40 லட்ச ரூபா காரின் முகத்தை பதம் பார்த்த 6 லட்ச ரூபா கார்... ரொம்ப ஸ்ட்ராங்கானது என்பதை நிரூபிச்சிருக்கு!

மலிவு விலை நிஸான் மேக்னைட் காரின் பின் பக்கத்தில் மோதியதில் டொயோட்ட ஃபார்ச்சூனர் கார் மிகக் கடுமையான சேதத்தைச் சந்தித்திருக்கின்றது. ஆனால், மேக்னைட்டே மிக லேசான சேதத்தையே சந்தித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

40 லட்சப ரூபா காரின் முகத்தை பதம் பார்த்த 6 லட்ச ரூபா கார்... ரொம்ப ஸ்ட்ராங்கானது என்பதை நிரூபிச்சிருக்கு!

இந்தியாவின் மலிவு விலை கார் மாடல்களில் நிஸான் மேக்னைட்டும் ஒன்று. இந்த காரே மிகவும் ஸ்ட்ராங்கானது என்பதனை தற்போது இந்த உலகிற்கு தெரியப்படுத்தியிருக்கின்றது. எப்படி என்றால், தன்னை மோதிய பிரமாண்ட காரைவிட மிகக் குறைவான சேதாரத்தைப் பெற்று நமக்கு இந்த தகவலை அது தெரிவித்திருக்கின்றது. டொயோட்டா ஃபார்ச்சூனர் காரே நிஸான் மேக்னைட்டின்மீது மோதிய அந்த பிரமாண்ட கார் மாடலாகும்.

40 லட்சப ரூபா காரின் முகத்தை பதம் பார்த்த 6 லட்ச ரூபா கார்... ரொம்ப ஸ்ட்ராங்கானது என்பதை நிரூபிச்சிருக்கு!

இந்த வாகனம் மிகக் கடுமையான சேதாரத்தைச் சந்தித்திருக்கின்ற வேலையில், நிஸான் மேக்னைட் காரோ மிகக் குறைவான பாதிப்பையேச் சந்தித்திருக்கின்றது. இதன் வாயிலாக நிஸான் மேக்னைட் கார் மிகவும் உறுதியான கட்டமைப்பில் உருவாக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. நிஸான் மேக்னைட் ஓர் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்ற காராகும். பாதுகாப்பு விஷயத்திலேயே இத்தகைய சூப்பரான ரேட்டிங்கை அது பெற்றிருக்கின்றது.

40 லட்சப ரூபா காரின் முகத்தை பதம் பார்த்த 6 லட்ச ரூபா கார்... ரொம்ப ஸ்ட்ராங்கானது என்பதை நிரூபிச்சிருக்கு!

இதுமட்டுமில்லைங்க, நாட்டில் மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களிலும் நிஸான் மேக்னைட் ஒன்றாக இருக்கின்றது. இன்றைய நிலவரப்படி நிஸான் மேக்னைட் கார் ரூ. 5.97 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த வாகனத்தை நிறுவனம் ரெட் எடிசன் எனும் சிறப்பு பதிப்பிலும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 7.86 லட்சம் ஆகும். இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

40 லட்சப ரூபா காரின் முகத்தை பதம் பார்த்த 6 லட்ச ரூபா கார்... ரொம்ப ஸ்ட்ராங்கானது என்பதை நிரூபிச்சிருக்கு!

இத்தகைய குறைவான விலையிலேயே நிஸான் மேக்னைட் அதிக பாதுகாப்பு வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே தற்போதையே விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. அசாம் மாநிலத்தின் திப்ருகர்ஹ் பகுதியிலேயே இந்த விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

40 லட்சப ரூபா காரின் முகத்தை பதம் பார்த்த 6 லட்ச ரூபா கார்... ரொம்ப ஸ்ட்ராங்கானது என்பதை நிரூபிச்சிருக்கு!

