புதிய மாருதி எக்ஸ்.எல்6 vs கியா கேரன்ஸ்!! எந்த எம்பிவி காரை தேர்வு செய்யலாம்? வேரியண்ட்கள் வாரியாக ஒப்பீடு!

புதிய எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் காரை தொடர்ந்து மாருதி சுஸுகி நிறுவனம் எக்ஸ்.எல்6 மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. வெளிப்பக்கம் மற்றும் உட்பக்கம் என இரு பக்கங்களிலும் கவனிக்கத்தக்க மாற்றங்களை பெற்றுவந்துள்ள 2022 எக்ஸ்.எல்6 மாடல் அதேநேரம் அதன் முந்தைய தலைமுறையை காட்டிலும் கூடுதல் தொழிற்நுட்ப வசதிகள் சிலவற்றையும் பெற்றுள்ளது.

புதிய மாருதி எக்ஸ்.எல்6 vs கியா கேரன்ஸ்!! எந்த எம்பிவி காரை தேர்வு செய்யலாம்? வேரியண்ட்கள் வாரியாக ஒப்பீடு!

விற்பனையில் மாருதி எக்ஸ்.எல்6 மாடலுக்கு கியாவின் கேரன்ஸ் எம்பிவி நேரடி போட்டி மாடலாக விளங்குகிறது. கியா நிறுவனமும் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கேரன்ஸ் எம்பிவி காரை கடந்த பிப்ரவரியில் அறிமுகப்படுத்தியது. இவை இரண்டிற்கும் இடையேயான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை வேரியண்ட்கள் வாரியாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய மாருதி எக்ஸ்.எல்6 vs கியா கேரன்ஸ்!! எந்த எம்பிவி காரை தேர்வு செய்யலாம்? வேரியண்ட்கள் வாரியாக ஒப்பீடு!

முன்பு 2 வேரியண்ட்களில் விற்கப்பட்டு வந்த எக்ஸ்.எல்6-இன் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் ஸீட்டா, ஆல்ஃபா & ஆல்ஃபா ப்ளஸ் என 3 விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. எக்ஸ்.எல்6-ஐ போலவே கியா கேரன்ஸும் பிரெஸ்டீஜ், பிரெஸ்டீஜ் ப்ளஸ் மற்றும் லக்சரி என 3 விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்த படுகிறது.

Petrol
XL6 XL6 1.5 MT Carens 1.5 MT Carens 1.4 MT Carens
Zeta ₹11.29 Lakh ₹9.59 Lakh ₹11.2 Lakh Premium
Alpha ₹12.29 Lakh ₹10.7 Lakh ₹12.4 Lakh Prestige
Alpha+ ₹12.89 Lakh NA ₹13.9 Lakh Prestige Plus
Alpha+ DT ₹13.05 Lakh NA ₹15.3 Lakh Luxury
₹16.55 Lakh Luxury Plus
Petrol
XL6 XL6 1.5 AT Carens 1.4 DCT Carens
Zeta ₹12.79 Lakh NA Premium
Alpha ₹13.79 Lakh NA Prestige
Alpha+ ₹14.39 Lakh ₹14.8 Lakh Prestige Plus
Alpha+ DT ₹14.55 Lakh ₹17.45 Lakh Luxury Plus
Diesel
Carens 1.5 MT Carens 1.5 AT Carens
₹11.4 Lakh NA Premium
₹12.6 Lakh NA Prestige
₹14.1 Lakh NA Prestige Plus
₹15.5 Lakh NA Luxury
₹16.75 Lakh ₹17.65 Lakh Luxury Plus
புதிய மாருதி எக்ஸ்.எல்6 vs கியா கேரன்ஸ்!! எந்த எம்பிவி காரை தேர்வு செய்யலாம்? வேரியண்ட்கள் வாரியாக ஒப்பீடு!

2022 எக்ஸ்.எல்6 ஸீட்டா vs கேரன்ஸ் பிரெஸ்டீஜ்

இந்த இரு எம்பிவி கார்களின் ஆரம்ப நிலை வேரியண்ட்கள் இரண்டிலும் பொதுவான அம்சங்களாக தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு, 6-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், குரல் கட்டளைகள், பொத்தான் கண்ட்ரோல்களுடன் ஸ்டேரிங் சக்கரம், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் & பயணிகள் இருக்கை மற்றும் மேற்கூரையில் ஏசி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

புதிய மாருதி எக்ஸ்.எல்6 vs கியா கேரன்ஸ்!! எந்த எம்பிவி காரை தேர்வு செய்யலாம்? வேரியண்ட்கள் வாரியாக ஒப்பீடு!

