வெளிநாட்டில் பயன்படுத்திய கார்-பைக்குகளை இந்தியா எடுத்து வருவது சாத்தியமா?.. இதற்காக என்ன செய்ய வேண்டும்?

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அவர்களின் கார் மற்றும் பைக்குகளை இந்தியாவிற்கு எடுத்து வர முடியுமா?, அவ்வாறு எடுத்து வர முடியும் என்றால் அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த கூடுதலான விரிவான விபரங்களைக் காணலாம்.

இந்தியர்கள் மத்தியில் வெளிநாட்டு மோகம் பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதன் காரணமாக வேலைக்காக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு குடிபெயர்வோர்களின் எண்ணிக்கை சமீப சில காலமாக அதிகரித்துள்ளது. அவ்வாறு வேலைக்கு செல்பவர்கள் தங்களின் சௌகரியத்திற்காக வீடு, கார், பைக் என அனைத்தையும் உருவாக்கிக் கொண்டு அங்கேயே சில வருடங்களுக்கு செட்டில் ஆகி விடுகின்றனர். இவ்வாறு இருப்பவர்கள் ஒரு சில வருட இடைவெளியிலேயே சொந்த நாட்டின் அருமை புரிந்து காலப் போக்கில் மீண்டும் தாய் நாடான இந்தியா திரும்புவதுண்டு.

என்ஆர்ஐ

அவ்வாறு அவர்கள் திரும்பி வரும்போது தாங்கள் பயன்படுத்திய வாகனங்களை விட்டு வர மனமில்லாமல், அவற்றையும் தங்களுடன் எடுத்து வர நினைப்பர். பார்த்து பார்த்து வாங்கிய என்பதால் அவற்றை அங்கு விட்டு வர அவர்கள் துளியளவும் விரும்புவதில்லை. இந்த மாதிரியானவர்களுக்கு உதவும் விதமாகவே இந்த பதிவை நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் வெளியிட்டுள்ளது. இதில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (Non Resident Indian) தாங்கள் வெளிநாடுகளில் பயன்படுத்திய வாகனங்களை எவ்வாறு இந்தியா எடுத்து வர என்ன மாதிரியான விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன என்பது பற்றியே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு குடியேறி குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது ஆகியிருக்க வேண்டும். வெளிநாட்டு வாகனங்களை இந்தியா கொண்டு வருவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டாய விதிகளில் இதுவும் ஒன்று. எனவே, குறைந்தபட்சம் நீங்கள் இந்தியாவில் இருந்து வேறு நாடுக்கு வெளியேறி இரண்டு வருடங்களாகவது ஆகியிருத்தல் வேண்டும். இதுமட்டுமில்லைங்க, இந்தியாவில் அந்த வாகனத்தை இறக்குமதி செய்ய மற்ற தகுதியும் இருத்தல் வேண்டும் என விதிகள் கூறுகின்றன.

நீங்கள் முழுமையாகவே இந்தியா குடிபெயரும் பொருட்டு நாடு திரும்பினால் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், விதிகள் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது நாட்டில் வசிக்க திட்டமிட்டிருக்க வேண்டும் என்கின்றது. எனவே, நீண்ட நெடிய நாட்கள் விடுப்பில் வரும் வெளிநாடு வாழ் இந்தியர்களும் தங்களின் வெளிநாட்டு வாகனங்களை இந்தியாவிற்குக் கொண்டு வர முடியும். மேலும், பைக் அல்லது கார் எதுவாக இருந்தாலும் நீங்கள் இந்தியா திரும்பிய ஆறு மாதங்களுக்குள் அவற்றை நாட்டிற்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

இந்த கால இடைவெளியைக் கடந்துவிட்டால் அவற்றை நாடு எடுத்து வருவது சற்று சிக்கலே. இதேபோல், குறைந்தபட்சம் மூன்று வருடத்திற்கு ஒரே இடத்தில் வசித்திருக்க வேண்டும். இடமாற்றம் செய்திருக்கக் கூடாது. அவ்வாறு செய்திருந்தால் வெளிநாட்டு வாகனங்களை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் ஏற்படும். உங்கள் வாகனத்தின் சிசி திறன் 75 சிசி முதல் 500 சிசி வரை இருக்கும் என்றால் புதிய மற்றும் பழைய கார்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் விலக்கப்படும். அதுவே, இந்த சிசி யை மீறிய வாகனங்களாக இருக்கும் என்றால் கடுமையான விதிகளுக்கு அவை உட்படுத்தப்படும்.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த காரை உடனுக்குடன் விற்றுவிட நினைத்தால் அது இயலாது. குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது அந்த வாகனம் உங்கள் பெயரிலேயே இருத்தல் வேண்டும். இதற்கு பின்னர் மட்டுமே அந்த வாகனத்தை வேறு ஒரு நபருக்கு விற்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. குடும்பத்தில் ஓர் நபரால் மட்டுமே டிரான்ஸ்பரை ஏற்றுக் கொள்ள முடியும் என்பது கடைசி விதியாகும்.

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு மிகக் கடுமையான (உச்சபட்ச) அளவில் வரி வசூலிக்கப்படுகின்றது. களமிறக்கப்படும் வாகனம் புதியது அல்லது பழையது அல்லது சிபியூ என எதுவாக இருந்தாலும் வரி பொருந்தும். 60 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வரி வசூலிக்கப்படுகின்றது. பயன்படுத்திய வாகனங்களுக்கே இருப்பதிலேயே அதிக வரி வசூலிக்கப்படுகின்றது. வாகனத்தின் மதிப்பில் இருந்து சுமார் 125 சதவீதம் வரியாக வசூல் செய்யப்படுகின்றது.

வெளிநாட்டு வாகனங்களை இந்தியா இறக்குமதி செய்ய தேவைப்படும் ஆவணங்கள்:

  • கார் அல்லது பைக்கிற்கான காப்பீட்டு ஆவணம்
  • பேங்க் டிராஃப்ட்
  • ஜிஏடிடி யின் அறிவிப்பு (இது இறக்குமதி செய்யப்படும் பொருளின் மதிப்பு பற்றி சுங்க அதிகாரிகள் வழங்கும் சான்று)
  • வாகனத்தின் பர்சேஸ் காப்பி
  • லேடிங் பில் (ஏற்றுமதியை பார்சல் நிறுவனம் ஏற்றுக் கொண்டதற்காக வழங்கப்படும் சான்று இதுவாகும்)
  • டியூட்டி என்டைட்டில்மென்ட் பாஸ் புக், டியூட்டி எக்செம்ப்சன் என்டைட்டில்மென்ட் சான்று அல்லது எக்ஸ்போர்ட் கிரெடிட் குவாரண்டி கார்பரேஷன் இந்தியா வழங்கும் சான்று. இந்த ஆவணங்களே ஓர் வெளிநாட்டு வாகனத்தை இந்தியா கொண்டு வருவதற்கு தேவைப்படும் சான்றுகள் ஆகும்.
Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Nri can do shift their vehicle to india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X