இவ்ளோ பெரிய ஏரியால ஒருத்தர் கிட்ட மட்டும்தான் இருக்கு... இந்த காரின் விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

இந்தியாவின் வட கிழக்கு பிராந்தியத்தின் முதல் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஆர்டபிள்யூடி கார் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இவ்ளோ பெரிய ஏரியால ஒருத்தர் கிட்ட மட்டும்தான் இருக்கு... இந்த காரின் விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

மேகாலயா மாநிலத்தை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு லம்போர்கினி இந்தியா நிறுவனம் ஹூராகேன் எவோ ஆர்டபிள்யூடி (Lamborghini Huracan EVO RWD) சூப்பர் காரை டெலிவரி செய்துள்ளது. இந்தியாவின் வட கிழக்கு பிராந்தியத்தில் டெலிவரி செய்யப்பட்டுள்ள முதல் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஆர்டபிள்யூ சூப்பர் கார் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

இவ்ளோ பெரிய ஏரியால ஒருத்தர் கிட்ட மட்டும்தான் இருக்கு... இந்த காரின் விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

வட கிழக்கு பகுதியில் முதல் முறையாக டெலிவரி செய்யப்பட்டுள்ள லம்போர்கினி ஹூராகேன் எவோ ஆர்டபிள்யூடி சூப்பர் கார் சிகப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறத்தை லம்போர்கினி நிறுவனம் 'ரோஸோ எஃபெஸ்டோ' (Rosso Efesto) என அழைக்கிறது. சாலையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் இந்த நிறம் உள்ளது.

இவ்ளோ பெரிய ஏரியால ஒருத்தர் கிட்ட மட்டும்தான் இருக்கு... இந்த காரின் விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

இதுகுறித்து லம்போர்கினி இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரியான சரத் அகர்வால் கூறுகையில், ''இந்தியாவின் வட கிழக்கு பிராந்தியத்தில் முதல் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஆர்டபிள்யூடி காரை டெலிவரி செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஷில்லாங் நகரில் (மேகாலயா மாநிலத்தில் உள்ள நகரம்) இந்த கார் டெலிவரி செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

இவ்ளோ பெரிய ஏரியால ஒருத்தர் கிட்ட மட்டும்தான் இருக்கு... இந்த காரின் விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

லம்போர்கினி ஹூராகேன் எவோ ஆர்டபிள்யூடி காரில், நேச்சுரலி அஸ்பிரேட்டட் வி10 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 610 பிஎஸ் பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 560 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 7 ஸ்பீடு ட்யூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

இவ்ளோ பெரிய ஏரியால ஒருத்தர் கிட்ட மட்டும்தான் இருக்கு... இந்த காரின் விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

இது பின் பக்க சக்கரங்களை மட்டுமே இயக்குகிறது. ரியர் வீல் டிரைவ் வாகனமாக இருந்தாலும் கூட, லம்போர்கினி ஹூராகேன் எவோ ஆர்டபிள்யூ காரானது, பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3.3 வினாடிகளில் எட்டி விடும். அதே நேரத்தில் மணிக்கு 200 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 9.3 வினாடிகளில் எட்டக்கூடிய திறனை இந்த கார் பெற்றுள்ளது.

இவ்ளோ பெரிய ஏரியால ஒருத்தர் கிட்ட மட்டும்தான் இருக்கு... இந்த காரின் விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

லம்போர்கினி ஹூராகேன் எவோ ஆர்டபிள்யூடி சூப்பர் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 325 கிலோ மீட்டர்கள் ஆகும். இந்த காரின் அட்டகாசமான செயல்திறனை இந்த எண்கள் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம். அதே நேரத்தில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஆர்டபிள்யூடி சூப்பர் காரின் முன் மற்றும் பின் பகுதியில் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்ளோ பெரிய ஏரியால ஒருத்தர் கிட்ட மட்டும்தான் இருக்கு... இந்த காரின் விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

இந்த காரின் முன் பகுதியில் 8 பிஸ்டன் காலிபர்களும், பின் பகுதியில் 4 பிஸ்டன் காலிபர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. லம்போர்கினி ஹூராகேன் எவோ ஆர்டபிள்யூடி சூப்பர் காரில் 19 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. பைரெலி பி ஜீரோ டயர்களை லம்போர்கினி ஹூராகேன் எவோ ஆர்டபிள்யூ கார் பெற்றுள்ளது.

இவ்ளோ பெரிய ஏரியால ஒருத்தர் கிட்ட மட்டும்தான் இருக்கு... இந்த காரின் விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

ட்ராக்ஸன் கண்ட்ரோல், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் உள்பட பல்வேறு வசதிகளும் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஆர்டபிள்யூ காரில் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர வெப் ரேடியோ, டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட வசதிகளையும் இந்த கார் பெற்றுள்ளது.

இவ்ளோ பெரிய ஏரியால ஒருத்தர் கிட்ட மட்டும்தான் இருக்கு... இந்த காரின் விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

ரெகுலர் லம்போர்கினி ஹூராகேன் காரை காட்டிலும், ஹூராகேன் காரின் எவோ வெர்ஷன் மேம்பட்டது. ஏரோடைனமிக்ஸ் (Aerodynamics) விஷயத்தில் லம்போர்கினி நிறுவனம் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. இது மிகவும் விலை உயர்ந்த கார் ஆகும். இதன் எக்ஸ் ஷோரூம் விலையே 3.21 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்ளோ பெரிய ஏரியால ஒருத்தர் கிட்ட மட்டும்தான் இருக்கு... இந்த காரின் விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

ஆன் ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும். ஆனால் இந்தியாவின் வட கிழக்கு பகுதியில் டெலிவரி செய்யப்பட்டுள்ள முதல் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஆர்டபிள்யூ காரின் உரிமையாளர் பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. இந்த பிராந்தியத்தில் இந்த காரை வாங்கியிருக்கும் முதல் மற்றும் ஒரே நபர் என்பதால், அவரை பற்றி தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக உள்ளனர்.

இவ்ளோ பெரிய ஏரியால ஒருத்தர் கிட்ட மட்டும்தான் இருக்கு... இந்த காரின் விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

அவரை பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். சமீப காலமாக இந்திய சந்தையில் லம்போர்கினி கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) காருக்கு, பெரும் வரவேற்பு காணப்படுகிறது. இந்திய திரை பிரபலங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் பலரிடம் லம்போர்கினி உருஸ் கார் இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 2, 2022, 18:06 [IST]
English summary
North east india s first lamborghini huracan evo rwd delivered in meghalaya details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+