Just In
- 4 hrs ago
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- 4 hrs ago
டாடாவிற்கு சரியான போட்டி தயார்... இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் காரை போட்டி போட்டு புக் பண்றாங்க!!
- 6 hrs ago
எந்த ஸ்கூட்டரிலும் இவ்ளோ பெரிய-அகலமான டயரை பார்க்க முடியாது.. சொன்னபடியே விற்பனைக்கு வந்தது ஸும் ஸ்கூட்டர்!
- 7 hrs ago
பெரிய பெரிய ஜாம்பவான்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்த டொயோட்டா! உலகின் முதல் இடம்!
Don't Miss!
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- News
ஹாக்கி உலகக் கோப்பை 2023 : ஒடிசாவின் பொருளாதாரத்தில் ‘பாசிட்டிவ்’ தாக்கம் ஏற்படுத்தியது எப்படி?
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Movies
பேயாட்டம் ஆடிய காஜல் அகர்வால்.. கருங்காப்பியம் டிரைலர்.. மிரண்டு போன விஜய்சேதுபதி!
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
ஹூண்டாய் கார்களை இந்த டிசம்பரில் வாங்குவதே புத்திசாலித்தனம்!! சலுகைகளை வாரி வழங்கியுள்ளனர்...
பொதுவாகவே கார்கள் விற்பனை வருட இறுதி மாதங்களில் தான் சூடுப்பிடிக்கும். வெளிநாடுகளில் கிறித்துமஸ் பண்டிகையில் புதிய காரை வாங்கவே மக்கள் பலர் விரும்புகின்றனர். இந்தியாவிலும் வருட இறுதி மாதங்களிலேயே கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகுகின்றன. இதனை நன்கு தெரிந்துக்கொண்ட நிறுவனங்களுள் ஒன்றான ஹூண்டாய் மோட்டார்ஸ் வழக்கம்போல் அதன் குறிப்பிட்ட கார்களுக்கு வருட இறுதி மாத சலுகைகளை அறிவித்துள்ளது.
ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்
இந்தியாவில் ஹூண்டாய் மோட்டார்ஸின் முதல் எலக்ட்ரிக் காரான கோனா எலக்ட்ரிக்கை இந்த 2022ஆம் ஆண்டு முடிவதற்கு உள்ளாக வாங்குவோர் அதிகப்பட்சமாக சுமார் ரூ.1.50 இலட்சம் வரையில் சேமிக்க முடியும். இந்த ரூ.1.50 இலட்சத்தையும் கோனா எலக்ட்ரிக் காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் பணம் தள்ளுபடியாக பெற முடியும். மற்றப்படி கார்ப்பிரேட் சலுகைகள் அல்லது எக்ஸ்சேஞ்ச் போனஸ் எதுவும் இந்த எலக்ட்ரிக் காருக்கு அறிவிக்கப்படவில்லை.

விற்பனையில் எம்ஜி இசட்.எஸ் இவி மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிஒய்டி அட்டோ 3 எலக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக விளங்கும் இந்த ஹூண்டாய் காரில் 39kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த பேட்டரி வாயிலாக அதிகப்பட்சமாக 136 எச்பி மற்றும் 395 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காரில் பெற முடியும். கோனா எலக்ட்ரிக்கின் ARAI-ஆல் சான்றளிக்கப்பட்ட ரேஞ்ச் ஆனது 452கிமீ ஆகும்.
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்
இந்தியாவில் தற்சமயம் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை குறைவான ஹூண்டாய் கார்களுள் கிராண்ட் ஐ10 நியோஸை ஒன்றாக சொல்லலாம். இந்த ஹூண்டாய் ஹேட்ச்பேக் காருக்கு ரூ.63,000 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ரூ.50,000 என்ற பெரும் பணம் தள்ளுபடி அடங்குகிறது. ஆனால் இந்த பணம் தள்ளுபடி ஆனது கிராண்ட் ஐ10 நியோஸின் 1.0 லிட்டர் என்ஜின் வேரியண்ட்டில் மட்டுமே பெற முடியுமாம்.
