இந்திய கார்களுக்கு தாறுமாறாக வரியைப் போடும் பாகிஸ்தான் அரசு... இதுக்கு ஜிஎஸ்டியே பரவாயில்லை போல...
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்களுக்கு அந்நாட்டு அரசு ஏராளமாக வரியை விதிக்கிறது. இதனால் இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் கார்கள் வெளிநாடுகளில் அதிக விலைக்கு விற்பனையாகிறது. இந்த தகவலை முழுமையாகக் காணலாம் வாருங்கள்

வெளிநாடுகளுக்குத் தயாரிக்கப்படும் வாகனங்களை இந்தியாவிற்குள் கொண்டு வர வேண்டும் என்றால் இந்திய அரசு அதற்கான வரி விதிக்கிறது. அதாவது இந்தியாவில் அந்த வாகனத்தை வாங்கினால் அதற்கான வரி இந்திய அரசிற்குக் கிடைக்கும்.அதற்கு மாறாக வெளிநாடுகளிலிருந்து காரை வாங்கினால் வரி கிடைக்காததால் இந்த வரியைப் போட்டுள்ளது. இப்படியாக வெளிநாடுகளிலிருந்து வாங்கப்படும் வாகனங்களுக்கு இந்தியாவில் விதிக்கப்படும் வரியின் அளவு அதிகமாக இருக்கும்.

அதே போல இந்தியாவிலும் ஏராளமான கார்கள் தயாராகிறது. இந்த கார்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. இப்படியாக இந்தியாவில் தயாராகி வெளிநாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்யும் போது இந்திய கார்களுக்கு அந்நாட்டு அரசுகளும் வரி விதிக்கின்றன. இந்த பதிவில் நாம் இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்கள் இந்தியாவில் என்ன விலையில் விற்பனையாகிறது வெளிநாடுகளில் வரியுடன் சேர்த்து என்ன விலையில் விற்பனையாகிறது என காணலாம் வாருங்கள்

இந்தியாவிலிருந்து பெரும்பாலும் நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு கார்கள் ஏற்றுமதியாகிறது. இந்த நாடுகள் இந்திய கார்களுக்கு அதிகமாக வரிகளை விதிக்கின்றனர். அண்டை நாடுகள் தான் என்றாலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களின் விலை நேபாளம் மற்றும் பாகிஸ்தானில் இந்தியாவில் விற்கப்படும் விலையிலிருந்து 3 மடங்கு வரை அதிகமாக விலையில் விற்பனையாகிறது.

உதாரணமாக டாடா சஃபாரி கார் இந்தியாவில் ரூ15.25 முதல் ரூ 23.46 லட்சம் வரை எக்ஸ் ஷோரூம் விலையாக விற்பனையாகிறது. இந்த காரின் விலை நேபாளத்தில் இந்திய மதிப்பில் ரூ63.56 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இது இந்தியாவில் விற்பனையாகும் விலையை விட 2.7 மடங்கு அதிக விலையாகும். அந்நாட்டு மதிப்பில் 83.49 NPR முதல் 1 கோடி NPR வரையிலுமான விலையில் விற்பனையாகிறது. இந்த ஒரு கோடி NPR-ன் மதிப்பே ரூ63.56 லட்சம் ஆகும்

இந்த பட்டியலில் அடுத்தா இருப்பது கியா சோனட் கார் இந்த கார் இந்தியாவில் ரூ7.15 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இதே கார் நேபாளத்தில் 36.90 லட்சம் NPR அதாவது இந்திய மதிப்பில் ரூ23.10 என்ற விலையில் விற்பனையாகிறது. அதாவது இந்திய கார்களுக்கு அந்நாட்டு அரசு ரூ300 சதவீதம் வரை வரிபோடுகிறது.

பாகிஸ்தானைப் பொருத்தவரை சுஸூகி நிறுவனம் தனது பல கார்களை பாகிஸ்தானிற்கு ஏற்றுமதி செய்கிறது. அந்நிறுவனத்தின் ஆல்டோ, வேகன்ஆர், ஸிவிஃப்ட் ஆகிய கார்கள் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிற்கு ஏற்றுமதியாகிறது. அதில் ஆல்டோவை பொருத்தவரை பாகிஸ்தானில் 14.75 லட்சம் PKR என்ற விலையில் விற்பனையாகிறது. இதன் இந்திய மதிப்பு ரூ6 லட்சம், இந்த கார் இந்தியாவில் ரூ3.39 லட்ம் என்ற விலையில் விற்பனையாகிறது.

வேன்ஆர் காரை பொருத்தவரை 20.84 லட்சம் PKR என்ற விலையில் விற்பனையாகிறது. இதன் இந்திய மதிப்பு ரூ8.47 லட்சம், இந்த கார் இந்தியாவில் ரூ5.47 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது.

அதுவும் பாகிஸ்தானில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் விற்பனையான வேகன் ஆர் கார் தற்போது விற்பனையாகிறது. தற்போது இந்தியாவில் மாற்றப்பட்ட கார் பாகிஸ்தானில் அறிமுகம் ஆகவில்லை. மேலும் பாகிஸ்தானில் விற்பனையாகும் ஆல்டோ கார் ஜப்பானில் உள்ள ஸ்பெக்-கெய் என்ற காரின் மாடலை அடிப்படையாக வைத்து தயாராகிறது. இந்த கார் 658 சிசி இன்ஜின் மற்றும் 39 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும்

இந்தியாவில் மக்களுக்கு மிகவும் பிடித்த காரான ஸிவிஃப்ட் காரும் பாகிஸ்தானிற்கு இந்தியாவிலிருந்த தான் ஏற்றுமதியாகிறது. இந்த கார் 27.74 லட்சம் PKR என்ற விலையில் அந்நாட்டில் விற்பனையாகிறது. இதன் இந்திய மதிப்பு ரூ11.28 லட்சம் ஆகும். இந்த கார் இந்தியாவில் ரூ5.92 லட்சம் என்ற அடிப்படை விலையில் விற்பனையாகிறது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்களுக்கு கிட்டத்தட்ட 100 சதவீதம் வரியை விதிக்கிறது பாகிஸ்தான் அரசு.

இந்தியாவில் இந்த கார்களுக்கு எல்லாம் ஜிஎஸ்டி வரி தான் விதிக்கப்படுகிறது. இந்தியாவில் 1500 சிசிக்கு குறைவான இன்ஜினை கொண்ட கார்களுக்கு 18 சதவீதமும், அதற்கு அதிகமான கார்களுகு்கு 28 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் கார்களுக்கான வரி 28 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








