கார ஓரங்கட்ட வச்சுடும்போல.. ஒரு கிலோ சிஎன்ஜி-க்கு 50 கிமீ பயணிக்கும் பியாஜியோவின் புதுமுக ஆட்டோ!

பியாஜியோ (Piaggio) நிறுவனம் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 50 கிமீ மைலேஜை தரக் கூடிய ஆட்டோவை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கார ஓரங்கட்ட வச்சுடும்போல.. ஒரு கிலோ சிஎன்ஜி-க்கு 50 கிமீ பயணிக்கும் பியாஜியோவின் புதுமு ஆட்டோ!

பியாஜியோ குழுமத்தின் மற்றுமொரு அங்கமான பியாஜியோ (Piaggio) வெயிக்கிள் பிரைவேட் லிமிடெட் பயணிகள் வாகன பிரிவில் புதுமுக ஆட்டோ மாடல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அபே என்எக்ஸ்டி பிளஸ் (Apé NXT+) எனும் ஆட்டோரிக்ஷாவையே நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

கார ஓரங்கட்ட வச்சுடும்போல.. ஒரு கிலோ சிஎன்ஜி-க்கு 50 கிமீ பயணிக்கும் பியாஜியோவின் புதுமு ஆட்டோ!

இதற்கு அறிமுக விலையாக ரூ. 2,35,811 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்தியாவின் அனைத்து பியாஜியோ விற்பனையகத்திலும் இந்த புதுமுக அபே என்எக்ஸ்டி பிளஸ் விற்பனைக்குக் கிடைக்கும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

கார ஓரங்கட்ட வச்சுடும்போல.. ஒரு கிலோ சிஎன்ஜி-க்கு 50 கிமீ பயணிக்கும் பியாஜியோவின் புதுமு ஆட்டோ!

இந்த ஆட்டோ பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எல்பிஜி என மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இதன் சிஎன்ஜி வெர்ஷன் ஒரு கிலோவிற்கு 50 கி.மீட்டர்., மைலேஜ் தரும் என பியாஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் லிட்டருக்கு வெறும் 15 கிமீ - 20 கிமீ மட்டுமே மைலேஜை தரக்கூடிய காரின் உரிமையாளர்கள் மத்தியில் பொறாமையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

கார ஓரங்கட்ட வச்சுடும்போல.. ஒரு கிலோ சிஎன்ஜி-க்கு 50 கிமீ பயணிக்கும் பியாஜியோவின் புதுமு ஆட்டோ!

பியாஜியோவின் இந்த ஆட்டோ அதிக மைலேஜ் தரக் கூடியது மட்டுமில்லைங்க, இந்த செக்மெண்டில் எந்த ஆட்டோவும் பெறாத வகையிலான சில சிறப்பு வசதிகளையும் அவை பெற்றிருக்கின்றன. ட்யூப் லெஸ் டயர் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரக 3 வால்வு எஞ்ஜின் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

கார ஓரங்கட்ட வச்சுடும்போல.. ஒரு கிலோ சிஎன்ஜி-க்கு 50 கிமீ பயணிக்கும் பியாஜியோவின் புதுமு ஆட்டோ!

ஏற்கனவே ஆட்டோக்காரர்கள் பலர் தங்களது ஆட்டோக்களை ரேஸ் காரைபோல் ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே சூப்பரான திறனை வெளியேற்றக் கூடிய 3 வி ஸ்மார்ட் டெக் எஞ்ஜின் வழங்கப்பட்டிருக்கின்றது. இது ஓர் 230 சிசி மோட்டாராகும். காரை ஓட்டுவது போன்ற சுவாரஷ்யமான இயக்க அனுபவம் இந்த அபே என்எக்ஸ்டி பிளஸ் ஆட்டோவிலும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த மோட்டார் வழங்கப்பட்டிருக்கின்றது.

கார ஓரங்கட்ட வச்சுடும்போல.. ஒரு கிலோ சிஎன்ஜி-க்கு 50 கிமீ பயணிக்கும் பியாஜியோவின் புதுமு ஆட்டோ!

இதுமட்டுமின்றி அதிக கம்போர்ட் மற்றும் அதிக இட வசதி உள்ளிட்டவற்றையும் புதிய அபே என்எக்ஸ்டி பிளஸ் ஆட்டோவில் பியாஜியோ நிறுவனம் வழங்கியிருக்கின்றது. இதோட ஸ்டைலும் வழக்கமான ஆட்டோக்களிடம் இருந்து லேசாக மாறுபட்டுக் காட்சியளிக்கின்றது.

கார ஓரங்கட்ட வச்சுடும்போல.. ஒரு கிலோ சிஎன்ஜி-க்கு 50 கிமீ பயணிக்கும் பியாஜியோவின் புதுமு ஆட்டோ!

ஆட்டோவின் உட்பக்கத்தில் அதிக சொகுசான டூயல் டோன் இருக்கை, பழுப்பு நிற டேஷ்போர்டு மற்றும் வெளிப்புறத்தை மிக தெளிவாகக் கூடிய ஜன்னல் என பல்வேறு பிரீமியம் அம்சங்கள் ஆட்டோவில் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்தியர்களுக்காக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ஆட்டோ இது என்பது குறிப்பிடத்தகுந்தது.

கார ஓரங்கட்ட வச்சுடும்போல.. ஒரு கிலோ சிஎன்ஜி-க்கு 50 கிமீ பயணிக்கும் பியாஜியோவின் புதுமு ஆட்டோ!

பன்முக ஆய்வுகளுக்கு பின்னரே இந்த ஆட்டோவை உருவாக்கியிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, இந்தியர்கள் என்ன மாதிரியான பயண அனுபவத்தை விரும்புவார்கள், பன்முக அமைப்பைக் கொண்ட இந்திய சாலையில் எவ்வாறு சிறப்பான இயங்குவது உள்ளிட்ட அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு, அதற்கேற்ப ஆட்டோவை பியாஜியோ உருவாக்கியிருக்கின்றது.

கார ஓரங்கட்ட வச்சுடும்போல.. ஒரு கிலோ சிஎன்ஜி-க்கு 50 கிமீ பயணிக்கும் பியாஜியோவின் புதுமு ஆட்டோ!

இந்த ஆட்டோவை இந்தியாவிற்காக உருவாக்கியிருந்தாலும், அதனை உலக நாடுகள் சிலவற்றிற்கும் விற்பனைக்காக ஏற்றுமதி செய்ய இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனைத்து வேரியண்டுகளின் விலை விபரம்:

அபே என்எக்ஸ்டி பிளஸ் (பெட்ரோல்) - விலை: ரூ. 2,12,212

அபே என்எக்ஸ்டி பிளஸ் (சிஎன்ஜி) - விலை: ரூ. 2,35,881

அபே என்எக்ஸ்டி பிளஸ் (எல்பிஜி) - விலை: ரூ. 2,28,358

More from DriveSpark

Article Published On: Tuesday, July 12, 2022, 20:16 [IST]
English summary
Piaggio ape nxt plus launched in india at inr 2 12 lakh
மேலும்... #பியாஜியோ #piaggio
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+