என்னங்க சொல்றீங்க... ஒருமுறை சார்ஜ் செய்தால் 1,207கிமீ-க்கு பயணிக்கலாமா? ஜெனரேஷன் 2 எலக்ட்ரிக் கார்!!

கஸ்டம் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான ஓவர்லேண்ட்-இ புதிய ஜெனரேஷன் 2 என்கிற எலக்ட்ரிக் வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சுமார் 1,207கிமீ ரேஞ்சை கொண்டதாக உள்ள இந்த கஸ்டம் எலக்ட்ரிக் வாகனத்தை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

என்னங்க சொல்றீங்க... ஒருமுறை சார்ஜ் செய்தால் 1,207கிமீ-க்கு பயணிக்கலாமா? ஜெனரேஷன் 2 எலக்ட்ரிக் கார்!!

2017இல் ஒரு பாலைவன ரோந்து வாகனத்தை உருவாக்குவதில் இருந்து தோன்றிய கஸ்டம் நிறுவனம் தான் ஓவர்லேண்ட்-இ ஆகும். கஸ்டம் நிறுவனம் என ஏன் இதை கூறுகிறோம் என்றால், மற்ற வாகனங்களில் இருந்து பாகங்களை பெற்று இந்த நிறுவனத்தால் சொந்த விருப்பத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

என்னங்க சொல்றீங்க... ஒருமுறை சார்ஜ் செய்தால் 1,207கிமீ-க்கு பயணிக்கலாமா? ஜெனரேஷன் 2 எலக்ட்ரிக் கார்!!

தற்போதுவரையில் ஓவர்லேண்ட்-இ குழுவினரால் எம்கே1 மற்றும் ஜெனரேஷன்2 என்கிற இரு எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் புதியதாக தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜெனரேஷன்2 ஆனது முழு-எலக்ட்ரிக் ஆஃப்-ரோடு வாகனம் ஆகும். முக்கிய சிறப்பம்சமாக, சுமார் 1207கிமீ ரேஞ்ச்சில் இந்த எலக்ட்ரிக் வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

என்னங்க சொல்றீங்க... ஒருமுறை சார்ஜ் செய்தால் 1,207கிமீ-க்கு பயணிக்கலாமா? ஜெனரேஷன் 2 எலக்ட்ரிக் கார்!!

அதாவது இந்த ஜெனரேஷன் 2 வாகனத்தின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக்கொண்டு அதிகப்பட்சமாக 1,207கிமீ தொலைவிற்கு பயணிக்கலாமாம். அதுமட்டுமின்றி, ஆஃப்-ரோடு வாகனமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், இயக்க ஆற்றல் தீர்ந்துவிடுமோ என்கிற பயமின்றி ஜெனரேஷன் 2 -வினை எந்தவொரு பாதைக்கும், எவ்வளவு தூரத்திற்கும் கொண்டுச்செல்லலாம்.

என்னங்க சொல்றீங்க... ஒருமுறை சார்ஜ் செய்தால் 1,207கிமீ-க்கு பயணிக்கலாமா? ஜெனரேஷன் 2 எலக்ட்ரிக் கார்!!

மொத்தம் இரு ஜெனரேஷன் 2 வாகனங்களை தயாரிக்க ஓவர்லேண்ட்-இ கஸ்டம் திட்டமிட்டுள்ளது. இதில் ஒன்று சாதாரண சாலைகளுக்கு கொண்டு செல்லும் வகையில் சாலை-சார்ந்த வெர்சனாகவும், மற்றொன்று முரட்டுத்தனமான தோற்றத்துடன் முழுக்க முழுக்க ஆஃப்-ரோடு-சார்ந்த வெர்சனாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், இவை இரண்டையும் நடப்பு 2022ஆம் ஆண்டிற்குள்ளாக தயாரித்து முடிக்க இந்த கஸ்டம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

என்னங்க சொல்றீங்க... ஒருமுறை சார்ஜ் செய்தால் 1,207கிமீ-க்கு பயணிக்கலாமா? ஜெனரேஷன் 2 எலக்ட்ரிக் கார்!!

தோற்றத்தை பொறுத்தவரையில், ஓவர்லேண்ட்-இ ஜெனரேஷன் இவி ஆனது ஆக்ரோஷமான வீடியோ கேம்களில் வரும் கார்களை போல மிகவும் அகலமாக, பார்ப்பதற்கே பயங்கரமான தோற்றத்தை கொண்டுள்ளது. இதன் முன்பக்கத்தில் வழங்கப்பட்டிருக்கும் பேனல் போன்றதான கருப்பு நிற க்ரில் பகுதி நமக்கு தற்கால மாடர்ன் நிஸான் கார்களை நினைவூட்டுகிறது.

