வாங்கினா இப்படி ஒரு மின்சார காரை-தாங்க வாங்கணும்... வெறும் 2.5 மணி நேரம் சார்ஜ் செஞ்சதுக்கே 4,560 கிமீ பயணம்!

மிக மிக குறுகிய சார்ஜ் நேரத்தில் பல ஆயிரம் கிமீ தூரத்தை பிரபல நிறுவனத்தின் மின்சார கார் கடந்து சாதனைப் படைத்திருக்கின்றது. மின் வாகன பிரியர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் வெளியாகியிருக்கும் புதிய தகவலின் சுவாரஷ்யங்களையே இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

வாங்கினா இப்படி ஒரு மின்சார காரை-தாங்க வாங்கணும்... வெறும் 2.5 மணி நேரம் சார்ஜ் செஞ்சதுக்கே 4,560 கிமீ பயணம்!

உலகமே மின்சார வாகன பயன்பாட்டை நோக்கி நகர தொடங்கியிருக்கின்றது. அவை குறைந்த பராமரிப்பு செலவில் அதிக பயன்பாட்டை வழங்கும். இத்துடன், சுற்றுச் சூழலுக்கும் உற்ற நண்பனாக செயல்படும். எனவேதான் உலக நாடுகள் பல மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு சலுகைகளை வழங்கத் தொடங்கியிருக்கின்றன.

வாங்கினா இப்படி ஒரு மின்சார காரை-தாங்க வாங்கணும்... வெறும் 2.5 மணி நேரம் சார்ஜ் செஞ்சதுக்கே 4,560 கிமீ பயணம்!

இந்த மாதிரியான சூழ்நிலையில் பிரபல நிறுவனத்தின் மின்சார கார் மாடல் ஒன்று மிக குறுகிய சார்ஜ் செய்யும் நேரத்தில் மிக தூண்ட தூரம் பயணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகின் முன்னணி சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்களில் போர்ஷே (Porsche)-வும் ஒன்று.

வாங்கினா இப்படி ஒரு மின்சார காரை-தாங்க வாங்கணும்... வெறும் 2.5 மணி நேரம் சார்ஜ் செஞ்சதுக்கே 4,560 கிமீ பயணம்!

இந்நிறுவனத்தின் டேகான் இவி (Taycan EV) எனும் எலெக்ட்ரிக் காரே மிகக் குறைவான சார்ஜ் நேரத்தில் மிக நீண்ட தூரம் பயணித்து அசத்தியிருக்கின்றது. வெறும் 2 மணி நேரம் 26 நிமிடங்கள் மற்றும் 48 செகண்டுகள் சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 2,834.5 மைல் தூரம் அக்கார் பயணித்திருக்கின்றது.

வாங்கினா இப்படி ஒரு மின்சார காரை-தாங்க வாங்கணும்... வெறும் 2.5 மணி நேரம் சார்ஜ் செஞ்சதுக்கே 4,560 கிமீ பயணம்!

அதாவது 4,560 கிமீ தூரம் வரை பயணித்துள்ளது. உண்மையில் இது மிக மிக அதிக ரேஞ்ஜ் திறன் ஆகும். இந்த சிறப்பான ரேஞ்ஜ் திறன் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இத்தகைய சூப்பர் ரேஞ்ஜ் திறனே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. மேலும், இத்தகைய மிக நீண்ட தூரத்தைக் கடக்க போர்ஷே டேகான் இவி எலெக்ட்ரிக் கார் மிக மிக குறைவான நேரங்களையே எடுத்துக் கொண்டிருப்பதாக கூடுதல் சிறப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாங்கினா இப்படி ஒரு மின்சார காரை-தாங்க வாங்கணும்... வெறும் 2.5 மணி நேரம் சார்ஜ் செஞ்சதுக்கே 4,560 கிமீ பயணம்!

ஆகையால், போர்ஷே டேகான் இவி மிக குறுகிய சார்ஜ் நேரத்தை மட்டுமே எடுத்துக் கொள்ளவில்லை, அது மிக குறுகிய நேரங்களை மட்டுமே 4,560 கிமீ தூரத்தைக் கடக்க எடுத்துக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது. 7 மணி நேரங்கள் 10 நிமிடங்கள் மற்றும் 1 செகண்டுகளையே இந்த அதிகபட்ச தூரத்தைக் கடக்க எடுத்துக் கொண்டிருக்கின்றது.

வாங்கினா இப்படி ஒரு மின்சார காரை-தாங்க வாங்கணும்... வெறும் 2.5 மணி நேரம் சார்ஜ் செஞ்சதுக்கே 3,837 கிமீ பயணம்!

போர்ஷே டேகான் எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ஜ் திறனை ஆராயும் பொருட்டு செய்யப்பட்ட சோதனையிலேயே இந்த ஆச்சரிய தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்ஜல்ஸ் தொடங்கி நியூயார்க் ஆகிய இரு நகரங்களுக்கு இடையே இந்த சோதனையோட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

வாங்கினா இப்படி ஒரு மின்சார காரை-தாங்க வாங்கணும்... வெறும் 2.5 மணி நேரம் சார்ஜ் செஞ்சதுக்கே 3,837 கிமீ பயணம்!

