ஷோரூம்களுக்கு வர தொடங்கியது மாருதி சுஸுகி ஆல்டோ... வாங்குற பிளான் இருந்தா இப்பவே போய் பாத்துடுங்க!

நாளை மறு நாள் விற்பனைக்கு வர இருப்பதை முன்னிட்டு புதிய மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார்கள் இப்போதே ஷோரூம்களுக்கு வர தொடங்கிவிட்டன.

Recommended Video

Maruti Ertiga CNG TAMIL Review | Performance, Mileage, Seats, Fuel Tank Capacity, Boot Space

இந்த நிலையில், ஆல்டோ கே10 கார் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்டின் வால்கரவுண்ட் வீடியோவும் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஷோரூம்களுக்கு வர தொடங்கியது மாருதி சுஸுகி ஆல்டோ... வாங்குற பிளான் இருந்தா இப்பவே போய் பாத்துடுங்க!

மாருதி நிறுவனம் ஆல்டோ கே10 ஹேட்ச்பேக் காரை வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த காரின் அதிகாரப்பூர்வ வருகை வரும் 18 ஆம் தேதி அரங்கேற உள்ளது. சிறிய குடும்பத்தினர் மற்றும் பட்ஜெட் கார் விரும்பிகளைக் கவரும் வகையில் இந்த வாகனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இக்காரின் வருகைக்கு இன்னும் ஒரு சில தினங்களே இருப்பதனால் தற்போது விற்பனையாளர்களுக்கு காரை அனுப்பி வைக்கும் பணியில் மாருதி சுஸுகி களமிறங்கியிருக்கின்றது.

ஷோரூம்களுக்கு வர தொடங்கியது மாருதி சுஸுகி ஆல்டோ... வாங்குற பிளான் இருந்தா இப்பவே போய் பாத்துடுங்க!

அந்தவகையில், மாருதி கார் விற்பனையாளர் ஒருவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாருதி ஆல்டோ கே10 காரின் வால்கரவுண்ட் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இவ்வீடியோவின் வாயிலாக ஆல்டோ கே10 கார் முழுமையாக காட்சியளித்திருக்கின்றது. எந்த மறைப்புகளும் இல்லாமல் மிக தெளிவாக அவ்வாகனம் காட்சியளிக்கின்றது. அனைத்தும் ஸ்டாக்கிற்காக அனுப்பி வைக்கப்பட்ட ஆல்டோ கே10 கார்களாகும்.

ஷோரூம்களுக்கு வர தொடங்கியது மாருதி சுஸுகி ஆல்டோ... வாங்குற பிளான் இருந்தா இப்பவே போய் பாத்துடுங்க!

முற்றிலும் புதுமையான தோற்றத்தில் ஆல்டோ கே10 உருவாகியிருப்பதை நிறுவனம் கூறி வந்தாலும், இந்த வீடியோ வாயிலாகவே அது நமக்கு தெளிவாக தெரிய வந்திருக்கின்றது. அதாவது, என்ன மாதிரியான மாற்றங்களுடன் ஆல்டோ கே10 கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது என்பதை இந்த வீடியோ நமக்கு தெரியப்படுத்தியுள்ளது. வீடியோவில் காட்சிக்குள்ளாகியிருப்பது ஆல்டோ கே10இன் பேஸ் மாடலாகும்.

ஷோரூம்களுக்கு வர தொடங்கியது மாருதி சுஸுகி ஆல்டோ... வாங்குற பிளான் இருந்தா இப்பவே போய் பாத்துடுங்க!

அதாவது, பெரியளவில் சிறப்பம்சங்கள் ஏதுமில்லாத ஆரம்ப நிலை வேரியண்டே வீடியோவில் காட்சிக்குள்ளாகியிருக்கின்றது. டிசைனைப் பொருத்தவரை அனைத்து வேரியண்டுகளும் ஒரே மாதிரியானதாக இருந்தாலும், சிறப்பம்சங்கள் விஷயத்தில் ஒவ்வொரு வேரியண்டும் தனித்துவமானவையாகக் காட்சியளிக்கின்றன. எந்தெந்த வேரியண்டில் என்ன மாதிரியான சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன என்பது பற்றிய விபரத்தை அடுத்து வரும் தினங்களில் பார்க்கலாம்.

