நம்பவே முடியல... நிஸான் மேக்னைட் காரை இவ்வளவு பேர் புக்கிங் பண்ணியிருக்காங்களா? ஆச்சரியமா இருக்கே!

நிஸான் மேக்னைட் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நம்பவே முடியல... நிஸான் மேக்னைட் காரை இவ்வளவு பேர் புக்கிங் பண்ணியிருக்காங்களா? ஆச்சரியமா இருக்கே!

இந்திய சந்தையில் ஒரு சமயத்தில் நிஸான் நிறுவனம் தத்தளித்து கொண்டிருந்தது. ஆனால் நிஸான் நிறுவனத்தை மீண்டும் ட்ராக்கிற்கு அழைத்து வந்தது மேக்னைட் (Nissan Magnite). இந்த சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவியின் வருகைக்கு பின்பு, இந்திய சந்தையில் நிஸான் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது.

நம்பவே முடியல... நிஸான் மேக்னைட் காரை இவ்வளவு பேர் புக்கிங் பண்ணியிருக்காங்களா? ஆச்சரியமா இருக்கே!

இந்த சூழலில், நிஸான் மேக்னைட் காருக்கு இந்தியாவில் 1 லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகள் குவிந்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனை நிஸான் இந்தியா நிறுவனம் தனது சமூக வலை தள பக்கங்கள் வாயிலாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய சந்தையில் நிஸான் நிறுவனத்தின் கார் ஒன்றுக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகள் குவிந்திருப்பது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம்தான்.

நம்பவே முடியல... நிஸான் மேக்னைட் காரை இவ்வளவு பேர் புக்கிங் பண்ணியிருக்காங்களா? ஆச்சரியமா இருக்கே!

இந்திய சந்தையில் நிஸான் மேக்னைட் கார் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, ரெனால்ட் கைகர், மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகியவை நிஸான் மேக்னைட் காரின் மிக முக்கியமான போட்டியாளர்களாக உள்ளன.

நம்பவே முடியல... நிஸான் மேக்னைட் காரை இவ்வளவு பேர் புக்கிங் பண்ணியிருக்காங்களா? ஆச்சரியமா இருக்கே!

நிஸான் மேக்னைட் கார் இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் காரணமாக கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு என்ற பெயரை நிஸான் மேக்னைட் எடுத்தது. இந்திய சந்தையில் நிஸான் மேக்னைட் காருக்கு கிடைத்த வெற்றிக்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்று.

நம்பவே முடியல... நிஸான் மேக்னைட் காரை இவ்வளவு பேர் புக்கிங் பண்ணியிருக்காங்களா? ஆச்சரியமா இருக்கே!

தனது ஷோரூம்களுக்கு வாடிக்கையாளர்களை ஈர்க்க நிஸான் நிறுவனம் திணறி கொண்டிருந்த சமயத்தில்தான் மேக்னைட் விற்பனைக்கு வந்தது. குறைவான விலை, கவர்ச்சிகரமான டிசைன் மற்றும் அட்டகாசமான வசதிகள் ஆகிய காரணங்களால் நிஸான் மேக்னைட் தற்போது சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது.

நம்பவே முடியல... நிஸான் மேக்னைட் காரை இவ்வளவு பேர் புக்கிங் பண்ணியிருக்காங்களா? ஆச்சரியமா இருக்கே!

இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டபோது நிஸான் மேக்னைட் காரின் ஆரம்ப விலை வெறும் 4.99 லட்ச ரூபாய் மட்டுமே. பட்ஜெட் விலையில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரை எதிர்பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் நிஸான் மேக்னைட் காரின் விலை தற்போது உயர்ந்து விட்டது என்பது வேறு கதை.

நம்பவே முடியல... நிஸான் மேக்னைட் காரை இவ்வளவு பேர் புக்கிங் பண்ணியிருக்காங்களா? ஆச்சரியமா இருக்கே!

தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் நிஸான் மேக்னைட் காரின் ஆரம்ப விலை 5.88 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 10.56 லட்ச ரூபாயாக இருக்கிறது. இங்கே கூறப்பட்டுள்ளவை புது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது. விலை உயர்ந்தப்பட்டிருந்தாலும் கூட, இன்னமும் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாகவே நிஸான் மேக்னைட் உள்ளது.

நம்பவே முடியல... நிஸான் மேக்னைட் காரை இவ்வளவு பேர் புக்கிங் பண்ணியிருக்காங்களா? ஆச்சரியமா இருக்கே!

நிஸான் மேக்னைட் கார் தற்போது நிலைநிறுத்தப்பட்டிருக்கும் செக்மெண்ட்டில் வரும் நாட்களில் போட்டி அதிகரிக்கவுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸா காரின் புதிய தலைமுறை மாடலையும், ஹூண்டாய் நிறுவனம் வெனியூ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலையும் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவிருப்பதுதான் இதற்கு காரணம்.

நம்பவே முடியல... நிஸான் மேக்னைட் காரை இவ்வளவு பேர் புக்கிங் பண்ணியிருக்காங்களா? ஆச்சரியமா இருக்கே!

இதில், ஹூண்டாய் வெனியூ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகளை ஹூண்டாய் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகவே தொடங்கி விட்டது. மறுபக்கம் மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸா காருக்கு, இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட சில டீலர்ஷிப்களில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் முன்பதிவுகள் ஏற்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நம்பவே முடியல... நிஸான் மேக்னைட் காரை இவ்வளவு பேர் புக்கிங் பண்ணியிருக்காங்களா? ஆச்சரியமா இருக்கே!

இதுதவிர ஏற்கனவே டாடா நெக்ஸான் காரும் இந்த செக்மெண்ட்டில் மற்ற கார்களுக்கு கடுமையான போட்டியை வழங்கி வருகிறது. இப்படி அதிகரித்து கொண்டே வரும் போட்டியை சமாளிக்க வேண்டிய கட்டாயம், தற்போது முன்பதிவு எண்ணிக்கையில் புதிய உச்சத்தை தொட்டுள்ள நிஸான் மேக்னைட் காருக்கு உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, June 3, 2022, 15:49 [IST]
English summary
Nissan magnite compact suv bags over 1 lakh bookings details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+