அதுவே, 1.2 லிட்டர் என்ஜின் வேரியண்ட்களுக்கு ரூ.20,000 வரையிலும், சிஎன்ஜி வேரியண்ட்டிற்கு ரூ.25,000 வரையிலான பணம் தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளன. இந்த பணம் தள்ளுபடி உடன் ரூ.10,000 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.3,000 மதிப்பில் கார்ப்பிரேட் தள்ளுபடி உள்ளிட்டவையும் இந்த டிசம்பர் மாதத்திற்கான சலுகைகளாக கிராண்ட் ஐ10 நியோஸிற்கு வழங்கப்பட்டுள்ளன. கிராண்ட் ஐ10 நியோஸில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன.
ஹூண்டாய் அவ்ரா
செடான் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை நம் நாட்டில் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இருப்பினும், இருப்பதிலேயே அதிகம் விற்பனையாகும் செடான் கார்களுள் ஒன்றாக ஹூண்டாய் அவ்ரா விளங்குகிறது. அவ்ரா காரின் சிஎன்ஜி வேரியண்ட்டை இந்த டிசம்பரில் வாங்குவதன் மூலமாக ரூ.43,000 வரையிலான பணத்தை மிச்சப்படுத்த முடியும். அவ்ரா சிஎன்ஜி காருக்கு ரூ.30,000 பணம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பெட்ரோல் வேரியண்ட்களுக்கு ரூ.20,000 பணம் தள்ளுபடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
ரூ.10,000 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆனது அவ்ரா சிஎன்ஜி வேரியண்ட் உடன் 1.2 லிட்டர் என்ஜின் வேரியண்ட்டிற்கும் வழங்கப்பட்டுள்ளது. ரூ.3,000 மதிப்பிலான கார்ப்பிரேட் தள்ளுபடியை அவ்ராவின் அனைத்து வேரியண்ட்களிலும் பெற முடியும். கிராண்ட் ஐ10 நியோஸில் வழங்கப்படும் அதே பெட்ரோல் என்ஜின் தேர்வுகள் தான் அவ்ராவிலும் கொடுக்கப்படுகின்றன. அவ்ராவிற்கு விற்பனையில் மாருதி சுஸுகி டிசைர் மற்றும் ஹோண்டா அமேஸ் போட்டியாக விளங்குகின்றன.
ஹூண்டாய் ஐ20
மாருதி சுஸுகி பலேனோ, டாடா அல்ட்ராஸ் போன்ற பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் கார்களுக்கு விற்பனையில் போட்டியாக விளங்கும் வகையில் ஹூண்டாய் விற்பனை செய்யும் கார் தான் ஐ20 ஆகும். இன்னும் சொல்லப்போனால், அவற்றை காட்டிலும் ஹூண்டாய் ஐ20 ஆனது சற்று விலைமிக்கதாகவே உள்ளது. இருப்பினும் ஐ20 காருக்கு இந்த மாதத்திற்காக வெறும் ரூ.30,000 வரையிலான சலுகைகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் ரூ.20,000 பணம் தள்ளுபடி மற்றும் ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் என்பவை அடங்குகின்றன. ஆனால் இதில் பிரச்சனை என்னவென்றால், இந்த சலுகைகளை ஐ20 காரின் மத்திய நிலை வேரியண்ட்களான மக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்களில் மட்டுமே பெற முடியும். ஐ20 காரில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில் டீசல் என்ஜின் தேர்வை இந்த ஹேட்ச்பேக் காரில் வழங்குவதை அடுத்த ஆண்டில் ஹூண்டாய் நிறுத்தி கொள்ள உள்ளது.
-
ரிஷப் பண்ட்டை காப்பாற்றியவர்களுக்கு இவ்ளோ பெரிய பரிசா! நாடே இன்னைக்கு அவங்களை பத்திதான் பேசிகிட்டு இருக்கு!
-
நம்பவே முடியல... படத்தில் உள்ள இந்த பைக்கிற்கு இப்படியொரு வரலாறு உள்ளதா!! முழு விபரம்...
-
டாடாவின் இந்த கார் மாடல்களில் பெட்ரோல் தேர்வை வாங்க முடியாது.. டீசலில் மட்டுமே கிடைக்கும்! இது ஏன் தெரியுமா?