கப்பல் போன்ற சொகுசு காரை வாங்கிய காமெடி நடிகர்... எப்பா இந்த காரோட விலை இவ்ளோ அதிகமா!!

கப்பல் போன்ற சொகுசான பயண அனுபவத்தை வழங்கக் கூடிய ஆடம்பர ரக காரை காமெடி நடிகர் ஒருவர் வாங்கியிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

கப்பல் போன்ற சொகுசு காரை வாங்கிய காமெடி நடிகர்... எப்பா இந்த காரோட விலை இவ்ளோ அதிகமா!!

மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) நிறுவனத்தின் பிரபலமான சொகுசு கார் மாடல்களில் ஜிஎல்இ (GLE)-ம் ஒன்று. இது ஓர் எஸ்யூவி ரக சொகுசு வாகனமாகும். அதிக சொகுசான பயணத்தை விரும்புவோர் மத்தியில் இக்காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. ஆகையால், நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கார் மாடலாக ஜிஎல்இ திகழ்கின்றது.

கப்பல் போன்ற சொகுசு காரை வாங்கிய காமெடி நடிகர்... எப்பா இந்த காரோட விலை இவ்ளோ அதிகமா!!

இத்தகைய ஓர் கார் மாடலையே தற்போது பிரபல நடிகரும், தொலைக்காட்சி பிரபலமுமான கிருஷ்ணா அபிஷேக் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எக்ஸ்ட்ரீம் காமெடியன், மிக சிறந்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் என பாலிவுட் திரையுலகில் புகழ்பெற்ற நபராக இவர் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார்.

கப்பல் போன்ற சொகுசு காரை வாங்கிய காமெடி நடிகர்... எப்பா இந்த காரோட விலை இவ்ளோ அதிகமா!!

இந்த நிலையிலேயே கிருஷ்ணா அபிஷேக் தற்போது விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவல் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தின் வாயிலாக பிரபல நடிகையும், கிருஷ்ணா அபிஷேக்கின் சகோதரியுமான ஆர்த்தி சிங் வெளியிட்டுள்ளார்.

கப்பல் போன்ற சொகுசு காரை வாங்கிய காமெடி நடிகர்... எப்பா இந்த காரோட விலை இவ்ளோ அதிகமா!!

மேலும், "தன்னுடைய சகோதரரின் கடினமான உழைப்பிற்கு கிடைத்த பரிசு இது" என கூறி தனது வாழ்த்துக்களையும் அவர் பதிவிட்டிருக்கின்றார். சொகுசு மற்றும் மிக சிறந்த செயல் திறனை சமமாக வழங்கும் ஆடம்பர வாகனமே இந்த பென்ஸ் ஜிஎல்இ. இதனால்தான் சொகுசு கார் விரும்பிகளை மட்டுமின்றி அதிக எஞ்ஜின் திறன் வெளிப்பாட்டை விரும்புவோர் மத்தியிலும் இக்காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

கப்பல் போன்ற சொகுசு காரை வாங்கிய காமெடி நடிகர்... எப்பா இந்த காரோட விலை இவ்ளோ அதிகமா!!

அந்தவகையில், தற்போது நடிகர் கிருஷ்ணா அபிஷேக்கையும் இக்கார் கவர்ந்திருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் ரூ. 84.14 லட்சத்திற்கும் அதிகமான விலையைக் கொண்டது. புகைப்படத்தில் காட்சியளிப்பது முந்தைய தலைமுறை பென்ஸ் ஜிஎல்இ காராகும். இந்த சொகுசு வாகனம் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

கப்பல் போன்ற சொகுசு காரை வாங்கிய காமெடி நடிகர்... எப்பா இந்த காரோட விலை இவ்ளோ அதிகமா!!

