உள்ளே-வெளியே எந்த மறைப்பும் இன்றி காட்சி தந்த பலேனோ! இவ்ளோ மாற்றங்களும், சிறப்பம்சங்களும் வழங்கப்பட்டிருக்கா!

புதுப்பித்தல்களுடன் விற்பனைக்கு வர தயாராக இருக்கும் 2022 பலேனோ (2022 Baleno) கார் முதல் முறையாக முழு தரிசனத்தை வழங்கியிருக்கு. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

உள்ளே - வெளியே எந்த மறைப்பும் இன்றி முழுசா காட்சி தந்த 2022 பலேனோ... இவ்ளோ மாற்றங்களும், சிறப்பம்சங்களும் வழங்கப்பட்டிருக்கா!

மாருதி சுசுகி (Maruti Suzuki) நிறுவனம் தற்போது விற்பனையில் இருக்கும் பலேனோ காரை பல மடங்கு கவர்ச்சியான வாகனமாக மாற்றியிருக்கின்றது. ஆம், பலேனோவை மாருதி நிறுவனம் தற்போது அப்டேட் செய்திருக்கின்றது. இந்த புதுப்பிக்கப்பட்ட 2022 பலேனோ கார் மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வர வருக்கின்றது.

உள்ளே - வெளியே எந்த மறைப்பும் இன்றி முழுசா காட்சி தந்த 2022 பலேனோ... இவ்ளோ மாற்றங்களும், சிறப்பம்சங்களும் வழங்கப்பட்டிருக்கா!

தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி வரும் பிப்ரவரி 23ம் தேதி அன்று கார் அறிமுகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த காருக்கான புக்கிங் பணிகள் ஏற்கனவே நாட்டில் தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையில், புதிய பலேனோவின் உள் மற்றும் வெளிப்புற தோற்றத்தின் புகைப்படங்கள் நெக்ஸா ஆன்-லைன் தளத்தின் வாயிலாக வெளியாகியுள்ளது.

உள்ளே - வெளியே எந்த மறைப்பும் இன்றி முழுசா காட்சி தந்த 2022 பலேனோ... இவ்ளோ மாற்றங்களும், சிறப்பம்சங்களும் வழங்கப்பட்டிருக்கா!

வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு அதன் படங்களை நெக்ஸா வெளியிட்டிருக்கின்றது. நெக்ஸா ஷோரூம் வாயிலாகவே பலேனோ கார் மாடல் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. பிரீமியம் தர மாருதி கார்கள் மட்டுமே இந்த ஷோரூமில் விற்பனைச் செய்யப்படுகின்றது.

உள்ளே - வெளியே எந்த மறைப்பும் இன்றி முழுசா காட்சி தந்த 2022 பலேனோ... இவ்ளோ மாற்றங்களும், சிறப்பம்சங்களும் வழங்கப்பட்டிருக்கா!

இந்த நிலையிலேயே 2022 பலேனோ காரின் படங்களை எந்த மறைப்புகளும் இன்றி அதுவெளியிட்டிருக்கின்றது. இதன் வாயிலாக 2022 பலேனோ காரில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன?, என்னென்ன அம்சங்கள் புதியதாக சேர்க்கப்பட்டிருக்கின்றன?, என்பது பற்றிய விபரங்கள் தற்போது தெரிய வந்துள்ளது.

உள்ளே - வெளியே எந்த மறைப்பும் இன்றி முழுசா காட்சி தந்த 2022 பலேனோ... இவ்ளோ மாற்றங்களும், சிறப்பம்சங்களும் வழங்கப்பட்டிருக்கா!

புதிய மாற்றங்களால் வெளிப்புற தோற்றம் நவீன மயமாகியிருக்கின்றது. குறிப்பாக, காரின் முன்புறம் முன்பைக் காட்டிலும் தாழ்வான அமைப்பைக் கொண்டிருக்கின்றது. இத்துடன், இதன் முன் பகுதிக்கு கூடுதல் அலங்காரத்தை வழங்கும் வகையில் புதிய க்ரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. மேலும், கவர்ச்சியான பம்பர், அதில், பனி மின் விளக்கு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

உள்ளே - வெளியே எந்த மறைப்பும் இன்றி முழுசா காட்சி தந்த 2022 பலேனோ... இவ்ளோ மாற்றங்களும், சிறப்பம்சங்களும் வழங்கப்பட்டிருக்கா!

