டாடா, எம்ஜி என அனைத்தையுமே ஓரம்கட்ட போகுது! அஞ்சு லட்ச ரூபாவுக்கு எதிர்பார்க்கப்படும் இ-காரின் வெளியீட்டு தேதி

மும்பை நிறுவனம் உருவாக்கியிருக்கும் உலகின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடா, எம்ஜி என அனைத்தையுமே ஓரம்கட்ட போகுது! அஞ்சு லட்ச ரூபாவுக்கு எதிர்பார்க்கப்படும் இ-காரின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் பிஎம்வி எலெக்ட்ரிக் (PMV Electric). இந்நிறுவனம் வருகின்ற 16 ஆம் தேதி அன்று ஈஸ்-இ (Eas-e) எனும் புதுமுக எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்ய இருப்பதாக அறிவித்திருக்கின்றது. நிறுவனம் மின்சார கார் உற்பத்தியில் களமிறங்கி விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் முதல் இ-வாகனம் இதுவே ஆகும்.

டாடா, எம்ஜி என அனைத்தையுமே ஓரம்கட்ட போகுது! அஞ்சு லட்ச ரூபாவுக்கு எதிர்பார்க்கப்படும் இ-காரின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ஆகையால், இந்த மின் வாகனத்தின் வருகையை இந்தியர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்க தொடங்கியிருக்கின்றனர். இந்த நிலையிலேயே பிஎம்பி எலெக்ட்ரிக் அதன் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது ஓர் மைக்ரோ ரக மின்சார காராகும். தினசரி பயன்பாட்டைக் கருத்தில் கொண்டே ஈஸ்-இ மைக்ரோ எலெக்ட்ரிக் காரை பிஎம்வி எலெக்ட்ரிக் உருவாக்கியிருக்கின்றது.

டாடா, எம்ஜி என அனைத்தையுமே ஓரம்கட்ட போகுது! அஞ்சு லட்ச ரூபாவுக்கு எதிர்பார்க்கப்படும் இ-காரின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

இந்த காரில் ஓர் முழு சார்ஜில் 120 கிமீ தொடங்கி 200 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். வேரியண்டை பொருத்து ரேஞ்ஜ் மாறுபடும் என்பது குறிப்பிடத்தகுந்தது. எலெக்ட்ரிக் காரை 3 kW ஏசி சார்ஜரில் வைத்து சார்ஜ் செய்யும்பட்சத்தில் வெறும் 4 மணி நேரங்களிலேயே முழுமையாக சார்ஜ் செய்து கொள்ள முடியும். ஈஸ்-இ பார்ப்பதற்கு மிக சிறியதாக இருந்தாலும் பிற கார்களைப் போலவே அதிக தொழில்நுட்ப வசதிகள் கொண்டதாக அது காட்சியளிக்கின்றது.

டாடா, எம்ஜி என அனைத்தையுமே ஓரம்கட்ட போகுது! அஞ்சு லட்ச ரூபாவுக்கு எதிர்பார்க்கப்படும் இ-காரின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

டிஜிட்டல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், ஏர் கன்டிஷனிங் சிஸ்டம், ரிமோட் மூலம் சாவியே இல்லாமல் காருக்குள் நுழையும் வசதி, ரிமோட் பார்க் அசிஸ்ட், க்ரூஸ் கன்ட்ரோல், சீட் பெல்ட்டுகள் என எக்கசக்க அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய பன்முக சிறப்பு வசதிகளைக் கொண்டிருக்கின்ற போதிலும் இந்த கார் மிக மிகக் குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா, எம்ஜி என அனைத்தையுமே ஓரம்கட்ட போகுது! அஞ்சு லட்ச ரூபாவுக்கு எதிர்பார்க்கப்படும் இ-காரின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

அந்தவகையில், இதன் ஆரம்ப நிலை வேரியண்ட் ரூ. 4 லட்சம் தொடங்கி ரூ. 5 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிஎம்வி எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த காரை 2,915 mm நீளத்திலும், 1,157 mm அகலத்திலும், 1,600 மிமீ உயரத்திலும் மற்றும் 2,087 mm கிரவுண்ட் கிளியரன்ஸிலும் உருவாக்கியிருக்கின்றது.

டாடா, எம்ஜி என அனைத்தையுமே ஓரம்கட்ட போகுது! அஞ்சு லட்ச ரூபாவுக்கு எதிர்பார்க்கப்படும் இ-காரின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

எனவே சற்று குறைவான இட வசதிக் கொண்டதாக இது இருக்கலாம். அதேவேலையில், நிறுவனம் அறிவுறுத்தும்படி நபர்கள் இந்த காரில் பயணித்தால் போதிய அளவு இட வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய சூப்பரான எலெக்ட்ரிக் மைக்ரோ ரக காரையே இந்த மாதம் 16 ஆம் தேதி பிஎம்வி எலெக்ட்ரிக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்திருக்கின்றது.

டாடா, எம்ஜி என அனைத்தையுமே ஓரம்கட்ட போகுது! அஞ்சு லட்ச ரூபாவுக்கு எதிர்பார்க்கப்படும் இ-காரின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

பிஎம்வி நிறுவனம் ஏற்கனவே இந்த மலிவு விலை எலெக்ட்ரிக் காருக்கான புக்கிங் பணிகளை தொடங்கிவிட்டது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (www.pmvelectric.com) ப்ரீ புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றில் இருந்தும் இந்த காருக்கு ப்ரீ புக்கிங் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டாடா, எம்ஜி என அனைத்தையுமே ஓரம்கட்ட போகுது! அஞ்சு லட்ச ரூபாவுக்கு எதிர்பார்க்கப்படும் இ-காரின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

பிஎம்வி நிறுவனம் வெகு விரைவில் ஈஸ்-இ எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகளைத் தொடங்க இருக்கின்றது. இந்த பணிகள் தொடங்கும்பட்சத்தில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் இ-காரை டெலிவரி ஆரம்பிக்கும். இந்த நாளையே பலர் தற்போது எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக இதன் விலை எப்போது அதிகாரப்பூர்வமாக என்ற கேள்வியே மின் வாகன ஆர்வலர்கள் மத்தியில் எழும்பியிருக்கின்றது.

டாடா, எம்ஜி என அனைத்தையுமே ஓரம்கட்ட போகுது! அஞ்சு லட்ச ரூபாவுக்கு எதிர்பார்க்கப்படும் இ-காரின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

எம்ஜி நிறுவனம் வெகு விரைவில் இந்தியாவில் அதன் மைக்ரோ ரக எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருக்கின்றது. ஏர் இவி எனும் மின்சார காரையே அது விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் அறிமுகம் 2023 ஆம் ஆண்டிற்கு அரங்கேற இருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு போட்டியாகவே பிஎம்வி எலெக்ட்ரிக் நிறுவனம் அதன் மின்சார காரை இந்தியாவில் களமிறக்க இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 2, 2022, 18:54 [IST]
English summary
Pmv electric announced launch date of eas e microcar
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+