஜினுடனான க்ரெட்டா எஸ்+ நைட் எடிசனின் விலை ஆகும். இதே வேரியண்ட்டின் விலை டீசல் என்ஜின் உடன் ரூ.14.31 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவே எஸ்.எக்ஸ்(ஆப்ஷனல்) நைட் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.17.06 லட்சம் (பெட்ரோல்) மற்றும் ரூ.18.02 லட்சம் (டீசல்) ஆக நிர்ணயிக்கப்பட உள்ளன.

ஹூண்டாயின் புதிய க்ரெட்டா நைட் எடிசன்!! விலைகள் இணையத்தில் வெளியாகின!

தோற்றத்தை பொறுத்தவரையில், புதிய க்ரெட்டா நைட் எடிசன் பெயருக்கேற்ப அடர் கருப்பு நிறத்தில் வழங்கப்பட உள்ளது. அதேநேரம் வழக்கமான க்ரெட்டா வேரியண்ட்களில் இருந்து வேறுப்படும் விதமாக சில காஸ்மெட்டிக் அப்டேட்களையும் இதில் எதிர்பார்க்கலாம். இந்த வகையில் சிவப்பு உள்ளீடுகளுடன் பளபளப்பான கருப்பு நிறத்தில் முன்பக்க க்ரில் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாயின் புதிய க்ரெட்டா நைட் எடிசன்!! விலைகள் இணையத்தில் வெளியாகின!

அதேபோல் காரின் முன்பக்க & பின்பக்க சறுக்கு தட்டுகளும் பளபளப்பான கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டு வழங்கப்படலாம். இவை மட்டுமின்றி, புதிய க்ரெட்டா நைட் எடிசனின் வெளிப்பக்கத்தில் பக்கவாட்டு சில்கள், மேற்கூரை தண்டவாள கம்பிகள், பின்புறத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள் மற்றும் சி-பில்லர் உள்ளிட்டவையும் மேற்கூறப்பட்டவற்றிற்கு இணையான கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட உள்ளன.

ஹூண்டாயின் புதிய க்ரெட்டா நைட் எடிசன்!! விலைகள் இணையத்தில் வெளியாகின!

16-இன்ச்/ 17-இன்ச் (வேரியண்ட்டை பொறுத்து) அலாய் சக்கரங்கள் 'டார்க் மெட்டல்' நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டு பொருத்தப்பட உள்ளன. இதற்கேற்ப முன் சக்கரங்களில் ப்ரேக் காலிபர்கள் பளிச்சிடும் சிவப்பு நிறத்தில் வழங்கப்பட உள்ளன. மேலும், ஸ்டாண்டர்ட் வேரியண்ட்களில் இருந்து வேறுப்படுத்தி காட்டும் விதமாக காரை சுற்றிலும் 'நைட் எடிசன்' முத்திரை பொறிக்கப்படும்.

ஹூண்டாயின் புதிய க்ரெட்டா நைட் எடிசன்!! விலைகள் இணையத்தில் வெளியாகின!

வெளிப்புறத்திற்கு ஏற்ப இந்த ஸ்பெஷல் எடிசன் காரின் உட்புற கேபினும் முழுவதுமாக கருப்பு நிறத்தில் எவரொருவரையும் கவர்ந்து இழுக்கக்கூடியதாக கொடுக்கப்பட உள்ளது. இதன்படி, மைய கன்சோல் பகுதியும் பளபளப்பான கருப்பு நிறத்தில் வழங்கப்படவுள்ளது. அதேநேரம் ஏசி துளைகளில் வண்ண நிற தொடுதல்களையும் எதிர்பார்க்கலாம். அதேபோல் இருக்கை அமைப்பு மற்றும் ஸ்டேரிங் சக்கரத்திலும் தனித்து தெரியும் விதமாக மாற்று நிறத்தில் குழாய் (அ) தையல்கள் கொடுக்கப்படலாம்.

ஹூண்டாயின் புதிய க்ரெட்டா நைட் எடிசன்!! விலைகள் இணையத்தில் வெளியாகின!

க்ரெட்டாவின் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்கள் தற்சமயம் 1.5 லிட்டர் பெட்ரோல் & டீசல், 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் என 3 விதமான என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் புதிய நைட் எடிசன்கள் இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் & டீசல் என்ஜின் தேர்வுகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 6,300 ஆர்பிஎம்-இல் 113 பிஎச்பி மற்றும் 4,500 ஆர்பிஎம்-இல் 144 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 6, 2022, 14:39 [IST]
English summary
New hyundai creta knight edition prices revealed specs image details
மேலும்... #ஹூண்டாய் #hyundai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+