இதை யாருமே எதிர்பார்கல... ஒரே வருசத்துல வாகன விற்பனை இவ்வளவு கூடிருச்சா?

கடந்த அக்டோபர் மாதம் பயணிகள் வாகனங்களின் விற்பனை 29 சதவீதம் அதிகரித்துள்ளதாக சோசைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் மேஷஃபேக்சரர்ஸ் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் வாகன விற்பனை குறித்த அறிக்கையை சோசைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் மேனுஃபேக்சரர்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு வாகன உற்பத்தியாளர்கள் எல்லாம் குழுவாகச் சேர்ந்து ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.

இதை யாருமே எதிர்பார்கல... ஒரே வருசத்துல வாகன விற்பனை இவ்வளவு கூடிருச்சா?

இந்த அமைப்பு கடந்த அக்டோபர் மாத பயணிகள் வாகன விற்பனை குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் மட்டும் பயணிகள் வாகனங்களின் விற்பனை 29 சதவீதம் அதிகரித்துள்ளது. பயணிகள் வாகனம் என்றால் டூவீலர், 3 வீலர், மற்றும் கார்களின் விற்பனையும் சேர்த்து அடங்கும் இது டீலர்களுக்கு டெலிவரி செய்யப்பட்ட கார்களின் விற்பனை நிலைமை தான்.

அதன்படி கடந்த அக்டோபர் மாதம் மொத்தம் 291,113 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2,26,353 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இதில் யூட்டிலிட்டி வாகனங்கள் மட்டும் மொத்தம் 1,41,254 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு மொத்தம் 1,40,926 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. இது 29 சதவீத வளர்ச்சியாகும்

இருசக்கர வாகன செக்மெண்டை பொருத்தவரை ஸ்கூட்டரில் மட்டும் மொத்தம் 5,12,761 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு அக்டோபர் மாதம் மொத்தம் 4,79,459 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. பைக்குகளை பொருத்தவரை மொத்தம் 10,20,295 பைக்குகள் விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டு மொத்தம் 10,17,874 பைக்குகள் விற்பனையாகியிருந்தது.

3 சக்கர வாகன விற்பனை நிலவரத்தைப் பொருத்தவரை 70 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த மாதம் 54,154 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெறும் 31,812 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது.

ஆக மொத்தத்தில் ஒட்டு மொத்தமாக 19,23,032 வாகனங்கள் கடந்த மாதம் விற்பனையாகியிருந்தது. கடந்தாண்டு வெறும் 18,10,856 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. இது வெறும் 6 சதவீத வளர்ச்சி தான். இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் வினோத் அகர்வால் கூறும்போது : " மார்கெட் செண்டிமெண்டின் படி கடந்த மாதம் பண்டிகை காலம் என்பதால் விற்பனை அதிகரித்துள்ளது. பண வீக்கம் மற்றும் அதிக வட்டி விகிதம் கிராமப் பகுதிகளில் விற்பனையைக் குறைத்துள்ளது. மேலும் பகிர்ந்து பயணம் செய்யும் முறை அதிகரித்து வருவதால் 3 வீலர் விற்பனை அதிகமாகியுள்ளது. " எனக் கூறினார்.

இது குறித்து அந்த அமைப்பில் இயக்குநர் ராஜீவ் மேனன் கூறும் போது : " இந்தாண்டின் பயணிகள் வாகன விற்பனை மட்டும் அதிகமாகவில்லை இந்த நிதியாண்டான ஏப்-அக்டோபர் வரையிலான காலகட்டத்திலும் விற்பனை அதிகரித்துள்ளது. ஆனால் இருசக்கர வாகன விற்பனையின் அளவு கடந்த 2016ம் ஆண்டை விடக் குறைவாகவே இருக்கிறது" எனக் கூறினார்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 12, 2022, 16:25 [IST]
English summary
Passenger vehicle sales growth marked 29 percent in October SIAM Says
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+