இரு நகரங்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளி 4 ஆயிரம் கிமீட்டர்கள் ஆகும். போர்ஷே டேகான் எலெக்ட்ரிக் காரை போலவே இதற்கு முன்னதாக வேற்று நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் பல இத்தகைய சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன.

வாங்கினா இப்படி ஒரு மின்சார காரை-தாங்க வாங்கணும்... வெறும் 2.5 மணி நேரம் சார்ஜ் செஞ்சதுக்கே 3,837 கிமீ பயணம்!

ஆனால், அவை அனைத்தைக் காட்டிலும் மிக சிறப்பான ரேஞ்ஜ் திறனை டேகான் இவி-யே வெளிப்படுத்தியிருக்கின்றது. ஆகையால், கின்னஸ் உலக சாதனையில் 2021 போர்ஷே டேகான் இடம் பிடித்துள்ளது. எலெக்ட்ரிக் காரின் சாதனை குறித்த நிகழ்வை போர்ஷே நிறுவனம் காட்சிப் பதிவு செய்திருக்கின்றது.

வாங்கினா இப்படி ஒரு மின்சார காரை-தாங்க வாங்கணும்... வெறும் 2.5 மணி நேரம் சார்ஜ் செஞ்சதுக்கே 3,837 கிமீ பயணம்!

இத்துடன், ஜிபிஎஸ் வாயிலாகவும் கார் ட்ராக் செய்யப்பட்டிருக்கின்றது. இவை அனைத்தும் சரி பார்க்கப்பட்ட பின்னரே கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் டேகான் இடம் பெறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. உலகில் தற்போது விற்பனைக்குக் கிடைக்கும் மிக கவர்ச்சியான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக டேகான் இவி இருக்கின்றது.

வாங்கினா இப்படி ஒரு மின்சார காரை-தாங்க வாங்கணும்... வெறும் 2.5 மணி நேரம் சார்ஜ் செஞ்சதுக்கே 3,837 கிமீ பயணம்!

இது அதிக செயல்திறன் மிக்க பேட்டரி, சூப்பர் ஃபாஸ்ட் திறன் கொண்ட மின் மோட்டார் மற்றும் பிரீமியம் அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், எலெக்ட்ரிக் ஸ்போர்ட் சவுண்ட் போன்ற கூடுதல் சிறப்பு அம்சங்களும் டேகான் இவியில் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு வசதிகளுடனேயே டேகான் இவி உலக நாடுகளில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

வாங்கினா இப்படி ஒரு மின்சார காரை-தாங்க வாங்கணும்... வெறும் 2.5 மணி நேரம் சார்ஜ் செஞ்சதுக்கே 3,837 கிமீ பயணம்!

போர்ஷே டேகான் இவி-யில் கூடுதல் சிறப்பு வசதியாக அதி-வேக சார்ஜ் திறன் வழங்கப்பட்டிருக்கின்றது. 800 வோல்ட் சார்ஜிங் பாயிண்டை பயன்படுத்தி இக்காரை சார்ஜ் செய்தால், 5 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜை வெறும் 22.5 நிமிடங்களிலேயே ஏற்றிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜ் திறனைக் கொண்டே புதிய கின்னஸ் சாதனையை டேகான் இவி படைத்திருக்கின்றது.

வாங்கினா இப்படி ஒரு மின்சார காரை-தாங்க வாங்கணும்... வெறும் 2.5 மணி நேரம் சார்ஜ் செஞ்சதுக்கே 3,837 கிமீ பயணம்!

போர்ஷே டேகான் இவி மிக சமீபத்திலேயே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மின்சார கார் நான்கு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். டேகான், டேகான் 4 எஸ், டர்போ மற்றும் டர்போ எஸ் ஆகிய தேர்வுகளிலேயே விற்பனைக்குக் கிடைக்கும். இதில், டர்போ எஸ் தேர்வே மிக அதிக திறன் கொண்டதாகும்.

வாங்கினா இப்படி ஒரு மின்சார காரை-தாங்க வாங்கணும்... வெறும் 2.5 மணி நேரம் சார்ஜ் செஞ்சதுக்கே 3,837 கிமீ பயணம்!

புதிய டேகான் இவி மின்சார காரில் 560 kwh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். இத்துடன் விஐடி (ViT) தொழில்நுட்பம் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மின் மோட்டார் டர்போ எஸ் தேர்வில் 560 கிலோவாட் திறனை வெளிப்படுத்தும்.

வாங்கினா இப்படி ஒரு மின்சார காரை-தாங்க வாங்கணும்... வெறும் 2.5 மணி நேரம் சார்ஜ் செஞ்சதுக்கே 3,837 கிமீ பயணம்!

இது, 761 பிஎஸ் பவருக்கு சமம் ஆகும். மேலும், இக்கார் வெறும் 2.8 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் ரூ. 1.5 கோடிக்கும் அதிகமான விலையில் போர்ஷே டேகான் இவி கார் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 1, 2022, 10:57 [IST]
English summary
Porsche taycan ev sets new guinness world record here is full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+