அடேங்கப்பா... 5ஜி இண்டர்நெட் வசதி எல்லாம் இருக்காம்!! எம்ஜியின் புதிய முலன் எலக்ட்ரிக் கார்!

5ஜி இணைய வசதி உடன் புதிய எம்ஜி முலன் எலக்ட்ரிக் கார் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தம் புதிய எம்ஜி எலக்ட்ரிக் காரை பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அடேங்கப்பா... 5ஜி இண்டர்நெட் வசதி எல்லாம் இருக்காம்!! எம்ஜியின் புதிய முலன் எலக்ட்ரிக் கார்!

எம்ஜி மோட்டார் நிறுவனம் அதன் உலகளாவிய தயாரிப்புகளை புதிய மாடல்கள் மூலமாக விரிவுப்படுத்துவதில் தீவிரமாக உள்ளது. குறிப்பாக, உலகம் முழுவதிலும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை வளர்ச்சி கண்டுவருவதால், புதிய புதிய எலக்ட்ரிக் கார்களை அடுத்தடுத்ததாக களமிறக்க எம்ஜி முனைப்புடன் உள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்கள் பெருகிவரும் ஐரோப்பிய சந்தையில் நடப்பு 2022ஆம் ஆண்டில் மொத்தம் 1.2 லட்ச கார்களை விற்பனை செய்வதை எம்ஜி இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு வெளிப்பாடே, புதிய எம்ஜி முலன் எலக்ட்ரிக் காரின் வெளியீடு ஆகும். நெபுலா எலக்ட்ரிக் இயக்குத்தளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் கார் மொத்தம் 5 கதவுகளை கொண்டது.

அடேங்கப்பா... 5ஜி இண்டர்நெட் வசதி எல்லாம் இருக்காம்!! எம்ஜியின் புதிய முலன் எலக்ட்ரிக் கார்!

மேலும் இதுவே எம்ஜி மோட்டாரின் ஐரோப்பாவிற்கான உலகளாவிய கார் ஆகும். முலன் என்பது சீன சந்தையில் இந்த எலக்ட்ரிக் காருக்கு எம்ஜி வைத்துள்ள பெயர் ஆகும். மற்ற ஏற்றுமதி சந்தைகளில் எம்ஜி 4 என்கிற பெயரில் இந்த மாடல் விற்பனை செய்யப்பட உள்ளது. 4,300மிமீ நீளம் கொண்டதாக எம்ஜி முலன் விளங்கினாலும், நிஸான் லீஃப் உடன் ஒப்பிடுகையில் சற்று அளவில் சிறியது ஆகும்.

அடேங்கப்பா... 5ஜி இண்டர்நெட் வசதி எல்லாம் இருக்காம்!! எம்ஜியின் புதிய முலன் எலக்ட்ரிக் கார்!

0-100kmph வேகத்தை எம்ஜியின் இந்த புதிய எலக்ட்ரிக் கார் வெறும் 4 வினாடிகளில் எட்டிவிடக்கூடியது. தோற்றத்தை பொறுத்தவரையில், முன்பக்கத்தை எம்ஜி முலன் கூர்மையானதாகவும், ஸ்டைலிஷானதாகவும் கொண்டுள்ளது. இதன் வெளிப்பக்க சிறப்பம்சங்களாக, எல்இடி ஹெட்லைட் & டெயில்லைட், ஸ்போர்டியான பின்பக்க ஸ்பாய்லர் மற்றும் பனோராமிக் சன்ரூஃப்-ஐ கூறலாம்.

கருப்பு நிற பேனல்கள் காரை சுற்றிலும் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக முன்பக்கத்தில் சற்று அதிகமாகவே தென்படுகிறது. முன்பக்கத்தில் எம்ஜி லோகோ ஆனது க்ரில் அமைப்பின் மேற்பகுதியில், இரு ஹெட்லைட்களுக்கு சரியாக மத்தியில் வழங்கப்பட்டுள்ளது. அதிக அடர்த்தியான லித்தியம் பேட்டரி அமைப்பு மெல்லிய வடிவில் வழங்கப்பட்டுள்ளதால், உட்புற கேபினில் கூடுதல் இடவசதி கிடைக்கிறது.

அடேங்கப்பா... 5ஜி இண்டர்நெட் வசதி எல்லாம் இருக்காம்!! எம்ஜியின் புதிய முலன் எலக்ட்ரிக் கார்!

ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பேட்டரி தொகுப்பு ஆனது பூஜ்ஜிய வெப்ப உமிழ்வை கொண்டுள்ளதால், தீப்பிடிப்பிற்கான அபாயம் முற்றிலுமாக இல்லை. நிலை-3 தானியங்கி ஓட்டுனர் உதவி வசதிகளை பெற்றுள்ள முலனில் 5ஜி இணைப்புடன் ஸ்மார்ட் காக்பிட் இடம்பெற்றுள்ளது. மேம்படுத்தப்பட்ட ட்ரைவிங் கண்ட்ரோலிற்காக, பின்பக்க சஸ்பென்ஷன் அமைப்பு ஆனது மிகவும் உள்நோக்கி வழங்கப்பட்டுள்ளது.

அடேங்கப்பா... 5ஜி இண்டர்நெட் வசதி எல்லாம் இருக்காம்!! எம்ஜியின் புதிய முலன் எலக்ட்ரிக் கார்!

இந்திய சந்தையிலும் விற்பனையில் உள்ள எம்ஜி இசட்.எஸ் இவி ஆனது வெளிநாட்டு சந்தைகளில் முன் சக்கரங்களின் மூலமாக இயங்கக்கூடியதாக உள்ளது. ஆனால் முலன்/ எம்ஜி 4 ஆனது பின் சக்கரங்களின் வாயிலாக இயங்கும். மற்றப்படி முலனில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எலக்ட்ரிக் மோட்டார் குறித்து தற்போதைக்கு எந்த தகவலையும் எம்ஜி வெளியிடவில்லை.

ஐரோப்பாவில் விற்பனையில் எம்ஜி முலனுக்கு டெஸ்லாவின் மத்திய நிலை எலக்ட்ரிக் கார்கள் போட்டியாக விளங்கும் என கருதப்படுகிறது. நெபுலா இயக்குத்தளம் ஆனது முற்றிலுமாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ப்ளாட்ஃபாரமாக விளங்குகிறது. இது புதிய பேட்டரி அமைப்புகளுக்கும், வாகன ப்ளாட்ஃபாரங்களுக்கும் வழிவகுப்பதாகவும், மேலும் இதன் அடிப்படையில் உருவாக்கப்படும் எலக்ட்ரிக் கார்களில் அதிநவீன வாகன தொழிற்நுட்பத்தை புகுத்த முடிவதாகவும் சீனாவின் மிக பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான SAIC கூறுகிறது.

அடேங்கப்பா... 5ஜி இண்டர்நெட் வசதி எல்லாம் இருக்காம்!! எம்ஜியின் புதிய முலன் எலக்ட்ரிக் கார்!

இந்திய சந்தையை பொறுத்தவரையில் 2019இல் ஹெக்டர் மாடலின் மூலம் நுழைந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் தற்போதைக்கு அதன் ஒரே எலக்ட்ரிக் காராக இசட்.எஸ் இவி-ஐ விற்பனை செய்து வருகிறது. கடந்த 2021இல் மொத்தம் 2,800 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள எம்ஜி இசட்.எஸ் இவி மாடலுக்கு சமீபத்தில்தான் எம்ஜி நிறுவனம் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை வழங்கி இருந்தது. கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார் 250 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
New mg mulan electric car debuts in europe
Story first published: Thursday, June 9, 2022, 11:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X