அதேநேரம் எக்ஸ்.எல்6-இன் ஸீட்டா வேரியண்ட்டில் கூடுதலாக எல்இடி ஹெட்லைட்கள் & டெயில்லைட்கள், எல்இடி டிஆர்எல்-கள் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்றவையும், கேரன்ஸ் பிரெஸ்டீஜ் வேரியண்ட்டில் கூடுதலாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், 3வது வரிசையிலும் ஏசி துளைகள், வயர் இல்லா ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே மற்றும் லெதர் இருக்கைகள் போன்றவையும் கொடுக்கப்படுகின்றன.

புதிய மாருதி எக்ஸ்.எல்6 vs கியா கேரன்ஸ்!! எந்த எம்பிவி காரை தேர்வு செய்யலாம்? வேரியண்ட்கள் வாரியாக ஒப்பீடு!

கேரன்ஸின் ஆரம்ப நிலை வேரியண்ட்டில் வழங்கப்படும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி பிரோகிராம், ஹில் ஹோல்ட் கண்ட்ரோல், ஹில் டெசண்ட் கண்ட்ரோல் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா உள்ளிட்டவை 2022 எக்ஸ்.எல்6 காரின் ஸீட்டா வேரியண்ட்டில் வழங்கப்படவில்லை. ஆனால் கேரன்ஸ் பிரெஸ்டீஜ் வேரியண்ட்டை காட்டிலும் எக்ஸ்.எல்6 ஸீட்டா வேரியண்ட்டின் விலை கிட்டத்தட்ட ரூ.60,000 வரையில் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய மாருதி எக்ஸ்.எல்6 vs கியா கேரன்ஸ்!! எந்த எம்பிவி காரை தேர்வு செய்யலாம்? வேரியண்ட்கள் வாரியாக ஒப்பீடு!

எக்ஸ்.எல்6 ஆல்ஃபா vs கேரன்ஸ் பிரெஸ்டீஜ் ப்ளஸ்

இந்த மத்திய வேரியண்ட்கள் இரண்டிலும் எல்இடி ஹெட்லைட்கள் & டெயில்லைட்கள், எல்இடி டிஆர்எல்-கள் மற்றும் ஆட்டோ க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா போன்றவை பொதுவான அம்சங்களாக கொடுக்கப்பட்டாலும், எக்ஸ்.எல்6 மாடலின் ஆல்ஃபா வேரியண்ட் வயர் இல்லா ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு வசதியை இஎஸ்பி, ஹில் ஹோல்ட் கண்ட்ரோல், ஹில் டெசண்ட் கண்ட்ரோல் மற்றும் டயரின் அழுத்தத்தை கண்காணிக்கும் அமைப்பு உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடன் கொண்டிருக்கவில்லை.

புதிய மாருதி எக்ஸ்.எல்6 vs கியா கேரன்ஸ்!! எந்த எம்பிவி காரை தேர்வு செய்யலாம்? வேரியண்ட்கள் வாரியாக ஒப்பீடு!

இதன் காரணமாகவே எக்ஸ்.எல்6 ஆல்ஃபா வேரியண்ட்டிற்கும், கேரன்ஸ் பிரெஸ்டீஜ் ப்ளஸ் வேரியண்ட்டிற்கும் இடையே விலையில் பெரிய வித்தியாசம் உள்ளது என நினைக்கிறோம். இவை இரண்டிற்கும் இடையே ரூ.1.60 லட்சம் வரையில் விலையில் வித்தியாசம் உள்ளது. அதாவது எக்ஸ்.எல்6 -இன் ஆல்ஃபா வேரியண்ட்டின் விலை கேரன்ஸ் பிரெஸ்டீஜ் ப்ளஸ்-ஐ காட்டிலும் ரூ.1.60 லட்சம் அளவில் குறைவான விலையை பெற்றுள்ளது.

புதிய மாருதி எக்ஸ்.எல்6 vs கியா கேரன்ஸ்!! எந்த எம்பிவி காரை தேர்வு செய்யலாம்? வேரியண்ட்கள் வாரியாக ஒப்பீடு!

எக்ஸ்.எல்6 ஆல்ஃபா ப்ளஸ் vs கேரன்ஸ் லக்சரி

இவை இரண்டிலும் இணைப்பு கார் தொழிற்நுட்ப வசதிகள் முறையே சுஸுகி கனெக்ட் & யுவோ கனெக்ட் என்கிற பெயர்களில் வழங்கப்பட்டுள்ளன. எக்ஸ்.எல்6 ஆல்ஃபா ப்ளஸ் வேரியண்ட்டின் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் பெடல் ஷிஃப்டர்களையும் பெறுகின்றன. விலையை பொறுத்தவரையில், இவை இரண்டிற்கும் இடையே ரூ.2.40 லட்சம் வரையில் வித்தியாசம் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, April 22, 2022, 11:25 [IST]
English summary
New maruti xl6 vs kia carens variants comparision
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+