சிறப்பான ஜெட் கருப்பு நிறத்தில் போர்ஷே கேயென் பிளாட்டினம் எடிசன்!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

போர்ஷே கேயென் பிளாட்டினம் எடிசன் காரை பற்றிய விபரங்கள் படங்களுடன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சிறப்பான ஜெட் கருப்பு நிறத்தில் போர்ஷே கேயென் பிளாட்டினம் எடிசன்!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

உலகளவில் பிரபலமான போர்ஷே எஸ்யூவி மாடல்களுள் ஒன்றான கேயென் பிரத்யேகமான பிளாட்டினம்-தீம் டிசைனில் மேம்படுத்தப்பட்ட பாகங்களுடன் புதிய வேரியண்ட்டை பெற்றுள்ளது. இந்த புதிய பிளாட்டினம் எடிசன் ஆனது கேயென் மாடலின் எஸ்யூவி மற்றும் கூபே என இரு விதமான உடற் அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

சிறப்பான ஜெட் கருப்பு நிறத்தில் போர்ஷே கேயென் பிளாட்டினம் எடிசன்!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

யுகே நாட்டு சந்தைகளில் ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்ட கேயென் பிளாட்டினம் எடிசனின் பெயர் இந்திய இணையத்தள பக்கத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் இந்திய சந்தைக்கான இந்த ஸ்பெஷல் எடிசன் கேயென் காரின் விலைகள் தற்போதைக்கு அறிவிக்கப்படவில்லை. இந்த புதிய கேயேன் காருக்கு பிரத்யேகமான சாடின் ஃபினிஷிங்கில் ஜெட் ப்ளாக் பெயிண்ட் வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பான ஜெட் கருப்பு நிறத்தில் போர்ஷே கேயென் பிளாட்டினம் எடிசன்!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

அத்துடன் இதன் வெளிப்பக்கத்தில் கராரா வெள்ளை, மஹோகனி, மூன்லைட் நீலம் மற்றும் க்ரயோன் உள்ளிட்ட நிறங்களையும் பார்க்க முடிகிறது. அதேபோல் பின்பக்கத்தில் ‘PORSCHE' வார்த்தைகளும், முன்பக்கத்தில் காற்று ஏற்பான்களின் ஸ்டைலும் சற்று திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இவ்வளவு ஏன், காரின் 21-இன்ச் அலாய் சக்கரங்களின் டிசைனும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

சிறப்பான ஜெட் கருப்பு நிறத்தில் போர்ஷே கேயென் பிளாட்டினம் எடிசன்!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

முன்பக்கத்தில் போர்ஷே டைனாமிக் லைட் சிஸ்டத்துடன் எல்இடி ஹெட்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன. காரின் ஸ்போர்ட்ஸ்-எக்ஸாஸ்ட் குழாய்கள் மற்றும் பக்கவாட்டு ஜன்னல் ட்ரிம்கள் உள்ளிட்டவை கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. இதன் உட்புற கேபின் சில்வர் நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இருக்கைகளில் சீட்பெல்ட்கள் க்ராயோன் நிறத்தில் வழங்கப்பட்டிருக்க, உட்புற கதவு சில்கள் ப்ரஷ்டு அலுமினியத்தில் பொருத்தப்பட்டிருக்கின்றன.

சிறப்பான ஜெட் கருப்பு நிறத்தில் போர்ஷே கேயென் பிளாட்டினம் எடிசன்!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

