பெட்ரோல் vs டீசல் vs சிஎன்ஜி.. இந்த மூன்றில் எந்த கார் பெஸ்ட்! மெக்கானிக்குகள்கூட இந்த விஷயத்த சொல்ல மாட்டாங்க
பெட்ரோல், டீசல், சிஎன்ஜி இந்த மூன்றில் எந்த கார்கள் பெஸ்ட் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

என்னதான் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக உலக நாடுகள் பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், வாகன பிரியர்கள் தங்களின் பயணங்களுக்காக பெட்ரோல், டீசல் அல்லது சிஎன்ஜி கார்களை வாங்குவதிலேயே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக இருப்பதே அவற்றை எளிதில் நிரப்பிவிட்டு அடுத்த வேலையை பார்க்க முடியும் என்பதுதான்.

ஆமாங்க, எலெக்ட்ரிக் கார்களை முழுமையாக சார்ஜ் செய்ய வேண்டும் எனில் பல மணி நேரங்கலை செலவு செய்ய வேண்டியிருக்கும். அல்லது, சார்ஜ் மையம் எங்கே இருக்கின்றது என தேடி அலைய வேண்டியிருக்கும். அப்படியே அவை எளிதில் கிடைத்தாலும் பல மணி நேரம் சார்ஜேற்ற காத்திருக்க வேண்டும். தற்போது சார்ஜ் மையங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் பல சார்ஜேற்ற மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகின்றது.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால் ஒரு சிலர் மின் வாகனங்களை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். இந்த மாதிரியான உதவிடும் விதமாக பெட்ரோல், டீசல், சிஎன்ஜி இவற்றில் எந்த வாகனம் சிறந்தது என்பதை வெளிக்காட்டும் விதமாக இந்த பதிவை தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

பெட்ரோல் கார்:
உலகளவில் மிகவும் காஸ்ட்லியான எரிபொருளாக பெட்ரோல் உள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 102.63க்கு விற்கப்படுகின்றது. அதேநேரத்தில், பெட்ரோல் கார்கள் டீசல் மற்றும் சிஎன்ஜி ஆகியவற்றைக் காட்டிலும் சற்று குறைவானதாக உள்ளது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் கடந்த காலங்களில் டீசல் கார்கள் குறைவான விலையில் கிடைத்ததைப் போல் இப்போது பெட்ரோல் கார்கள் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன.

நல்ல எஞ்ஜின் திறனை வெளியேற்றக் கூடியதாக பெட்ரோல் கார்கள் இருக்கின்றன. டீசல் மற்றும் சிஎன்ஜி-யைக் காட்டிலும் இதன் பிக் திறன் அதிகமாக உள்ளது. இதேபோல், பெட்ரோல் கார்கள் குறைவான இரைச்சலையே வெளியேற்றுகின்றன. இதுமட்டுமின்றி, அதிர்வுகள் மற்றும் முரட்டுத் தன்மையும் குறைவாக இருக்கும். பூட் ஸ்பேஸ் மிக தாராளமானதாக இருக்கும்.

மைலேஜ் சற்று குறைவாகதான் பெட்ரோல் கார்கள் வழங்குகின்றன. அதேவேலையில், மெயின்டெனன்ஸ் இவற்றிலேயே மிகவும் குறைவு. காற்றை அசுத்தப்படுத்துவதில் இது முக்கிய பங்காற்றுகின்றது. கார்பன் மோனாக்ஸைடையும், பிற கார்பன் உமிழ்வுகளையும் பெட்ரோல்கள் அதிகளவில் உமிழ்கின்றன. பெட்ரோல் பங்க்குகள் அதிகளவில் இருப்பதால் இவற்றை பயன்படுத்துவது எளிமையானதாக இருக்கின்றது. எனவேதான் பலர் பெட்ரோல் வாகனங்களை தற்போது வாங்க ஆரம்பித்திருக்கின்றனர்.

டீசல் கார்கள்:
டீசலின் விலை சற்று குறைவு உள்ளது. பெட்ரோலை விட ரூ. 6 முதல் 9 ரூபாய் வரை விலை குறைவாக விற்பனைக்குக் கிடைக்கின்றது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ. 94.24 க்கு விற்கப்படுகின்றது. இதன் விலை குறைவாக இருந்தாலும் டீசலில் இயங்கும் கார்களின் விலை பல மடங்கு அதிகமானதாக இருக்கின்றது. ரூ. 2 லட்சம் வரையில் பெட்ரோல் கார்களைக் காட்டிலும் டீசல் கார்களின் விலை அதிகமாக இருக்கின்றது.

