ஒரு கிமீ பயணிக்க வெறும் 75 பைசா மட்டுமே செலவாகும்! விற்பனைக்கு அறிமுகமானது மிக மிக விலை குறைவான மின்சார கார்!

மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும் பிஎம்வி எலெக்ட்ரிக் நிறுவனம் மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த காரில் ஒரு கிமீ பயணிக்க வெறும் 75 பைசா மட்டுமே செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கூடுதல் சுவாரஷ்ய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஒரு கிமீ பயணிக்க வெறும் 75 பைசா மட்டுமே செலவாகும்... விற்பனைக்கு அறிமுகமானது மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! யாரு வேணாலும் வாங்கலாம்!

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் பிஎம்வி எலெக்ட்ரிக் (PMV Electric). இந்நிறுவனம் இந்தியாவின் மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஈஸ்-இ (EaS-E) எனும் மைக்ரோ ரக எலெக்ட்ரிக் காரையே நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

ஒரு கிமீ பயணிக்க வெறும் 75 பைசா மட்டுமே செலவாகும்... விற்பனைக்கு அறிமுகமானது மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! யாரு வேணாலும் வாங்கலாம்!

இது ஓர் தினசரி பயன்பாட்டு வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் காராகும். சில நகரவாசிகள் தங்களது வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்கள் இருந்தாலும் ஆட்டோ அல்லது இருசக்கர வாகனத்தை பயன்படுத்துவர். இவற்றால் அதிக நெரிசல் மிகுந்த சாலையில்கூட அசால்டாக நுழைந்து பயணிக்க முடியும். இந்த ஒன்றைக் கருத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் வாகனமே ஈஸ்-இ.

ஒரு கிமீ பயணிக்க வெறும் 75 பைசா மட்டுமே செலவாகும்... விற்பனைக்கு அறிமுகமானது மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! யாரு வேணாலும் வாங்கலாம்!

இதனை நகரப்புற பகுதிகளின் நெரிசல் மிகுந்த சாலைகளில்கூட மிக சுலபமாக இயக்க முடியும். இதற்காக இக்காரில் ஈஸ்-இ எனும் மோட் வழங்கப்பட்டுள்ளது. இது ஃபீட்-ஃப்ரீ ரைடிங் அனுபவத்தை வழங்கும். இத்துடன் இன்னும் சில ரைடிங் மோட்களும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன. ரைடிங் அனுபவத்தை சுவாரஷ்யமானதாக மாற்றும் விதமாக அந்த மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு கிமீ பயணிக்க வெறும் 75 பைசா மட்டுமே செலவாகும்... விற்பனைக்கு அறிமுகமானது மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! யாரு வேணாலும் வாங்கலாம்!

பிஎம்வி நிறுவனம் எலெக்ட்ரிக் காருக்கு அறிமுகமாக ரூ. 4.79 லட்சம் விலை நிர்ணயித்துள்ளது. இந்தியாவில் வேறு எந்த நிறுவனம் இந்தளவு மிகக் குறைவான விலையில் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. டாடா நிறுவனத்தின் மலிவு விலை எலெக்ட்ரிக் காராக கருதப்படும் டியாகோ இவி கூட ரூ. 8.49 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்கப்பட்டு வருகின்றது.

ஒரு கிமீ பயணிக்க வெறும் 75 பைசா மட்டுமே செலவாகும்... விற்பனைக்கு அறிமுகமானது மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! யாரு வேணாலும் வாங்கலாம்!

ஆகையால், இந்த ஈஸ்-இ டாடா டியாகோ இவி-க்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 8 லட்ச ரூபாய்க்கும் அதிகமான பணத்தை செலவழித்தால் மட்டுமே இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் வாங்க முடியும் என நிலவி வந்த சூழலை பிஎம்வி நிறுவனத்தின் ஈஸ்-இ எலெக்ட்ரிக் கார் மாற்றியமைத்திருக்கின்றது. ஓர் பிரீமியம் இருசக்கர வாகனத்தை வாங்கச் செலவுச் செய்யும் தொகையிலேயே இந்த எலெக்ட்ரிக் காரை வாங்கிவிட முடியும்.

ஒரு கிமீ பயணிக்க வெறும் 75 பைசா மட்டுமே செலவாகும்... விற்பனைக்கு அறிமுகமானது மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! யாரு வேணாலும் வாங்கலாம்!

அனைத்து வகுப்பு மக்களாலும் வாங்கக் கூடிய விலையில் இந்த எலெக்ட்ரிக் விற்பனைக்கு வந்திருக்கின்றது. மூன்று விதமான ரேஞ்ஜ் திறன்களில் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது. 120 கிமீ, 160 கிமீ மற்றும் 200 கிமீ ஆகிய ரேஞ்ஜ் திறன்களிலேயே அது விற்பனைக்கு வந்துள்ளது. எலெக்ட்ரிக் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிமீ ஆகும்.