அதேநேரம் கேபினில் ஆங்காங்கே ஸ்பெஷல் பிளாட்டினம் எடிசன் லோகோக்கள் வழங்கப்பட்டுள்ளன. தயாரிப்பு நிறுவனத்தின் லோகோ முன் & பின் இருக்கைகளின் ஹெட்ரெஸ்ட்களில் தென்படுகின்றன. ஜன்னல்களில் பிரைவசி கண்ணாடிகளுடன் பனோராமிக் மேற்கூரை இந்த பிளாட்டினம் எடிசன் காரில் வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பான ஜெட் கருப்பு நிறத்தில் போர்ஷே கேயென் பிளாட்டினம் எடிசன்!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இவற்றுடன் போர்ஷே கேயென் மாடலின் வழக்கமான அம்சங்களை இந்த ஸ்பெஷல் எடிசனும் தொடர்ந்துள்ளது. இதில் எலக்ட்ரிக் மூலமாக 8-வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய லெதர் ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், பிரீமியம் தரத்திலான போஸ் சவுண்ட் சிஸ்டம், கேபினை சுற்றிலும் விளக்குகள் மற்றும் டேஸ்போர்டில் சிறப்பு அனலாக் நேரக்காட்டி உள்ளிட்டவை அடங்குகின்றன.

சிறப்பான ஜெட் கருப்பு நிறத்தில் போர்ஷே கேயென் பிளாட்டினம் எடிசன்!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

அதேபோல் என்ஜின் அமைப்பிலும் எந்த மாற்றமுமில்லை. வழக்கமாக கேயென் மாடல்களில் பொருத்தப்படும் 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் வி6 என்ஜின் தான் புதிய கேயென் பிளாட்டினம் எடிசனிலும் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகப்பட்சமாக 335 எச்பி வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதன் இ-ஹைப்ரீட் வெர்சனில் இதே 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தான் 17.9 kWh எலக்ட்ரிக் மோட்டார் உடன் வழங்கப்படுகிறது.

சிறப்பான ஜெட் கருப்பு நிறத்தில் போர்ஷே கேயென் பிளாட்டினம் எடிசன்!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இதுமட்டுமின்றி 2.9 லிட்டர் இரட்டை-டர்போசார்ஜ்டு வி6 பெட்ரோல் என்ஜின் தேர்விலும் இந்த ஸ்பெஷல் கேயென் கார் சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இந்திய சந்தையில் எந்த என்ஜின் தேர்வுகளுடன் இந்த ஸ்பெஷல் எடிசன் போர்ஷே கார் விற்பனை செய்யப்படும் என்பது தெரியவில்லை. இந்தியாவில் சமீபத்தில் 718 மற்றும் 911 வரிசையில் புதிய மாடல்களை போர்ஷே இணைத்திருந்தது.

சிறப்பான ஜெட் கருப்பு நிறத்தில் போர்ஷே கேயென் பிளாட்டினம் எடிசன்!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இந்த வகையில் 718 கேமன் ஜிடிஎஸ் 4.0 மற்றும் 718 பாக்ஸ்டர் ஜிடிஎஸ் 4.0 கார்களை போர்ஷே அறிமுகப்படுத்தி இருந்தது. இவை பந்தய களத்திற்கான ஜிடி4/ ஸ்பைடர் மாடல்களை காட்டிலும் கூடுதல் ஆஃப்-ரோட்டிற்கு ஏற்ற மாடல்களாகும். இவற்றை தொடர்ந்து 911 ஜிடி3 மற்றும் 911 ஜிடி3 டூரிங் இரட்டை கார்கள் இந்த ஜெர்மன் லக்சரி கார் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தன.

சிறப்பான ஜெட் கருப்பு நிறத்தில் போர்ஷே கேயென் பிளாட்டினம் எடிசன்!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

போர்ஷே அதன் முழு-எலக்ட்ரிக் சூப்பர் காராக டைகனை பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த 2021ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்தியது. போர்ஷே டைகனின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.50 கோடியில் இருந்து ரூ.2.29 கோடி வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அந்த சமயத்தில் இந்த போர்ஷே எலக்ட்ரிக் காருடன் மக்கனின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனும் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. மேலும் இதேபோன்று கடந்த 2021 டிசம்பரில் பனமேரா பிளாட்டினம் எடிசனும் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது.

More from DriveSpark

Article Published On: Sunday, January 23, 2022, 16:12 [IST]
English summary
Porsche Cayenne Platinum Edition revealed, could be launched in India.
மேலும்... #போர்ஷே #porsche
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+