அதேநேரத்தில், தற்போது பயன்படுத்தப்பட்டிருக்கும் பம்பர் சற்று கட்டுமஸ்தானதாக காட்சியளிக்கின்றது. ஆகையால், முன் பகுதி சற்று ஆக்ரோஷமானதாகவே காட்சியளிக்கின்றது. இவற்றுடன், ஓர் குரோம் பட்டையும் அதில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க ஹெட்லேம்ப் புதியதாக காட்சியளிக்கின்றது. அவை புரஜெக்டர் அமைப்பைக் கொண்டுள்ளன.

உள்ளே - வெளியே எந்த மறைப்பும் இன்றி முழுசா காட்சி தந்த 2022 பலேனோ... இவ்ளோ மாற்றங்களும், சிறப்பம்சங்களும் வழங்கப்பட்டிருக்கா!

மேலும், எல்இடி பகல்நேர மின் விளக்குகளும் ஹெட்லேம்ப் இருக்கும் இடத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த புதிய மாற்றங்கள் அனைத்தும் சேர்ந்து பலேனோவை ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்ட வாகனமாக மாற்றியிருக்கின்றன. இதற்கேற்ப டைமண்ட் கட் அலாய் வீல்கள், ஜன்னல் பெல்ட் லைன் முழுவதிற்கும் குரோம் பூச்சுக் கொண்ட அணிகலன் கொடுக்கப்பட்டுள்ளன.

உள்ளே - வெளியே எந்த மறைப்பும் இன்றி முழுசா காட்சி தந்த 2022 பலேனோ... இவ்ளோ மாற்றங்களும், சிறப்பம்சங்களும் வழங்கப்பட்டிருக்கா!

கைப் பிடிகளிலும் குரோம் பூச்சுக் கொண்ட அணிகலன் பயன்படுத்தப்பட்டுள்ளன. முன் மற்றும் பக்கவாட்டு பகுதியைப் போலவே பின் பகுதியிலும் லேசான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், ஸ்பிளிட் செய்யப்பட்ட ஸ்டாப் லைட்டுகள், இந்த லைட்டுகளைத் தொட்டுக் கொண்டிருப்பதைப் போன்று குரோம் லைன், லேசாக மறு சீரமைப்பு செய்யப்பட்ட பம்பர் உள்ளிட்டவை பின் பக்கத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

உள்ளே - வெளியே எந்த மறைப்பும் இன்றி முழுசா காட்சி தந்த 2022 பலேனோ... இவ்ளோ மாற்றங்களும், சிறப்பம்சங்களும் வழங்கப்பட்டிருக்கா!

மேலே பார்த்தவையே வெளிப்புறத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் ஆகும். இதேபோல் காரின் உட்பகுதியிலும் சில மாற்றங்களும், புதிய அம்சங்கள் சேர்ப்பையும் மாருதி சுசுகி செய்திருக்கின்றது. அந்தவகையில், டேஷ்போர்டிற்கு புதிய வடிவமைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. நீலம் மற்றும் கருப்பு நிறத்தில் அது காட்சியளிக்கின்றது.

உள்ளே - வெளியே எந்த மறைப்பும் இன்றி முழுசா காட்சி தந்த 2022 பலேனோ... இவ்ளோ மாற்றங்களும், சிறப்பம்சங்களும் வழங்கப்பட்டிருக்கா!

இது தவிர ஒரு சாம்பல் நிற துண்டு டேஷ்போர்டு மீது காட்சியளிக்கின்றது. இவற்றுடன், ஸ்மார்ட்-ப்ளே ப்ரோ-ப்ளஸ் (SmartPlay Pro+) என்ற தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை நிறுவனம் இக்காரில் சேர்த்திருக்கின்றது. இது தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஸ்மார்ட்-ப்ளே ஸ்டுடியோ (SmartPlay Studio)-வைக் காட்டிலும் பெரியது.

