புதிய சோனி 7-இருக்கை எலக்ட்ரிக் எஸ்யூவி கார் கான்செப்ட் வெளியீடு!! டெஸ்லாவிற்கு நேரடி போட்டி தயார்!

எதிர்கால போக்குவரத்து எலக்ட்ரிக்கை சார்ந்தது தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மேலும் இவி பயன்பாடு பல விதமான புதிய நிறுவனங்களுக்கு ஆட்டோமொபைல் துறையில் நுழைவதற்கு வழிவகை செய்துள்ளது. அதாவது எலக்ட்ரானிக் பாகங்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமாக இருந்தாலே போதும், இவி தயாரிப்பில் இறங்கலாம் என்கிற முடிவில்தான் பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உள்ளன.

புதிய சோனி 7-இருக்கை எலக்ட்ரிக் எஸ்யூவி கார் கான்செப்ட் வெளியீடு!! டெஸ்லாவிற்கு நேரடி போட்டி தயார்!

இந்த வகையில் ஆட்டோமொபைல் துறையில் கால் பதிக்கும் திட்டத்தில் இருக்கும் பிரபலமான எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனம் சோனி கார்ப்பிரேஷன் ஆகும். ஜப்பானை சேர்ந்த சோனி அதன் முதல் எலக்ட்ரிக் வாகனமாக விஷன்-எஸ் கான்செப்ட்டை கடந்த 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெளியீடு செய்தது.

புதிய சோனி 7-இருக்கை எலக்ட்ரிக் எஸ்யூவி கார் கான்செப்ட் வெளியீடு!! டெஸ்லாவிற்கு நேரடி போட்டி தயார்!

எலக்ட்ரிக் செடான் காருக்கான கான்செப்ட்டான விஷன்-எஸ் 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் லாஸ் வேகாஸில் நடைபெற்ற நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. அதேபோல் தற்போது நடைபெற்றுவரும் 2022 நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில் இரண்டாவது கான்செப்ட் எலக்ட்ரிக் காராக விஷன்-எஸ் 02 சோனி நிறுவனத்தால் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

புதிய சோனி 7-இருக்கை எலக்ட்ரிக் எஸ்யூவி கார் கான்செப்ட் வெளியீடு!! டெஸ்லாவிற்கு நேரடி போட்டி தயார்!

முந்தைய விஷன்-எஸ் ஆனது எலக்ட்ரிக் செடான் காருக்கான கான்செப்ட் என்றால், விஷன்-எஸ் 02 ஆனது எலக்ட்ரிக் எஸ்யூவி காருக்கான கான்செப்ட் ஆகும். இவை இரண்டும் தற்போது 2022 நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதில் விஷன்-எஸ் மாடலை சட்டப்பூர்வமாக அனுமதி பெற்று சாலை சோதனை ஓட்டங்களில் உட்படுத்த சோனி ஆரம்பித்துவிட்டது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவினை சமீபத்தில் நமது ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் செய்திதளத்தில் கூட பார்த்திருந்தோம்.

புதிய சோனி 7-இருக்கை எலக்ட்ரிக் எஸ்யூவி கார் கான்செப்ட் வெளியீடு!! டெஸ்லாவிற்கு நேரடி போட்டி தயார்!

இருப்பினும் இதனை அடிப்படையாக கொண்ட எலக்ட்ரிக் செடான் கார் முதலாவதாக உருவாக்கப்பட போவதில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் எஸ்யூவி கார்களுக்கான சந்தையே தற்சமயம் உலகம் முழுவதிலும் விரிவடைந்து வருவதால், விஷன்-எஸ் 02 கான்செப்ட்டின் அடிப்படையிலான எலக்ட்ரிக் எஸ்யூவி காரையே முதலாவதாக வரும் ஆண்டுகளில் உருவாக்க சோனி திட்டமிட்டுள்ளதாம்.

புதிய சோனி 7-இருக்கை எலக்ட்ரிக் எஸ்யூவி கார் கான்செப்ட் வெளியீடு!! டெஸ்லாவிற்கு நேரடி போட்டி தயார்!

விஷன்-எஸ் கான்செப்ட்டை வடிவமைக்க பயன்படுத்தப்பட்ட அதே ப்ளாட்ஃபாரத்தில் தான் புதிய விஷன்-எஸ் 02 கான்செப்ட்டையும் சோனி வடிவமைத்துள்ளது. இந்த ப்ளாட்ஃபாரத்தின் மூலமாக குறைந்தப்பட்சமாக 4 இருக்கைகளை கொண்ட காரில் இருந்து அதிகப்பட்சமாக 7 இருக்கைகள் கொண்ட கார் வரையில் உருவாக்க முடியும் என்கிறது சோனி. விஷன்-எஸ் 02 கான்செப்ட் மாடலின் நீளம் 4,895மிமீ, அகலம் 1,930மிமீ மற்றும் உயரம் 1,651மிமீ ஆகும்.

