செம்மையான வேகத்தில் போக விரும்புபவர்களுக்கு ஏற்ற கார்... போர்ஷே 718 கேமேன் ஜிடி4 ஆர்எஸ் அறிமுகம்...

போர்ஷே நிறுவனத்தின் 718 கேமேன் ஜிடி4 ஆர்எஸ் (Porsche 718 Cayman GT4 RS) சூப்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இக்கார் குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

செம்மையான வேகத்தில் போக விரும்புபவர்களுக்கு ஏற்ற கார்... போர்ஷே 718 கேமேன் ஜிடி4 ஆர்எஸ் அறிமுகம்... வேகம், விலை ரெண்டுமே தலையை சுத்த வைக்குது!

சூப்பர் மற்றும் லக்சூரி கார் தயாரிப்பிற்கு பெயர்போன நிறுவனமாக விளங்குகின்றது, போர்ஷே (Porsche). இந்நிறுவனம், 718 பெயரின்கீழ் பன்முக கார் மாடல்களை உலக சந்தையில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இந்தியாவிலும் இந்த மாடலின் குறிப்பிட்ட சில தேர்வுகளை போர்ஷே விற்பனைச் செய்து வருகின்றது. இவற்றின் எண்ணிக்கையை விரிவாக்கம் செய்யும் வகையில் புதிய 718 கேமேன் ஜிடி4 ஆர்எஸ் (718 Cayman GT4 RS) இந்தியாவில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

செம்மையான வேகத்தில் போக விரும்புபவர்களுக்கு ஏற்ற கார்... போர்ஷே 718 கேமேன் ஜிடி4 ஆர்எஸ் அறிமுகம்... வேகம், விலை ரெண்டுமே தலையை சுத்த வைக்குது!

அதாவது, 718 குடும்பத்தில் கூடுதலாக ஓர் உறுப்பினரை சேர்க்கும் வகையில் 718 கேமேன் ஜிடி4 ஆர்எஸ் எனும் மாடலை போர்ஷே நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இக்காருக்கு ரூ. 2.54 கோடி என்ற உச்சபட்ச விலையை நிர்ணயித்துள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதைக் காட்டிலும் பல மடங்கு அதிக விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

செம்மையான வேகத்தில் போக விரும்புபவர்களுக்கு ஏற்ற கார்... போர்ஷே 718 கேமேன் ஜிடி4 ஆர்எஸ் அறிமுகம்... வேகம், விலை ரெண்டுமே தலையை சுத்த வைக்குது!

போர்ஷே நிறுவனம் இந்த புதிய மாடலை கூபே ரக ஸ்டைலில் உருவாக்கியுள்ளது. இதுமட்டுமின்றி தற்போது 718 மாடலில் விற்பனைக்குக் கிடைக்கும் மற்ற அனைத்து மாடல்களைக் காட்டிலும் மிக அதிக சக்தி வாய்ந்த சூப்பர் காராகவும் அதனை தயாரித்துள்ளது. ஆகையால் இந்த வாகனம் ரேஸ் கார் பிரியர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருக்கின்றது.

செம்மையான வேகத்தில் போக விரும்புபவர்களுக்கு ஏற்ற கார்... போர்ஷே 718 கேமேன் ஜிடி4 ஆர்எஸ் அறிமுகம்... வேகம், விலை ரெண்டுமே தலையை சுத்த வைக்குது!

ஆர்எஸ் பேட்ஜில் விற்பனைக்கு முதல் தலைமுறை கேமேன் காராகவும் இதுவே காட்சியளிக்கின்றது. வழக்கமான கேமேன் ஜிடி4 மாடலைக் காட்டிலும், இலகு எடைக் கொண்டதாக ஆர்எஸ் தேர்வு இருக்கின்றது. அதேநேரத்தில் மிக சிறந்த பெர்ஃபார்மன்ஸை வெளிப்படுத்தக் கூடியதாகவும் அது காட்சியளிக்கின்றது.

செம்மையான வேகத்தில் போக விரும்புபவர்களுக்கு ஏற்ற கார்... போர்ஷே 718 கேமேன் ஜிடி4 ஆர்எஸ் அறிமுகம்... வேகம், விலை ரெண்டுமே தலையை சுத்த வைக்குது!

காரின் சூப்பரான பவருக்காக 4.0 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேடட் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 493 பிஎச்பி மற்றும் 450 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. வழக்கமான ஜிடி4 வேரியண்டைக் காட்டிலும் இது கூடுதல் திறனை வெளிப்படுத்துவதாகக் காட்சியளிக்கின்றது.

செம்மையான வேகத்தில் போக விரும்புபவர்களுக்கு ஏற்ற கார்... போர்ஷே 718 கேமேன் ஜிடி4 ஆர்எஸ் அறிமுகம்... வேகம், விலை ரெண்டுமே தலையை சுத்த வைக்குது!