ஒரு கிமீ பயணிக்க வெறும் 75 பைசா மட்டுமே செலவாகும்... விற்பனைக்கு அறிமுகமானது மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! யாரு வேணாலும் வாங்கலாம்!

இது வெறும் ஐந்தே செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இதுமட்டுமில்லைங்க, 550 கிலோ வரையிலான எடையை தாங்கும் திறனில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஓர் இருக்கை அமைப்புக் கொண்ட எலெக்ட்ரிக் காராகும். இந்த காரில் இரு பெரியவர்கள் மற்றும் ஒரு சிறுவர் பயணிக்க முடியும்.

ஒரு கிமீ பயணிக்க வெறும் 75 பைசா மட்டுமே செலவாகும்... விற்பனைக்கு அறிமுகமானது மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! யாரு வேணாலும் வாங்கலாம்!

சிறப்பு தொழில்நுட்ப வசதியாக எலெக்ட்ரிக் காரில் 4ஜி இணைப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர நான்கு விதமான ரைடிங் மோட்கள், ரிமோட் பார்க்கிங் அசிஸ்ட், க்ரூஸ் கன்ட்ரோல், சிங்கிள் பெடல் டிரைவ், ஹாங்க் கவுண்டர், ஃபாலோ-மீ-ஹோம், ரிமோட் ஹார்ன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர, பிரத்யேக வசதியாக கால் கன்ட்ரோல் எனும் வசதியை ஸ்மார்ட்ஃபோன் இணைப்பு வாயிலாக வழங்கப்பட்டுள்ளது.

ஒரு கிமீ பயணிக்க வெறும் 75 பைசா மட்டுமே செலவாகும்... விற்பனைக்கு அறிமுகமானது மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! யாரு வேணாலும் வாங்கலாம்!

ஈஸ்-இ எலெக்ட்ரிக் காரை வீடுகளில் உள்ள 15A சார்ஜிங் பாயிண்டில் வைத்துகூட சார்ஜ் செய்துகொள்ள முடியும். இந்த பாயிண்டை பயன்படுத்தி சார்ஜ் செய்யும்போது 3-4 மணி நேரங்கள் வரை முழுமையாக சார்ஜாக எடுத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுபோன்று இன்னும் ஏராளமான அம்சங்கள் இந்த மைக்ரோ எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டிருக்கின்றது.

ஒரு கிமீ பயணிக்க வெறும் 75 பைசா மட்டுமே செலவாகும்... விற்பனைக்கு அறிமுகமானது மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! யாரு வேணாலும் வாங்கலாம்!

ஆகையால், இந்த கார் உருவத்தில் மட்டுமே மைக்ரோ சைஸிலும், சிறப்பம்சம் விஷயத்தில் பிரீமியம் தர காரை போலும் வந்திருப்பது தெளிவாக தெரிகின்றது. இதுமட்டுமில்லைங்க பாதுகாப்பு விஷயத்திலும் பிஎம்வி நிறுவனம் அதிக கவனத்தைச் செலுத்தியிருக்கின்றது. அந்தவகையில், இக்காரின் உறுதித் தன்மைக்காக ஷீட் மெட்டல் கன்ஸ்ட்ரக்சன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், ஏர் பேக்குகள் மற்றும் சீட் பெல்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு கிமீ பயணிக்க வெறும் 75 பைசா மட்டுமே செலவாகும்... விற்பனைக்கு அறிமுகமானது மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! யாரு வேணாலும் வாங்கலாம்!

நிறுவனம் ஈஸ்-இ எலெக்ட்ரிக் காரை பான்-இந்தியா திட்டத்தின்கீழ் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ஏற்கனவே இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றில் இருந்தும் இக்காருக்கு புக்கிங் கிடைத்திருக்கின்றது. அந்தவகையில், இதுவரை சுமார் 2000 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகளுக்கான புக்கிங்குகள் கிடைத்திருப்பதாக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

ஒரு கிமீ பயணிக்க வெறும் 75 பைசா மட்டுமே செலவாகும்... விற்பனைக்கு அறிமுகமானது மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! யாரு வேணாலும் வாங்கலாம்!

மேலும், இப்போது புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 2023 ஆம் ஆண்டின் மத்திய பகுதிக்குள் டெலிவரி வழங்கப்படும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஈஸ்-இ எலெக்ட்ரிக் காரில் பிஎம்எஸ்எம் மின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டாரே மணிக்கு 70 கிமீ வேகத்தை ஈஸ்-இ காருக்கு வழங்கியிருக்கின்றது. இது 10kW பவரை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மோட்டாருக்கு தேவையான மின்சாரத்தை வழங்க 48 வோல்ட், ஐபி67 லித்தியம் அயன் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 16, 2022, 13:34 [IST]
English summary
Pmv launched india s most affordable eas e e car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+