உள்ளே - வெளியே எந்த மறைப்பும் இன்றி முழுசா காட்சி தந்த 2022 பலேனோ... இவ்ளோ மாற்றங்களும், சிறப்பம்சங்களும் வழங்கப்பட்டிருக்கா!

இது அதிக தொழில்நுட்ப வசதிக் கொண்ட கார்களை விரும்புவோர்களை ஈர்க்கும் வகையில் காட்சியளிக்கின்றது. அதேவேலையில் மாருதி சுசுகி நிறுவனம் அதன் குறைந்த விலை பலேனோ கார் தேர்வில் 7 அங்குல திரையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரண்டு அமைப்புகளிலுமே ஆப்பிள் கார்-ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய வசதிகள் இடம் பெறும்.

உள்ளே - வெளியே எந்த மறைப்பும் இன்றி முழுசா காட்சி தந்த 2022 பலேனோ... இவ்ளோ மாற்றங்களும், சிறப்பம்சங்களும் வழங்கப்பட்டிருக்கா!

இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளை 2022 பலேனோ பெற்றிருக்கின்றது. மாருதியின் எஸ்-கிராஸ் காரில் இடம் பெறுவதைப் போன்று ஏசி வெண்டுகள் இன்ஃபோடெயின்மென்டிற்கு கீழேயும், புதிய தானியங்கி கால நிலை கட்டுப்பாட்டு சிஸ்டம், 12 வோல்ட் யுஎஸ்பி போர்ட் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கின்றன.

உள்ளே - வெளியே எந்த மறைப்பும் இன்றி முழுசா காட்சி தந்த 2022 பலேனோ... இவ்ளோ மாற்றங்களும், சிறப்பம்சங்களும் வழங்கப்பட்டிருக்கா!

மேலே பார்த்தவற்றை போலவே இக்காரில் புதிய ஸ்டியரிங் வீல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது சாம்பல் நிற செருகலுடன் தட்டையாகக் காட்சியளிக்கின்றது. இவை ஸ்டியரிங் வீலிற்கு ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்குகின்றன. புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரிலும் இதே அமைப்புக் கொண்ட ஸ்டியரிங் வீலே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் பன்முக தகவல்களை வழங்கக் கூடிய திரை உள்ளிட்டவையு வழங்கப்பட்டுள்ளன.

உள்ளே - வெளியே எந்த மறைப்பும் இன்றி முழுசா காட்சி தந்த 2022 பலேனோ... இவ்ளோ மாற்றங்களும், சிறப்பம்சங்களும் வழங்கப்பட்டிருக்கா!

எஞ்ஜினை பொருத்த வரை 1.2 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் மோட்டாரே 2022 பலேனோவில் இடம் பெற இருக்கின்றது. இது அதிகபட்சமாக 90 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும். இத்துடன், 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படும்.

உள்ளே - வெளியே எந்த மறைப்பும் இன்றி முழுசா காட்சி தந்த 2022 பலேனோ... இவ்ளோ மாற்றங்களும், சிறப்பம்சங்களும் வழங்கப்பட்டிருக்கா!

கூடுதல் சிறப்பம்சங்களாக 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஹெட்ஸ்-அப் திரை, ஓடிஏ அப்டேட், சுசுகி கார் இணைப்பு தொழில்நுட்பம், அலெக்ஸா வாய்ஸ் அசிஸ்டண்ட், ரியர் ஏசி வெண்டுகள், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம், அர்கமிஸ் சவுண்ட் சிஸ்டம், எல்இடி பனி மின் விளக்கு, யுவி கட் கிளாஸ், ரியர் யுஎஸ்பி போர்ட்டுகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஹோல்ட் கன்ட்ரோல், ஆறு ஏர் பேக்குகள் மற்றும் உறுதியான உடல் கட்டமைப்பு ஆகியவற்றுடன் பலேனோ மிக விரைவில் விற்பனைக்குக் வர இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 17, 2022, 13:18 [IST]
English summary
Nexa website reveals 2022 maruti baleno facelift
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+