அதாவது, 79 பிஎச்பி மற்றும் 31 என்எம் டார்க்கை அது கூடுதலாக வெளியேற்றுகின்றது. இந்த காரில் பன்படுத்தப்பட்டிருக்கும் எஞ்ஜின் ஏர் இன்டேக் சிஸ்டம் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. புதிய துளைகள் காரின் பின் பக்க விண்டோ மற்றும் ஃபெண்டர் பகுதிகளில் இடம் பெற்றிருக்கின்றன.

செம்மையான வேகத்தில் போக விரும்புபவர்களுக்கு ஏற்ற கார்... போர்ஷே 718 கேமேன் ஜிடி4 ஆர்எஸ் அறிமுகம்... வேகம், விலை ரெண்டுமே தலையை சுத்த வைக்குது!

இவை எஞ்ஜினை குளிர்விப்பதோடு, அதன் திறனை அதிகரிக்கச் செய்யவும் உதவும். இதன் எஞ்ஜின் அதிக திறனை வெளிப்படுத்துவதில் 7 ஸ்பீடு ட்யூவல் க்ளட்ச் தானியங்கி டிரான்ஸ்மிஷன் முக்கிய பங்கினை ஆற்றுகின்றது. இது ஓர் பின் வீல் இக்கம் கொண்ட காராகும். புதிய போர்ஷே 718 கேமேன் ஜிடி4 ஆர்எஸ் காரின் உச்சபட்ச வேகம் மணிக்கு 315 கிமீ ஆகும்.

செம்மையான வேகத்தில் போக விரும்புபவர்களுக்கு ஏற்ற கார்... போர்ஷே 718 கேமேன் ஜிடி4 ஆர்எஸ் அறிமுகம்... வேகம், விலை ரெண்டுமே தலையை சுத்த வைக்குது!

இக்கார், வெறும் 3.4 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தைத் தொட்டு விடும் திறனைக் கொண்டுள்ளது. இது மற்ற 718 கேமேன் கார் மாடல்கள் வெளியேற்றுவதைக் காட்டிலும் மிக அதி-வேக திறன் ஆகும். இதுமட்டுமின்றி, புதிய சஸ்பென்ஷன் அமைப்பும் இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

செம்மையான வேகத்தில் போக விரும்புபவர்களுக்கு ஏற்ற கார்... போர்ஷே 718 கேமேன் ஜிடி4 ஆர்எஸ் அறிமுகம்... வேகம், விலை ரெண்டுமே தலையை சுத்த வைக்குது!

போர்ஷே நிறுவனம் ஏற்கனவே கூறியதை போல் 718 கேமேன் ஜிடி4 ஆர்எஸ் மாடலை அதிக இலகுவானதாக உருவாக்கியிருக்கின்றது. இதற்காக பிளாஸ்டிக்குடன் கூடிய கார்பன் ஃபைபர்களால் உருவாக்கப்பட்ட பான்னெட் மற்றும் முன் பக்க ஃபெண்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுவே காரை மிக எடைக் குறைந்ததாக தயாரிக்க பெரும் உதவியாக இருந்திருக்கின்றது.

செம்மையான வேகத்தில் போக விரும்புபவர்களுக்கு ஏற்ற கார்... போர்ஷே 718 கேமேன் ஜிடி4 ஆர்எஸ் அறிமுகம்... வேகம், விலை ரெண்டுமே தலையை சுத்த வைக்குது!

இதுமட்டுமின்றி, இலகு ரக கண்ணாடியே பின் பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது வெளிப்புறத்தில் உருவாகும் ஒலியை காருக்குள் புகுவதை பல மடங்கு தவிர்க்கும். அதாவது, உட்பகுதியை அமைதியானதாக காண்பிக்க இது உதவும். தொடர்ந்து, காருக்கு மிக சிறந்த ஏரோடைனமிக்ஸ் தோற்றம் வழங்கப்பட்டிருக்கின்றது.

செம்மையான வேகத்தில் போக விரும்புபவர்களுக்கு ஏற்ற கார்... போர்ஷே 718 கேமேன் ஜிடி4 ஆர்எஸ் அறிமுகம்... வேகம், விலை ரெண்டுமே தலையை சுத்த வைக்குது!

இது காற்றை கிழித்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன், பின் பக்க வீலுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் பின் பக்கத்தில் ஓர் விங் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர எக்கசக்க லக்சூரி மற்றும் நவீன கால தொழில்நுட்ப அம்சங்களும் இக்காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, May 19, 2022, 19:46 [IST]
English summary
Porsche 718 cayman gt4 rs launched in india here is full details
மேலும்... #போர்ஷே #porsche
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+