ஷோரூம்களுக்கு வர தொடங்கியது மாருதி சுஸுகி ஆல்டோ... வாங்குற பிளான் இருந்தா இப்பவே போய் பாத்துடுங்க!

அதற்குமுன்னதாக ஆரம்ப நிலை வேரியண்டில் இடம் பெற்றிருக்கும் அம்சங்கள் பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம், வாங்க. ஆல்டோ கே10 காரின் பேஸ் வேரியண்டில் ஸ்டீல் ரிம் வீல் கேப்கள் அற்ற நிலையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஸ்டீல் ரிம்களுக்கு சில்வர் நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது. டர்ன் இன்டிகேட்டர்கள் முன்பக்க ஃபெண்டரில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

ஷோரூம்களுக்கு வர தொடங்கியது மாருதி சுஸுகி ஆல்டோ... வாங்குற பிளான் இருந்தா இப்பவே போய் பாத்துடுங்க!

அதேவேலையில் உடல் நிறத்திலான ஓஆர்விஎம் மற்றும் கதவு கை பிடிகள் வழங்கப்படவில்லை. இந்த கைப் பிடிகள் செலிரியோ காரில் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் போலவே காட்சியளிக்கின்றது. காரின் பின் பக்கத்தில் ஆல்டோ கே10 எனும் பேட்ஜ் பொருத்தப்பட்டுள்ளது. அந்த பேட்ஜ் காரின் டெயில் கேட்டிலேயே அது ஒட்டப்பட்டுள்ளது.

ஷோரூம்களுக்கு வர தொடங்கியது மாருதி சுஸுகி ஆல்டோ... வாங்குற பிளான் இருந்தா இப்பவே போய் பாத்துடுங்க!

காரின் வெளிப்புறத்தைப் போலவே உட்புறமும் வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால், முழுமையாக காட்சிப்படுத்தப்படவில்லை. ஆகையால், காரின் உட்பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் அம்சங்கள் பற்றிய விபரத்தை முழுமையாக கூற முடியவில்லை. அதேவேலையில், இது பேஸ் வேரியண்ட் என்பதனால் கணிசமான அளவிலேயே சிறப்பம்சங்கள் இடம் பெற்றிருக்கும்.

ஷோரூம்களுக்கு வர தொடங்கியது மாருதி சுஸுகி ஆல்டோ... வாங்குற பிளான் இருந்தா இப்பவே போய் பாத்துடுங்க!

அந்தவகையில், ஏசி, ஏர் பேக் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகிய அம்சங்கள் கே10 ஆல்டோவில் இடம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரத்தில், பவர் விண்டோ மற்றும் பவர் ஸ்டியரிங் போன்றவை அதில் இடம் பெற்றிருக்காது. மாருதி நிறுவனம் ஆல்டோ கே10 காரில் எஸ்-பிரஸ்ஸோவில் இடம் பெற்றிருக்கக் கூடிய அதே மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, 1.0 லிட்டர் பெட்ரோல் மோட்டாரே ஆல்டோ கே10இல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 66 பிஎச்பி பவரையும், 89 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி ஆகிய இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகள் இந்த மோட்டாருடன் எதிர்பார்க்கப்படுகின்றது. மாருதி சுஸுகி நிறுவனம் மிக சமீபத்தில் அதன் புகழ்பெற்ற ஸ்விஃப்ட் கார் மாடலின் சிஎன்ஜி வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதேபோல், விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஆல்டோ கே10 காரிலும் சிஎன்ஜி எஞ்ஜின் தேர்வு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Article Published On: Tuesday, August 16, 2022, 17:45 [IST]
English summary
New maruti alto k10 reaches dealers showroom ahead of official launch
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+