சென்னையை மட்டுமல்ல மாண்டஸ் உங்க வாகனத்தையும் மிரட்டியிருக்கும்!.. தயவு பண்ணி இந்த தப்ப மட்டும் செஞ்சுடாதீங்க!

சென்னையை மிரட்டி வந்த மாண்டஸ் தற்போது கரையைக் கடந்திருக்கின்றது. இந்த புயல் முடிஞ்சிருச்சு, நம் வாகனமும் நல்ல இயங்குது அப்புடினு மட்டும் லேசா எடுத்துக்காதீங்க. நமக்கே தெரியாம நம்முடைய வாகனங்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். ஆகையால், புயலுக்கு பின்னர் வாகனத்தை குறிப்பிட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்துவதே நல்லது. அந்தவையில், புயலுக்கு பின்னர் நம்முடைய வாகனங்களில் சரி பார்க்க வேண்டியவை என்ன என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சேத மதிப்பீடு:

புயல் போயிடுச்சு என் வண்டிக்கு ஒன்னுமே ஆகலைனு சும்ம மேலோட்டமா பாத்துட்டு எந்தவொரு தப்பான முடிவுக்கும் வந்திடாதீங்க. குறிப்பாக, காரை வெளியில் நிறுத்தும் வாகன உரிமையாளர்கள் உங்கள் வாகனத்தை நகர்த்தத் தொடங்கும் முன் முழுமையாக ஓர் அலசலுக்கு உட்படுத்துவது நல்லது. குறிப்பாக, வாகனங்கள்மீது மரங்களின் இளைகளும், சருகுகளும் நிறைந்திருக்குமானால் அவற்றை அகற்றிவிட்டு காரின் வெளிப்புறத்தை பரிசோதியுங்கள். காற்றில் இருந்து அடித்து வரப்பட்ட மரக்கிளைகள் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் உங்கள் வாகனத்தின் வெளிப்பகுதியை பதம் பார்த்திருக்கலாம்.

மாண்டஸ் புயல்

ஆகையால், அவற்றை சரிபார்ப்பது மிக அவசியமானது. மிக முக்கியமாக வாகனத்தை நகர்த்தும் முன் காருக்கு அடியில் செக் செய்துவிடுங்கள் எங்கிருந்தாவது அடித்து வரப்பட்ட பொருட்கள் நம் வாகனத்தின் அடிப்பகுதியில் சிக்கியிருக்கலாம். இதை பார்க்காமல் வாகனத்தை நகர்த்தினால் அது மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். ஆகையால், புயல் முடிந்த பின் குறிப்பாக காரை பலகட்ட ஆய்விற்கு பின்னர் நகர்த்துவதே நல்லதாகும். இதுமாதிரியான சூழலை தவிர்க்கவே வாகன உரிமையாளர்கள் தங்களின் வாகனங்களை உரிய பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.

எலெக்ட்ரிக்கல் சிஸ்டத்தை சரிபார்க்கவும்:

புயலுக்கு பின் காரை எடுக்கபோறீங்களா. கட்டாயம் எலெக்ட்ரிக்கல் சிஸ்டத்தையும் ஒரு முற முழுசா சோதிச்சு பாத்திடுங்க. இதில், ஏதேனும் சிக்கல் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் காரை ஸ்டார்ட் செய்ய வேண்டாம். குறிப்பாக, வெளிப்புற சேதத்தைச் சரி பார்த்த பின்னர் உங்கள் காரின் ஹெட் லைட், ஜன்னல் லாக்கிங் சிஸ்டம் ஆகியவற்றை சரி பார்க்க வேண்டும். இவற்றுடன், ஹெட்லைட், இன்டிகேட்டர்கள் போன்றவற்றையும் ஒரு முறை சோதிச்சு பார்த்திடுங்க. இவற்றில் சிக்கலை வைத்துக் கொண்டு வாகனத்தை இயக்குவது நல்லது அல்ல. மேலும், பேட்டரியின் இணைப்பையும் செக் செய்துக் கொள்வது சிறந்தது.