டீசல் கார்களின் பிக்-அப் சற்று மந்தமாக இருக்கும். ஆனால், இறுதியில் நல்ல செயல்திறனை வெளியேற்றும். பெட்ரோலில் இயங்கும் கார்களைக் காட்டிலும் டீசல் கார்கள் அதிக செயல்திறன் மிக்கவை ஆகும். பெட்ரோல் கார்களைக் காட்டிலும் இதில் சற்று வைப்ரேஷன் மற்றும் சத்தம் கூடுதலாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இது அதிக மைலேஜை தரும். பெட்ரோல் கார்களைக் காட்டிலும் அதிக மைலேஜை டீசல் கார்கள் தரும்.

இந்த காரணத்திற்காகவும் கடந்த காலங்களில் விலை குறைவாக கிடைத்த காரணத்தினாலுமே இந்தியர்கள் அதிகளவில் டீசல் கார்களை வாங்கினர் என்பது குறிப்பிடத்தகுந்தது. பெட்ரோல் கார்களை போலவே டீசல் கார்களிலும் அதிக பூட் ஸ்பேஸ் இருக்கும். ஆனால், இதனை மெயின்டெனன்ஸ் மிக அதிகம். தொடர்ந்து, கார்பன் உமிழ்வும் மிக மிக அதிகம். இந்த காரணத்திற்காகவே தற்போது டீசல் விஷயத்தில் இந்த அரசு கடும் கெடுபிடி காட்ட ஆரம்பித்திருக்கின்றது. பெட்ரோலை போலவே டீசலும் மிக சுலபமாக விற்பனைக்குக் கிடைக்கின்றது.

சிஎன்ஜி கார்கள்:
மிக மலிவு விலைக் கொண்ட எரிபொருளாக சிஎன்ஜி இருக்கின்றன. இந்த காரணத்திற்காகவும் இது அதிக மைலேஜை வழங்கும் என்கிற காரணதிற்காகவும் மக்கள் அதிகளவில் சிஎன்ஜி கார்களை வாங்கத் தொடங்கியிருக்கின்றனர். சிஎன்ஜி வாகன விற்பனையில் மாருதி சுஸுகி நிறுவனம் முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஒரு கிலோ சிஎன்ஜி இன்றைய நிலவரப்படி சென்னையில் ரூ. 81.90க்கு விற்கப்படுகின்றது.

சிஎன்ஜியால் இயங்கும் வாகனங்கள் பெட்ரோல் வாகனங்களைக் காட்டிலும் அதிக விலையைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. ஆனால், டீசலைக் கார்களை விட குறைவான விலையில் அவை விற்பனைக்குக் கிடைக்கின்றன. மேலும், சிஎன்ஜி வாகனங்கள் டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களைக் காட்டிலும் குறைவான திறனை வெளியேற்றக் கூடியவையாகக் காட்சியளிக்கின்றன.

இந்த வாகனங்களை பெட்ரோலிலும் இயங்கிக் கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பு. ஆகையால், பெட்ரோல் வாகனங்கள் வெளியேற்றக் கூடிய அதே சப்தம் மற்றும் அதிர்வுகளை வெளியேற்றக் கூடியதாக சிஎன்ஜி வாகனங்கள் காட்சியளிக்கின்றன. சிஎன்ஜி சிலிண்டர் வாகனத்தின் பின் பக்கத்தில் பொருத்தப்படுவதனால் இதன் பூட் ஸ்பேஸ் பெரியளவில் இழக்கப்படுகின்றது.

ஆகையால், லக்கேஜை குறைவான அளவில் மட்டுமே ஏற்றி செல்ல முடியும். இதை மெயின்டெயின் செய்வது பெட்ரோல் காரை பராமரிப்பதைக் காட்டிலும் அதிக செலவீணத்தை வழங்கும். ஆனால், இந்த செலவு டீசல் காரை காட்டிலும் குறைவு ஆகும். இதேபோல், சிஎன்ஜி கிடைப்பதிலும் சற்று சிக்கல் நிலவுகின்று. இன்னும் சில மாநிலங்களில் சிஎன்ஜி பயன்பாட்டிற்கே வராத நிலை தென்படுகின்றது.

சிஎன்ஜி வாகனத்தின் பிளஸ்ஸாக, அது குறைந்தளவு மாசு வெளியேற்றும் திறன் இருக்கின்றது. ஆம், இந்த வாகனம் பெட்ரோல், டீசல் வாகனங்களைக் காட்டிலும் மிகக் குறைவான அளிவிலேயே மாசை வெளியேற்றும். எனவேதான் இதனை பசுமை வாகனமாக வாகனம் கருதுகின்றது.


Click it and Unblock the Notifications