நிஸான் மேக்னைட் காரை ஓட்டி வந்த டிரைவர் திடீரென வாகனத்தை நிறுத்தியதே இந்த விபத்திற்கு காரணம் என கூறப்படுகின்றது. சாலை வெறிச்சோடி இருந்தநிலையில் அவர் வாகனத்தை திடீரென நிறுத்தியிருக்கின்றார். இதனை சற்றும் எதிர்பார்க்காததால், ஃபார்ச்சூனர் கார் ஓட்டுநர் நிஸான் மேக்னைட் காரின் பின் பகுதியில் மோதியிருக்கின்றார். அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு சிறிதளவும் நேரம் கிடைக்காத காரணத்தினாலேயே இந்த விபத்து அரங்கேறியிருக்கின்றது.

40 லட்சப ரூபா காரின் முகத்தை பதம் பார்த்த 6 லட்ச ரூபா கார்... ரொம்ப ஸ்ட்ராங்கானது என்பதை நிரூபிச்சிருக்கு!

அதேவேலையில், அவர் கடைசி நொடியில் மேற்கொண்ட நடவடிக்கைகளினாலேயே பெரும் விபத்து லேசான பாதிப்புகளுடன் முடிந்திருக்கின்றது. குறிப்பாக, இந்த விபத்தில் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிகின்றது. அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிந்திருந்த காரணத்தினால் பெரியளவிலான பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன.

இந்த விபத்து சம்பவத்தில் அதிக சேதாரத்தை டொயோட்டா ஃபார்ச்சூனர் பெற்றிருப்பதும், மிகக் குறைவான சேதத்தை நிஸான் மேக்னைட் கார் பெற்றிருப்பதும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, இந்த விபத்தில் நிஸான் மேக்னைட் செயல்பட்ட விதம் ஒட்டுமொத்த வாகன பிரியர்களையும் ஆச்சரியமடையச் செய்திருக்கின்றது. மேக்னைட் காருக்கு இத்தனை திறமையா என பலரை வாயை பிளக்க வைத்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உலக நாடுகளுக்கான தயாரிப்பே இந்த நிஸான் மேக்னைட். நிறுவனத்தின் மிக சிறிய எஸ்யூவி ரக கார் இதுவாகும்.

40 லட்சப ரூபா காரின் முகத்தை பதம் பார்த்த 6 லட்ச ரூபா கார்... ரொம்ப ஸ்ட்ராங்கானது என்பதை நிரூபிச்சிருக்கு!

இந்த காருடன் மோதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் காரே மிகக் கடுமையான சேதாராங்களைச் சந்தித்திருக்கின்றது. இதற்காக இந்த காரின் தரத்தைக் குறைவாக எடைப் போட்டு விட வேண்டாம். இதுவும் ஐந்து ஸ்டார்கள் ரேட்டிங் பெற்ற வாகனமாகும். மேட் இன் இந்தியா குளோபல் என்சிஏபி-க்கு உட்படுத்த இருக்கின்றது. முன்னதாக நிகழ்த்தப்பட்ட ஏசியன் என்சிஏபி-யில் இந்த வாகனம் 4 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றது.

40 லட்சப ரூபா காரின் முகத்தை பதம் பார்த்த 6 லட்ச ரூபா கார்... ரொம்ப ஸ்ட்ராங்கானது என்பதை நிரூபிச்சிருக்கு!

இந்த ரேட்டிங்கை அது பெறுவதற்கு அதன் அதிக பாதுகாப்பு திறன் மற்றும் உறுதி கட்டமைப்பே காரணமாக உள்ளது. கிராஷ் டெஸ்டில் இந்த வாகனம் 87.46 பாயிண்டுகளைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதைப் போலவே அதிக ரேட்டிங்கைப் பெற்ற வாகனமாக நிஸான் மேக்னைட் உள்ளது. இது பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 39.02 புள்ளிகளையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 16.31 பாயிண்டுகளையும் பெற்றிருக்கின்றது. இதுதவிர ஒட்டுமொத்த பாதுகாப்பு தரத்தில் 70.60 புள்ளிகளையும் இந்த நிஸான் மேக்னைட் பெற்றிருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Nissan magnite mets accident by toyota fortuner
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X