8ம் தேதியிலிருந்து பயன்படுத்திய கார்களையும் விற்க போறாங்களாம்! யூஸ்டு கார் சந்தைக்குள் நுழையும் பிரபல நிறுவனம்
பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று பயன்படுத்திய கார்கள் விற்பனையில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

புதிய வாகனங்களுக்கு நிலவுவதைப் போலவே பயன்படுத்திய வாகனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. எனவேதான் இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் சில செகண்டு ஹேண்ட் வாகன விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன.

மாருதி சுஸுகி (Maruti Suzuki) மற்றும் மஹிந்திரா (Mahindra) ஆகிய நிறுவனங்கள் புதிய வாகன விற்பனையில் கொடிக்கட்டி பறப்பதைப் போல பயன்படுத்திய வாகன விற்பனையில் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிறுவனங்களின் வரிசையிலேயே மேலும் ஓர் முன்னணி நிறுவனம் இணைய இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான போர்ஷே (Porsche)வே அந்த நிறுவனம் ஆகும். வரும் ஜூன் 8ம் தேதி முதல் நிறுவனம் பயன்படுத்திய கார்கள் விற்பனையில் களமிறங்க இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும், முதல் யூஸ்டு கார் விற்பனையகத்தை கேரளாவின் கொச்சின் நகரத்தில் அது அமைக்கபோவதாகக் கூறப்படுகின்றது. இதற்கு போர்ஷே நிர்வாகம் ஒப்புதலும் கிடைத்திருக்கின்றது.

இங்கு போர்ஷேவின் அனைத்து விதமான ஸ்போர்ட்ஸ் மற்றும் எஸ்யூவி கார்களும் விற்பனைக்குக் கிடைக்கும். அதாவது, நிறுவனத்தின் அனைத்து பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் அந்த விற்பனை மையத்தில் விற்பனைக்குக் கிடைக்கும். போர்ஷே நிறுவனம் செகண்ட் ஹேண்ட் வாகன விற்பனைக்காக ஃபோக்ஸ்வேகன் தாஸ் வெல்ட் மற்றும் ஆடி அப்ரூவ்டு பிளஸ் ஆகிய இரு நிறுவனங்களுடனும் இணைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகையால், போர்ஷேவின் செகண்ட் ஹேண்ட் வாகன விற்பனையகத்தில் ஆடி மற்றும் ஃபோக்ஸ்வேகனின் தயாரிப்புகளும் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது தெரிகின்றது. இந்தியாவில் அதிகம் லாபத்தை ஈட்டி தரக் கூடிய பிரிவுகளில் செகண்டு வாகன விற்பனைச் சந்தையும் ஒன்று.

எனவே, இந்த பிரமாண்ட நிறுவனம் செகண்டு ஹேண்ட் வாகன சந்தையில் நுழைந்திருப்பது பெரியளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. போர்ஷே நிறுவனம் இந்திய வாகன சந்தைக்குள் நுழைந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றது. இந்நிறுவனம் சூப்பர் ஃபாஸ்ட் மற்றும் அல்ட்ரா லக்சூரி அம்சங்கள் கொண்ட கார்களை நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையிலேயே அது செகண்ட் ஹேண்டு வாகன விற்பனையிலும் களமிறங்க இருக்கின்றது. போர்ஷே நிறுவனம் மிக சமீபத்தில் 718 கேமேன் ஜிடி4 ஆர்எஸ் எனும் சூப்பர் கால் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. 718 குடும்பத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் மற்ற அனைத்து கார் மாடல்களைக் காட்டிலும் இது சற்று அதிக திறன் வாய்ந்தது என கூறப்படுகின்றது.

அறிமுகமாக 718 கேமேன் ஜிடி4 ஆர்எஸ் கார் மாடலுக்கு ரூ. 2.54 கோடிகள் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ரேஸ் கார் பிரியர்களைக் கவரும் வகையில் இக்காரை போர்ஷே உருவாக்கியிருக்கின்றது.

4.0 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேடட் மோட்டாரையே இக்காரில் போர்ஷே பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 493 பிஎச்பி மற்றும் 450 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. வழக்கமான ஜிடி4 வேரியண்டைக் காட்டிலும் இது கூடுதல் திறனை வெளிப்படுத்துவதாகக் காட்சியளிக்கின்றது.

அதாவது, 79 பிஎச்பி மற்றும் 31 என்எம் டார்க்கை இது கூடுதலாக வெளியேற்றும். புதிய காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 315 கிமீ ஆகும். மேலும், 3.4 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டக் கூடிய திறனையும் இக்கார் கொண்டுள்ளது. இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் காரையே அண்மையில் போர்ஷே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதில் தொழில்நுட்ப வசதிகளும் ஏராளம் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








