இவ்ளோ அதிக விலையுள்ள காரை நிம்ரத் வாங்கியிருக்காரா? யார் இந்த நிம்ரத்? சொகுசு காரின் சிறப்புகள் என்ன?
பிரபல இந்தி திரைப்பட நடிகை நிம்ரத் கவுர் ரூ. 3 கோடி விலையுள்ள லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் (Land Rover Range Rover) எஸ்யூவி காரை வாங்கியிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரிண்ட் உலகில் மாடலாக தன்னுடைய பயணத்தைத் தொடங்கி, பின்னர் பாலிவுட் திரையுலகில் கால் தடம் பதித்தவர் பிரபல நடிகை நிம்ரத் கவுர். தற்போது பிரபல அமெரிக்க தொலைக்காட்சியில் பணியாற்றி வருகின்றார். இவரே மிக மிக விலையுயர்ந்த லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் (Land Rover Range Rover) எஸ்யூவி காரை வாங்கி ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பியிருக்கின்றார்.

ராஜஸ்தான் மாநிலம், பிலானியில் பிறந்தவரே நிம்ரத் கவுர். இவர் ஓர் சீக்கிய குடும்பத்தைச் சார்ந்தவர். சாதாரணமான மாடலாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய அவர் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். இந்த நிலையிலேயே தன்னுடைய அந்தஸ்தை நிலைநாட்டும் வகையில் கவுர் புத்தம் புதிய லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் எஸ்யூவி காரை வாங்கியிருக்கின்றார்.

தற்போது இந்திய சந்தையில் ஐந்தாம் தலைமுறை ரேஞ்ஜ் ரோவர் காரே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனை லேண்ட் ரோவர் நிறுவனம் நடப்பாண்டின் தொடக்கத்தில்தான் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ரூ. 2.32 கோடி தொடங்கி ரூ. 3.41 கோடிக்கும் அதிகமான விலையில் இவ்வாகனம் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. நிர்மத் கவுர் வாங்கியிருக்கும் ரேஞ்ஜ் ரோவர் காரின் விலை ரூ. 3 கோடிக்கும் அதிகம் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய உச்சபட்ச விலைக் கொண்ட காரை அவர் கொள்முதல் செய்திருப்பது உண்மையில் பலரை ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது. இந்த வாகனத்தில் சொகுசு வசதிகள் ஏராளம். எனவேதான் நாம் நம்ப முடியாத அளவிற்கு மிக அதிக விலையைக் கொண்டதாக அது காட்சியளிக்கின்றது. முழுக்க முழுக்க கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் எஸ்யூவி-யையே அவர் வாங்கியிருக்கின்றார்.

இந்த லேட்டஸ்ட் கொள்முதலைக் கொண்டே தற்போது அவர் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். அந்தவகையில், அவர் அண்மையில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றிற்கு வந்து செல்லக் கூடிய வீடியோக் காட்சியே யுட்யூப் சேனல் ஒன்றின் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் விற்பனைக்கக் கிடைக்கும் மிக விலையுயர்ந்த கார் மட்டுமில்லைங்க இது. அதிக கவர்ச்சியான வாகனமும்கூட. இக்காரின் அதிக கவர்ச்சியான தோற்றத்திற்காக மிகவும் அட்டகாசமான வடிவைப்புக் கொண்ட க்ரில், புரஜெக்டர் ரக எல்இடி லைட்டுகள் மற்றும் எல்இடி டிஆர்எல்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல், காரின் பக்கவாட்டு பகுதியும், பின் பக்கமும் மிகுந்த அட்டகாசமான தோற்றத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய செயல்பாடுகளின் வாயிலாகவே பழைய தலைமுறை வெர்ஷனைக் காட்டிலும் ஐந்தாம் தலைமுறை அதிக கவர்ச்சியான வாகனமாக மாறியிருக்கின்றது. இதேபோல் தொழில்நுட்ப வசதியிலும் நம்மை பிரம்மிக்க வைக்க வகையிலும் இக்கார் உள்ளது. மிக அதிக சொகுசு வசதிகள் இக்காரில் வாரி வழங்கப்பட்டிருக்கின்றன.

35 ஸ்பீக்கர்களுடன் கூடிய மெர்டியன் சவுண்ட் சிஸ்டம், 13.1 அங்குல ஃபோளோட்டி ரக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் வசதிக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஹெட்-அப் திரை, மல்டி ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், நான்கு ஸ்போக்குகள் கொண்ட ஸ்டியரிங் வீல், ரியர் இருக்கைகளுக்கான என்டர்டெயின்மென்ட் அம்சம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்த காரில் பயணிக்கும்போது உட்பக்கம் பெரியளவில் சத்தம் தெரியாத வகையில் கேபின் வடிவமைக்கப்பட்டுள்ளது. டயரின் இரைச்சல் மற்றும் எஞ்ஜினின் சத்தம் உள்ளிட்டவைகூட கேட்காத வகையில் கேபின் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால் முழு அமைதியான மற்றும் லக்சூரியான பயண அனுபவத்தை இந்த காரில் பெற்றுக் கொள்ள முடியும். இத்தகைய சூப்பரான காரையே நடிகை நிம்ரத் கவுர் தற்போது வாங்கியிருக்கின்றார்.

இந்த கார் தற்போது எல்டபிள்யூபி எனும் ஒற்றை வேரியண்டில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதேவேலையில், பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான மோட்டார் ஆப்ஷன்கள் இக்காரில் வழங்கப்படுகின்றது. 4.4 பெட்ரோல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் ஆகிய மோட்டார் தேர்வுகளே லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் விற்பனைக்குக் கிடைக்கும். இதில், பெட்ரோல் மோட்டார் 523 பிஎஸ் மற்றும் 750 என்எம் டார்க்கையும், டீசல் மோட்டார் 346 பிஎஸ் பவரையும், 700 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.


Click it and Unblock the Notifications