அறிமுகத்திற்கு தயாராகும் 2022 டொயோட்டா க்ளான்ஸா!! இரட்டை-ஜெட், விவிடி என்ஜினை பெற்றுவருகிறது...!

புதிய மாருதி சுஸுகி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரை தொடர்ந்து 2022 டொயோட்டா க்ளான்ஸா (Toyota Glanza) காரும் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அறிமுகத்திற்கு தயாராகும் 2022 டொயோட்ட க்ளான்ஸா!! இரட்டை-ஜெட், விவிடி என்ஜினை பெற்றுவருகிறது...!

ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனங்களான சுஸுகி மற்றும் டொயோட்டா கூட்டணியில் இருப்பது தெரிந்த விஷயமே. இதனால் நம் இந்தியாவிலும் மாருதி சுஸுகி கூட்டு நிறுவனம் டொயோட்டா உடன் கூட்டணியில் உள்ளது. இந்த கூட்டணியின்படி சில கார் பாகங்களையும், என்ஜின்கள் உள்ளிட்ட சில இயந்திர பாகங்களையும் இவை பகிர்ந்து கொள்கின்றன.

அறிமுகத்திற்கு தயாராகும் 2022 டொயோட்ட க்ளான்ஸா!! இரட்டை-ஜெட், விவிடி என்ஜினை பெற்றுவருகிறது...!

அதுமட்டுமின்றி, மாருதி சுஸுகி பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படும் பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா காம்பெக்ட் எஸ்யூவி கார்களின் அடிப்படையில் க்ளான்ஸா & அர்பன் க்ரூஸர் என்ற பிரீமியம் ஹேட்ச்பேக் மற்றும் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் ரீபேட்ஜ்டு வெர்சன்களாக டொயோட்டா பிராண்டில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன.

அறிமுகத்திற்கு தயாராகும் 2022 டொயோட்ட க்ளான்ஸா!! இரட்டை-ஜெட், விவிடி என்ஜினை பெற்றுவருகிறது...!

இந்த நிலையில் சமீபத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட பலேனோவின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து பலேனோவை அடிப்படையாக கொண்ட டொயோட்டா க்ளான்ஸா மாடலும் அப்டேட்டை பெறவுள்ளதாம். பலேனோ ஃபேஸ்லிஃப்ட் மொத்தம் 4 வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் 2022 க்ளான்ஸாவை 2 வேரியண்ட்களில் மட்டுமே எதிர்பார்க்கிறோம்.

அறிமுகத்திற்கு தயாராகும் 2022 டொயோட்ட க்ளான்ஸா!! இரட்டை-ஜெட், விவிடி என்ஜினை பெற்றுவருகிறது...!

புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார்கள் குஜராத்தில் உள்ள மாருதி சுஸுகியின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தோற்றத்தை பொறுத்தவரையில், 2022 க்ளான்ஸா கிட்டத்தட்ட பலேனோ ஃபேஸ்லிஃப்ட்டையே ஒத்திருக்கும். இதனால் பலேனோவின் திருத்தியமைக்கப்பட்ட முன்பக்க க்ரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், புதிய L-வடிவிலான டெயில்லேம்ப்கள், முன்பக்க பம்பர், ஃபாக் விளக்குகள், பின்பக்க பம்பர் உள்ளிட்டவற்றை புதிய க்ளான்ஸா ஃபேஸ்லிஃப்ட்டிலும் எதிர்பார்க்கலாம்.

அறிமுகத்திற்கு தயாராகும் 2022 டொயோட்ட க்ளான்ஸா!! இரட்டை-ஜெட், விவிடி என்ஜினை பெற்றுவருகிறது...!

அத்துடன் உட்புறத்திலும் 2022 டொயோட்டா க்ளான்ஸா புதிய டிசைனிலான டேஸ்போர்டை 2022 பலேனோவில் இருந்து பெற்றுவரவுள்ளது. அதேபோல் இந்த டேஸ்போர்டில் புதிய 9.0-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் வழங்கப்பட்டுள்ளது. இது ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் இணைக்கக்கூடியதாக கொடுக்கப்படுகிறது.

அறிமுகத்திற்கு தயாராகும் 2022 டொயோட்ட க்ளான்ஸா!! இரட்டை-ஜெட், விவிடி என்ஜினை பெற்றுவருகிறது...!

