எங்க வேணாலும் நிப்பாட்டி சமைக்கலாம்... ஒரு சின்ன பிஸ்னஸ் பண்ண ஏற்ற வண்டி ரெடி...
ஓமேகா சைக்கி மொபிலிட்டி நிறுவனம் இந்தியாவில் தற்போது ரெடிமேட் மொபைல் கிச்சன் வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம்.

இன்று நாம் சாலையோரங்களில் சிலர் ஆட்டோக்களை மாடிஃபிகேஷன் செய்து அதைக் கடையாக மாற்றி அதில் ரோட்டோர கடைகளை நடத்தி வருவதைப் பார்த்திருப்போம். குறிப்பாகச் சாலையோ மாலை நேர உணவகங்கள், பாஸ்ட் புட் உணவகங்கள், அலுவலகம் இருக்கும் பகுதியில் மதிய நேர உணவகங்கள், லைவ் கவுண்டர்கள் எனப் பல விதமான பிஸ்னஸ்கள் நடக்கிறது. இப்படியாக பிஸ்னஸ்களுக்கு பலர் தற்போது மார்கெட்டில் உள்ள வாகனங்களை வாங்கி அதை மாடிஃபிகேஷன் செய்து பயன்படுத்துவார்கள்.

ஆனால் இனி அப்படி வாங்கத் தேவையில்லை டில்லியை மையமாகக் கொண்டு செயல்படும். ஓமேகா சைக்கி மொபிலிட்டி நிறுவனம் தற்போது MOV என நடமாடும் கிச்சன் கொண்ட வாகனத்தை உருவாக்கியுள்ளது. meals of Wheels என்பதன் சுருக்கமாகவே MOV என இந்த வாகனத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனது 4வது டீலர் ஷிப்பை திறந்துள்ளது. அங்கு வைத்து இந்த அறிமுக நிகழ்ச்சியை நடத்தியது. இந்த MOV வாகனத்தைப் பொருத்தவரை ஃபாஸ்ட் மற்றும் ஃபிக்ஷட் பேட்டரி ஆப்ஷன்களுடன் வருகிறது.

இது குறித்து இந்நிறுவனத்தின் சேர்மன் உதய் நராங் கூறும் போது : "இந்த இண்டஸ்டிரியின் முதல் எலெக்ட்ரிக் வாகனமாக OSM MOV வாகனத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறோம். இந்த வாகனத்தை வாங்க கிட்டதட்ட இப்பொழுதே 500க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த வாகனம் இந்தியா முழுவதும் உள்ள மொபைல் கிச்சன் தொழிலின் முகத்தையே மாற்றிவிடும். மேலும் வரும் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் மேலும் பல வாகனங்களை வெளியிடும் முடிவில் இருக்கிறோம். " எனக் கூறினார்.

கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவலுக்கு பிறகு இப்படியாக மொபைல் கிச்சன் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவலிலிருந்து இந்த உலகம் மீண்டு வந்துள்ள நிலையில் தொடர்ந்து இந்த தொழில் நிலைத்தன்மையை அடையும் என எதிர்பார்க்கலாம். இந்த தொழில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடும் ரெஸ்டாரென்ட்களை விடச் சிறப்பான தொழிலாக இருக்கும்.

இந்த வாகனம் மூலம் ஒருவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொ இடத்தில் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாகத் தனது தொழிலை நடத்தலாம். மேலும் குறிப்பிட்ட ரக உணவுகள் தான் என இல்லாமல் எப்படி வேண்டுமானாலும் உணவுகளைத் தயாரிக்க முடியும்

இந்த OSM MOV வாகனம் ரூ7 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. வரும் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த வாகனத்தின் டெலிவரி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த வாகனத்திற்கான புக்கிங் துவங்கியுள்ளது. இந்த வாகனத்தை வாங்கத் துவங்கும் எண்ணம் கொண்ட மக்கள் ரூ19,999 டோக்கன் அட்வான்ஸாக கொடுத்து இந்த வாகனத்தை புக் செய்து கொள்ளலாம்.

இந்த வாகனம் முற்றிலும் எலெக்ட்ரிக்கில் இயங்கும் திறன் கொண்டது. OSM நிறுவனம் மொபைல் கிச்சன் இன்க்யூபேட்டர் மற்றும் எம்பிளாய்மெண்ட் புரோகிராம் ஒன்றை உருவாக்கியுள்ளது. டயர் 2 மற்றும் டயர் 3 பகுதியில் உள்ள தொழில்முனைவோர்கள் தங்கள் பிஸ்னஸை மூன்று சக்கர வாகனத்திற்கு மாற்ற நினைத்தால் அவர்களுக்கு ஒரு வாய்பாக மொபைல் கிச்சன் செட்டப்பை இந்நிறுவனம் சிறிது காலத்திற்கு ட்ரையல் பிரியட் முறையில் வழங்குகிறது.

இதன் மூலம் அவர்கள் இந்த வாகனத்தில் தனது பிஸ்னஸை நடத்திப் பார்க்க முடியும். இது எந்த அளவிற்கு அவர்களுக்கு செளகரியமாக இருக்கிறது என்பதை டெஸ்ட் செய்து பார்த்த பிறகு இதை அவர்கள் சொந்தமாக வாங்கிக்கொள்ளலாம். மேலும் இந்த MOV வாகனத்தை வாங்க பைனான்ஸ் உதவிகளையும் இந்நிறுவனம் வழங்குகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








