இளம் இந்திய செல்வந்தர்களுக்கு ஏற்ற சொகுசு கார்... மணிக்கு 300 கிமீ வேகத்தில் செல்ல கூடியது!
இளம் இந்திய செல்வந்தர்களைக் கவரும் வகையில் அதிக வேகத்தில் செல்லக் கூடிய கேயென்னே டர்போ ஜிடி (Cayenne Turbo GT) சொகுசு காரை போர்ஷே (Porsche) நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இக்கார்குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான 'போர்ஷே' (Porsche) அதன் புதிய தயாரிப்பான 'கேயென்னே டர்போ ஜிடி' (Porsche Cayenne Turbo GT) காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இந்த வாகனத்தின் விலை ரூ. 2.57 கோடி ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

போர்ஷே நிறுவனம் இக்காரை உலக சந்தையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதமே விற்பனைக்கு அறிமுகப்படுத்திவிட்டது. ஆனால், இப்போதுதான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகின்றது. நிறுவனம் ஏற்கனவே 'கேயென்னே' பெயரின்கீழ் சில கார் மாடல்களை விற்பனைக்குக் வழங்கிக் கொண்டிருக்கின்றது.

அவற்றின் வரிசையிலேயே புதிதாக 'டர்போ ஜிடி' இணைந்துள்ளது. இது கேயென்னே ரேஞ்ஜின் விலையுயர்ந்த தேர்வாக விற்பனைக்கு வந்திருக்கின்றது. இது ஓர் கூபே எஸ்யூவி ரக 4 சீட்டர் காராகும். இந்த கார் பல்வேறு சிறப்புகளை தாங்கிய வாகனமாகக் காட்சியளிக்கின்றது.

குறிப்பாக, ஜெர்மனியில் உள்ள புகழ்பெற்ற நர்பர்ஜிங் நார்ட்ஸ்லீஃபே சர்க்யூட்டை 7 நிமிடங்கள் 38.9 செகண்டுகளிலேயே கடந்து அது சாதனைப் படைத்துள்ளது. இத்தகைய சூப்பரான அதி வேகத்தில் செல்லக் கூடிய சொகுசு காரையே போர்ஷே நிறுவனம் இந்திய சந்தையில் இன்று (ஜூலை 21) விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

இக்காரில் சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தை வெளியேற்றுவதற்காக 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 640 எச்பி மற்றும் 850 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இது வழக்கமான 'கேயென்னே டர்போ கூபே' கார் மாடலைக் காட்டிலும் 90 எச்பி மற்றும் 80 என்எம் டார்க் அதிகம் ஆகும்.

ஆனால், உலக சந்தையில் இதைவிட அதிக பவரை வெளியேற்றும் தயாரிப்பாக ஓர் கேயென்னே கார் மாடல் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அது 'கேயென்னே டர்போ எஸ் இ-ஹைபிரிட்' எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

புதிய வாகனத்தில் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மற்றும் வி8 பெட்ரோல் மோட்டார் ஆகிய இரண்டும் இணைந்து மணிக்கு 300 கிமீ வேகத்தில் செல்லக் கூடியதாக கேயென்னே டர்போ ஜிடி காரை இயக்க வைக்கின்றது. மேலும், வெறும் 3.3 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறனையும் அது கொண்டிருக்கின்றது.

புதிய போர்ஷே கேயென்னே டர்போ ஜிடி சொகுசு கார் இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஆடி ஆர்எஸ் க்யூ8 மற்றும் லம்போர்கினி உருஸ் ஆகிய வாகனங்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வந்திருக்கின்றது. இவையிரண்டும்கூட அதிக வேகத்தை வெளிப்படுத்தக் கூடிய வாகன மாடல்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

போர்ஷே நிறுவனம் இந்த காரில் பயணிக்கும்போது அதிக சொகுசான பயண அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக காரின் சஸ்பென்ஷன் அமைப்பில் மாற்றம் செய்திருக்கின்றது. 3 சேம்பர் ஏர் சஸ்பென்ஷன் இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன், ஆக்டீவ் ரோல் ஸ்டெபிளைசேஷன் சிஸ்டம் மற்றும் பவர் ஸ்டியரிங் விஷத்திலும் சில மாற்றங்களை போர்ஷே செய்திருக்கின்றது.

இத்துடன், மிக சிறந்த பெர்ஃபார்மென்ஸுக்காக 285/35 அளவுள்ள டயர் முன்பக்கத்திலும், 315/30 அளவுள்ள டயர் பின்பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பைரல்லி பி ஜீரோ கோர்ஷா டயர்களே இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மிக சிறந்த பிரேக்கிங்கிற்காக கார்பன் செராமிக் டிஸ்க் பிரேக்குகள் இரு அனைத்து முனைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், முன் பக்கத்தில் 440 மிமீட்டரிலும், பின் பக்கத்தில் 410 மிமீ அளவிலும் அது உள்ளது.

போர்ஷே நிறுவனம் வழக்கமான கேயென்னேவிடம் இருந்து மாறுபட்டு காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக கணிசமான மாற்றங்களைச் செய்திருக்கின்றது. அந்தவகையில், காரின் பம்பர் மறு வடிவமைப்பு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, கார்பன் ஃபைபர் ரூஃப் மற்ரும் ரியர் பகுதியில் டிஃப்யூசரும் லேசான மாற்றங்களுடன் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் காருக்கு பல அதிக கவர்ச்சியான தோற்றத்தை வழங்குகின்றன.

இந்த கவர்ச்சியை மேலும் மெருகேற்றும் வகையில் 25 மிமீ பெரிய ஸ்பாய்லர் பின் பகுதியில் வழங்கப்பட்டிருக்கின்றது. இது காரின் செயல் திறனை கூட்ட உதவியாக இருக்கும். இதைத்தொடர்ந்து, ஆங்காங்கே காரின் முன் மற்றும் பின் பக்கங்களில் டர்போ ஜிடி என்கிற பேட்ஜ் பயன்படுத்தப்பட்டுள்ளது. காருக்குள்ளும் இந்த பேட்ஜ் சில இடங்களில் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன், காரின் இயக்கத்தை கூடுதலாக சிறப்பிக்கும் பொருட்டு போர்ஷே கம்யூனிகேஷன் மேனேஜ்மென்ட் அம்சம் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதியுடன் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுபோன்று அம்சங்களால் போர்ஷே கேயென்னே டர்போ ஜிடி பல மடங்கு சிறப்பானதாக காட்சியளிக்கின்றது.


Click it and Unblock the Notifications








