டாடா எலெக்ட்ரிக் காரை புகழ்ந்து தள்ளிய அரசு உயரதிகாரி! என்ன சொன்னார்னு தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!
நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியான அமிதாப் காந்த், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை புகழ்ந்து தள்ளியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் (Tata Nexon EV) தற்போது வேகமாக பிரபலமடைந்து வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசலின் அதிகப்படியான விலை இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று. பெட்ரோல், டீசலின் விலை அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் எலெக்ட்ரிக் கார்களுக்கு மாற தொடங்கியுள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களிடம் இருந்து நமது சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வம் உடையவர்களின் தேர்வாகவும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் திகழ்கிறது. ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைப்பதும், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக திகழ்வதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இதுதவிர சிறப்பான ரேஞ்ச் (பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் பயணிக்கும் தொலைவு), அதிக வசதிகள் போன்றவையும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை வாடிக்கையாளர்கள் மத்தியில் வெகுவாக பிரபலமாக்கியுள்ளன. மேலும் 'மேக் இன் இந்தியா' மற்றும் 'உள்ளூர் பொருட்களுக்கு குரல்' கொடுப்போம் போன்ற திட்டங்களும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு பலம் சேர்க்கின்றன.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் அதிகம் விற்பனையாகி கொண்டுள்ள எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. இந்தியாவில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அளவிற்கு வேறு எந்த எலெக்ட்ரிக் காரும் விற்பனையாவதில்லை. இதன் மூலம் விற்பனையில் புதிய உச்சங்களை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எட்டி வருகிறது.

தற்போது சாதாரண மக்கள் மட்டுமல்லாது, பிரபலங்களும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை பயன்படுத்தி கொண்டுள்ளனர். இந்த பிரபலங்களில் நிதி ஆயோக் (Niti Aayog) அமைப்பினுடைய தலைமை செயல் அதிகாரியான (CEO) அமிதாப் காந்த் (Amitabh Kant) முக்கியமானவர். இவர் வெள்ளை நிற டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை பயன்படுத்தி வருகிறார்.

தனது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருடன் தான் இருக்கும் புகைப்படத்தை சமூக வலை தளத்தில் அமிதாப் காந்த் சமீபத்தில் பகிர்ந்துள்ளார். எரிபொருள் விலை உயர்ந்து வருவதால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது வேகமாக நடைபெற வேண்டும் என தனது சமூக வலை தள பதிவில் அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 'மேக் இன் இந்தியா' எலெக்ட்ரிக் வாகனமான டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை பயன்படுத்தி வருவதாகவும் அமிதாப் காந்த் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் ஸ்மூத்னெஸ், சௌகரியம், ரேஞ்ச் பற்றிய பதற்றம் இல்லாதது ஆகியவையும் தன்னை வெகுவாக ஈர்த்துள்ளதாக அமிதாப் காந்த் கூறியுள்ளார்.

பொதுவாக ஐசி இன்ஜின் கொண்ட வழக்கமான கார்களை விட, எலெக்ட்ரிக் கார்களை இயக்குவதற்கும், பராமரிப்பதற்கும் குறைவான செலவே ஆகும். இதனையும் கூட அமிதாப் காந்த் தனது சமூக வலை தள பதிவில் குறிப்பிட்டுள்ளார். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுங்கள் என்று தெரிவித்து, அமிதாப் காந்த் தன்னுடைய சமூக வலை தள பதிவை நிறைவு செய்துள்ளார்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் நேரடி போட்டி என எந்த காரும் கிடையாது. டாடா நெக்ஸானும் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரகத்தை சேர்ந்ததுதான் என்றாலும் கூட, எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகியவை விலை உயர்ந்தவை.

எனவே டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு அவை நேரடி போட்டி கிடையாது. இதற்கிடையே 2022 எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் புது மாடலும் வெகு விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது விற்பனையில் உள்ள டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரியை விட, பெரிய பேட்டரியை இந்த புதிய மாடல் பெற்றிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் பயணம் செய்யும் தொலைவும், தற்போதைய மாடலை விட மிகவும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