இந்த இரண்டு விதமான எஞ்ஜின் தேர்வுகளுக்கும் உள் மற்றும் வெளி நாடுகளில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது. இதன் டீசல் எஞ்ஜின் 2.1 லிட்டர், 4 சிலிண்டர் மோட்டாராகும். இது அதிகபட்சமாக 204 பிஎச்பி மற்றும் 500 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

கப்பல் போன்ற சொகுசு காரை வாங்கிய காமெடி நடிகர்... எப்பா இந்த காரோட விலை இவ்ளோ அதிகமா!!

இதைத்தொடர்ந்து மற்றுமொரு டீசல் எஞ்ஜின் தேர்வும் இக்காரில் வழங்கப்படுகின்றது. அது, 3.0 லிட்டர் வி6 மோட்டாராகும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 258 பிஎச்பி மற்றும் 620 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இவையிரண்டைக் காட்டிலும் மிக திறனை வெளிப்படுத்தும் தேர்வாக பெட்ரோல் எஞ்ஜின் தேர்வு இருக்கின்றது.

கப்பல் போன்ற சொகுசு காரை வாங்கிய காமெடி நடிகர்... எப்பா இந்த காரோட விலை இவ்ளோ அதிகமா!!

அது, 3.0 லிட்டர் வி6 மோட்டாராகும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 333 பிஎச்பி மற்றும் 480 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இந்த அனைத்து எஞ்ஜின்களிலும் 9 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுகின்றது. இதுமாதிரியான சிறப்பு வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும் ஜிஎல்இ காரையே நடிகர் கிருஷ்ணா அபிஷேக் வாங்கியிருக்கின்றார்.

கப்பல் போன்ற சொகுசு காரை வாங்கிய காமெடி நடிகர்... எப்பா இந்த காரோட விலை இவ்ளோ அதிகமா!!

ஆனால், அவர் வாங்கியிருக்கும் வேரியண்ட் பற்றிய துள்ளியமான தகவல் வெளியாகவில்லை. இவரிடத்தில் இந்த ஒரு சொகுசு வாகனம் மட்டுமே இருக்கின்றது என எண்ணிவிட வேண்டாம். நடிகரிடத்தில் இன்னும் சில சொகுசு கார்களும் இருக்கின்றன. அந்தவகையில், பென்ஸ் சிஎல்ஏ, ஆடி க்யூ5, ஆடி ஏ3 கேப்ரியோலெட் உள்ளிட்ட ஆடம்பர கார்கள் இருக்கின்றன.

கப்பல் போன்ற சொகுசு காரை வாங்கிய காமெடி நடிகர்... எப்பா இந்த காரோட விலை இவ்ளோ அதிகமா!!

இந்த தகவலுடன் மற்றுமொரு கூடுதல் சிறப்பு தகவலையும் இங்கு வழங்க நாங்கள் விரும்புகின்றோம். நடிகர் கிருஷ்ணா அபிஷேக்கின் தங்கையான ஆர்தி சிங், கடந்த வருடம் புத்தம் புதிய மஹிந்திரா தார் காரை வாங்கியிருந்தார். இதுவே அந்த சிறப்பு தகவலாகும்.

கப்பல் போன்ற சொகுசு காரை வாங்கிய காமெடி நடிகர்... எப்பா இந்த காரோட விலை இவ்ளோ அதிகமா!!

இக்காருக்கு இந்தியாவில் மிக அமோகமான டிமாண்ட் நிலவி வருகின்றது. ஒரு வருடத்திற்கும் அதிகமான காத்திருப்பு காலம் இவ்வாகனத்திற்கு நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய பிரபலமான காரையே கடந்த வருடம் ஆர்தி வாங்கி இருந்தார். இவரைத்தொடர்ந்து, தற்போது கிருஷ்ணா புதிய காரை வாங்கியிருக்கின்றார்.

More from DriveSpark

Article Published On: Friday, January 21, 2022, 11:31 [IST]
English summary
Nights with kapil krushna abhishek buys mercedes benz gle
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+