இந்த கூடுதல் அப்கிரேட்களுடன் தட்டையான-தாழ்வான ஸ்டேரிங் சக்கரம், திருத்தியமைக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், வயர் இல்லா சார்ஜிங் பேட், இணைப்பு-கார் தொழிற்நுட்பம், ஹெட்ஸ்-அப் திரை உள்ளிட்டவற்றையும் 2022 டொயோட்டா க்ளான்ஸா பெற்றுவரவுள்ளது. புதிய 2022 பலேனோ ஹேட்ச்பேக் ஆனது அதன் முந்தைய மாடலை காட்டிலும் 50-70 கிலோ எடைமிக்கதாக கொண்டுவரப்பட்டுள்ளது.

அறிமுகத்திற்கு தயாராகும் 2022 டொயோட்ட க்ளான்ஸா!! இரட்டை-ஜெட், விவிடி என்ஜினை பெற்றுவருகிறது...!

இதன் காரணமாக புதிய க்ளான்ஸாவின் எடையையும் அதிகமானதாக எதிர்பார்க்கிறோம். இவற்றுடன் பெரிய அளவிலான 14-இன்ச் டிஸ்க் ப்ரேக்குகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பு போன்றவற்றையும் 2022 பலேனோவில் இருந்து இந்த அப்டேட் செய்யப்பட்ட டொயோட்டா கார் பெற்றுவர உள்ளது. இவை மட்டுமின்றி, பாதுகாப்பு அம்சங்களும் 2022 பலேனோவில் இருந்து 2022 க்ளான்ஸா பகிர்ந்து கொள்ளவுள்ளது.

அறிமுகத்திற்கு தயாராகும் 2022 டொயோட்ட க்ளான்ஸா!! இரட்டை-ஜெட், விவிடி என்ஜினை பெற்றுவருகிறது...!

2022 பலேனோவில் பாதுகாப்பு அம்சங்களாக 6 காற்றுப்பைகள், இஎஸ்பி, ஹில்-ஹோல்ட் உதவி, ஏபிஎஸ், இபிடி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஐசோஃபிக்ஸ் (ISOFIX) குழந்தை இருக்கைக்கான கொக்கிகள் உள்பட ஏகப்பட்டவை வழங்கப்பட்டுள்ளன. மேலும், புதிய பலேனோ காரை போன்று 2022 க்ளான்ஸாவும் ஒரே ஒரு பெட்ரோல் என்ஜின் தேர்வில் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது.

அறிமுகத்திற்கு தயாராகும் 2022 டொயோட்டா க்ளான்ஸா!! இரட்டை-ஜெட், விவிடி என்ஜினை பெற்றுவருகிறது...!

இந்த வகையில் 12-வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் அமைப்புடன் 2022 பலேனோவில் வழங்கப்படும் 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 89 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. டிரான்ஸ்மிஷனுக்கு 2022 பலேனோவில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அப்படியே தொடரப்பட்டுள்ளது.

அறிமுகத்திற்கு தயாராகும் 2022 டொயோட்டா க்ளான்ஸா!! இரட்டை-ஜெட், விவிடி என்ஜினை பெற்றுவருகிறது...!

ஆனால் முந்தைய சிவிடி கியர்பாக்ஸுக்கு மாற்றாக 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் க்ளான்ஸாவிலும் வழங்கப்படலாம். இந்தியாவில் வலிமையான விற்பனை & சேவை நெட்வொர்க்கினை கொண்டிருந்தாலும் டொயோட்டா கார்களின் விற்பனை கடந்த சில வருடங்களாக குறைவாகவே இருந்தது. இதனை புதிய க்ளான்ஸா மாற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அறிமுகத்திற்கு தயாராகும் 2022 டொயோட்டா க்ளான்ஸா!! இரட்டை-ஜெட், விவிடி என்ஜினை பெற்றுவருகிறது...!

2022 மாருதி சுஸுகி பலேனோவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டாலும், தோற்றத்தில் பலேனோ ஃபேஸ்லிஃப்ட்டிற்கும், க்ளான்ஸா ஃபேஸ்லிஃப்ட்டிற்கும் இடையே நிச்சயம் வேறுப்பாடு இருக்கும். மாருதி சுஸுகி பலேனோ மட்டுமின்றி, டொயோட்டா க்ளான்ஸாவிற்கு ஹூண்டாய் ஐ20, டாடா அல்ட்ராஸ் உள்ளிட்ட மற்ற பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களும் போட்டியாக விளங்குகின்றன.

More from DriveSpark

Article Published On: Sunday, February 27, 2022, 20:25 [IST]
English summary
New toyota glanza india launch soon details
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+