புதிய சோனி 7-இருக்கை எலக்ட்ரிக் எஸ்யூவி கார் கான்செப்ட் வெளியீடு!! டெஸ்லாவிற்கு நேரடி போட்டி தயார்!

இதனால் இந்த கான்செப்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்படும் சோனி எலக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு டெஸ்லா மாடல் ஒய் நேரடி போட்டி மாடலாக விளங்கும். இந்த கான்செப்ட் மாடலின் எடை 2,480 கிலோ ஆக உள்ளது. வெளிப்புற தோற்றத்தை பொறுத்தவரையில், விஷன்-எஸ் 02 மிகவும் எதிர்காலத்திற்கான ஸ்டைலினை கொண்டுள்ளது. இதில் இருந்து விற்பனைக்கான எலக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் உருவாக்கும் காலத்தில், அவை இன்னமும் மாடர்னாக கொண்டுவரப்படலாம்.

புதிய சோனி 7-இருக்கை எலக்ட்ரிக் எஸ்யூவி கார் கான்செப்ட் வெளியீடு!! டெஸ்லாவிற்கு நேரடி போட்டி தயார்!

முன்பக்கத்தில் மூடப்பட்ட க்ரில் மற்றும் கண் வடிவிலான ஹெட்லைட்கள் இந்த சோனி கான்செப்ட் வாகனத்திற்கு நேர்த்தியான தோற்றத்தினை வழங்குகின்றன. செதுக்கப்பட்டது போன்றதான பொனெட், அகலமான காற்று ஏற்பான் மற்றும் இரட்டை-நிற பெயிண்ட் சோனி விஷன்-எஸ் 02 கான்செப்ட்டின் வெளிப்புற சிறப்பம்சங்களாகும். பக்கவாட்டில் 20-இன்ச் அலாய் சக்கரங்களின் டிசைன் நம்மை வசீகரிக்கிறது.

புதிய சோனி 7-இருக்கை எலக்ட்ரிக் எஸ்யூவி கார் கான்செப்ட் வெளியீடு!! டெஸ்லாவிற்கு நேரடி போட்டி தயார்!

காரின் B-பில்லர்கள் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டிருக்க, பறித்து இழுக்கக்கூடிய கதவு கைப்பிடிகளை இந்த கான்செப்ட்டின் பக்கவாட்டில் காண முடிகிறது. விஷன்-எஸ் 02 கான்செப்ட் வாகனத்தில் பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகள் எதுவும் கிடையாது. அதற்கு பதிலாக கேமிரா லென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்பக்கத்தில் சாய்வான மேற்கூரைக்கு ஏற்ப பின்பக்க கண்ணாடி அளவில் சற்று பெரியதாக வழங்கப்பட்டுள்ளது.

புதிய சோனி 7-இருக்கை எலக்ட்ரிக் எஸ்யூவி கார் கான்செப்ட் வெளியீடு!! டெஸ்லாவிற்கு நேரடி போட்டி தயார்!

எல்இடி டெயில்லேம்ப் ஆனது காரின் டெயில்கேட்டின் அகலத்திற்கு வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக சோனி விஷன்-எஸ் 02 கான்செப்ட் உங்களில் சிலருக்கு சில போர்ஷே கார்களை நினைவூட்டலாம். உட்புறம் இந்த கான்செப்ட்டில் மிகவும் எளிமையானதாக காட்சியளிக்கிறது. இருப்பினும் எலக்ட்ரானிக் பாகங்களை தயாரிப்பதில் சோனி அனுபவமிக்கது என்பதால், இதன் கேபினில் பல்வேறான தொழிற்நுட்பங்களை எதிர்பார்க்கலாம்.

புதிய சோனி 7-இருக்கை எலக்ட்ரிக் எஸ்யூவி கார் கான்செப்ட் வெளியீடு!! டெஸ்லாவிற்கு நேரடி போட்டி தயார்!

இந்த கான்செப்ட் வாகனத்தின் டேஸ்போர்டு முழுவதுமாக, மொத்தம் 3 திரைகளை கொண்டுள்ளது. இவற்றில் ஒன்று பிளே ஸ்டேஷன் விளையாட்டுகளுக்கானதாக இருக்கும் என கூறப்படுகிறது. இயக்க ஆற்றலை வழங்க விஷன்-எஸ் 02 கான்செப்ட்டில் இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் முன்பக்கத்தில் ஒன்று, பின்பக்கத்தில் ஒன்று என வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் அதிகப்பட்சமாக 536 பிஎச்பி ஆற்றலை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
New sony 7 seater electric suv concept debuts at 2022 ces
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X