என்னங்க சொல்றீங்க... ஒருமுறை சார்ஜ் செய்தால் 1,207கிமீ-க்கு பயணிக்கலாமா? ஜெனரேஷன் 2 எலக்ட்ரிக் கார்!!

அதுவே, நேர்த்தியான முன்பக்க எல்இடி ஹெட்லேம்ப்கள் எல்இடி டிஆர்எல்களுடன் வளைவான கோடு போல் கொடுக்கப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக இந்த எலக்ட்ரிக் வாகனத்தின் முன்பக்க பொனெட்டை பற்றி கூறியே ஆக வேண்டும். ஏனெனில் ஜெனரேஷன் 2 -வின் பொனெட் டிராக்டர்களில் வழங்கப்படுவதை போல் நன்கு நீளமானதாக, ஆங்காங்கே வளைவுகளை கொண்டதாக உள்ளது.

என்னங்க சொல்றீங்க... ஒருமுறை சார்ஜ் செய்தால் 1,207கிமீ-க்கு பயணிக்கலாமா? ஜெனரேஷன் 2 எலக்ட்ரிக் கார்!!

இதன் காரணமாக வாகனத்தின் வீல்பேஸ் அளவு (முன், பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம்) அதிகமானதாக உள்ளது. இதற்கேற்ப இந்த எலக்ட்ரிக் காரில் பொருத்தப்பட்டுள்ள டயர்கள், ஜெனரேஷன் 2 ஆனது எந்தவொரு பாதைக்கும் தைரியமாக கொண்டு செல்லக்கூடிய வாகனம் என்பதை வெளிக்காட்டுகின்றன. இருப்பினும் காரின் பக்கவாட்டு பகுதி எளிமையானதாக காட்சியளிக்கிறது.

என்னங்க சொல்றீங்க... ஒருமுறை சார்ஜ் செய்தால் 1,207கிமீ-க்கு பயணிக்கலாமா? ஜெனரேஷன் 2 எலக்ட்ரிக் கார்!!

ஆஃப்-ரோடு வாகனம் என்பதை நியாயப்படுத்தும் விதமாக 4 எல்இடி ஸ்பாட்டர் விளக்குகள் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ளன. எலக்ட்ரிக் காராக இருப்பினும், இந்த ஜெனரேஷன் 2 வாகனத்தின் பின்பக்கத்தில் 2 ஜெர்ரிகேன்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அழகிற்காக மட்டுமே பொருத்தப்பட்டிருக்கும் என நினைக்கிறோம். அல்லது தொலைத்தூர பயணங்களுக்கு செல்ல நீர் போன்ற திரவங்களை எடுத்து செல்வதற்காக இருக்கலாம்.

என்னங்க சொல்றீங்க... ஒருமுறை சார்ஜ் செய்தால் 1,207கிமீ-க்கு பயணிக்கலாமா? ஜெனரேஷன் 2 எலக்ட்ரிக் கார்!!

இந்த எலக்ட்ரிக் காரின் உட்புறத்தில் ஒரு வரிசையில் மட்டுமே இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆதலால் பின்பக்கத்தில் பொருட்களை வைத்து செல்லும் பகுதியில் தாராளமாக 4 கூடுதல் டயர்களை வைத்து செல்லலாம். இதுவும் ஜெனரேஷன் 2-வின் ஆஃப்-ரோடு பண்பினை மெருக்கேற்றுவதாக உள்ளது. பின்பக்கத்தில் எல்இடி டெயில்லைட்கள் நேர்த்தியாக செவ்வக வடிவில் உள்ளன.

என்னங்க சொல்றீங்க... ஒருமுறை சார்ஜ் செய்தால் 1,207கிமீ-க்கு பயணிக்கலாமா? ஜெனரேஷன் 2 எலக்ட்ரிக் கார்!!

இந்த வருடத்தில் 2 யூனிட்களை தயாரிப்பதை தொடர்ந்து, அடுத்த 2023 ஜூன் மாதத்தில் இருந்து ஜெனரேஷன் 2 எலக்ட்ரிக் கார்களை அதிக எண்ணிக்கையில் இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் தயாரிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. முக்கியமாக இந்த எலக்ட்ரிக் கார் இராணுவ துறைகளையும், மோட்டார்ஸ்போர்ட் குழுக்களையும் டார்க்கெட் செய்து கொண்டுவரப்பட உள்ளது. ஏனெனில் இவர்களுக்கு இத்தகைய ஆற்றல்மிக்க வாகனம் தேவைப்படும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 16, 2022, 14:45 [IST]
English summary
Overland e generation 2 electric off road car unveiled range features details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+