தண்ணீர் தேங்கியிருந்தால் வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்:

கடுமையான மழையின்போது தாழ்வான பகுதிகளில் எளிதில் வெள்ள நீர் தேங்கிவிடும். இந்த மாதிரியான பகுதியில் உங்கள் வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும் எனில் மறு நாள் வாகனத்தை எடுக்கும் முன் ஒன்றிற்கு பல முறை வாகனத்தைச் சோதித்துவிடுவது நல்லது. வாகனம் மழை வெள்ள நீரில் மூழ்கியிருக்குமானால் நிச்சயம் வண்டியை ஸ்டார்ட் செய்யக் கூடாது. தண்ணீர் புகுந்த காரை ஸ்டார்ட் செய்வதனால் சிக்கல் மேலும் பல மடங்காக வாய்ப்பு உள்ளது. ஆகையால், காரை ஸ்டார்ட் செய்யும் முன் அருகில் உள்ள கார் மெக்கானிக் அல்லது சர்வீஸ் மையத்தை நாடுவதே மிக மிக நல்லது. நம்மால் வாகனத்தின் இயக்கத் தன்மையை உறுதிப்படுத்த முடியாத நிலையில் அவர்களின் உதவியை நாடுவதனால் பெருத்த சேதங்களை தவிர்க்க முடியும்.

ஆயிலை சரிபார்க்கவும்:

கார் அல்லது பைக் நீரில் மூழ்கியிருக்குமானால் அந்த வாகனத்தின் அனைத்து பகுதியிலும் வெள்ள நீர் புகுந்திருக்க வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக, எஞ்ஜினிலும் மழை நீர் புகுந்திருக்கும். ஆகையால், டிப் ஸ்டிக்கைக் கொண்டு வாகனத்தின் எஞ்ஜின் ஆயிலை ஒரு முறை செக் செய்துவிடவும். அதில், நீர் கலந்திருப்பது தெரிய வந்தால், உடனடியாக ஆயிலை மாற்றிவிடுவது நல்லது. அதை அப்படியே வைத்துக் கொண்டு வாகனத்தை இயக்கினால் நாளை பெரும் பொருட் செலவு ஏற்படலாம். இதை ஆய்வு செய்வதில் உங்களுக்கு சிக்கல் ஏற்படும் எனில் அருகில் உள்ள ஒர்க்ஷாப் உதவியை நாடுவதே நல்லது.

காரின் உட்புறத்தை உலர்த்தவும்:

மேடான பகுதியில், அதாவது, வெள்ள நீர் தேங்காத பகுதிகளில் உங்கள் வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும் எனில் இதை பற்றி கவலைப்பட தேவையில்லை. அதேநேரத்தில் உங்கள் வாகனத்தின் டயரையே மூழ்கடிக்கின்ற அளவிற்கு நீங்கள் காரை நிறுத்தி வைத்திருந்த பகுதியில் வெள்ள நீர் தேங்கியிருக்கும் எனில், கட்டாயம் காரை உலர்த்தியே ஆக வேண்டும். காருக்குள் பெரும்பாலும் நீர் நுழைய வாய்ப்பில்லை. இருப்பினும், காரின் உட்பக்கத்தை உலர்த்த தவற வேண்டாம். ஏனெனில் லேசான ஈர பதம்கூட உங்கள் காரில் அதிக துர்நாற்றத்திற்கு ஆளாக்கிவிடும். எனவே, மழை முழுவதுமாக நின்ற பின்னர் கார் கதவுகள் அனைத்தையும் திறந்து வைத்து மினி மின் விசிறி அல்லது ஹேர் டிரையரை பயன்படுத்தி கேபினை குளிர வைக்கலாம்.

காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்பு கொள்வது அவசியம்:

வாகனம் விபத்தைச் சந்தித்திருந்தால் மட்டுமே காப்பீட்டு நிறுவனங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றில்லை. இதுபோன்று இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் காப்பீட்டு நிறுவனங்கள் சில கிளைமை வழங்குகின்றன. ஆகையால், இந்த புயலால் உங்கள் வாகனம் சேதம் உற்றிருக்கும் எனில் இதுகுறித்த தகவலை இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் தெரிவிப்பது நல்லது. இதன் வாயிலாக நம்மால் ஈடுகட்ட முடியாத அளவிற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டிருக்கும் எனில் அதற்கான இழப்பீட்டை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். இதற்காகவே உடனடி தகவல் பரிமாற்றம் தேவை என கூறப்படுகின்றது.

சர்வீஸுக்கு ஒரு முறை விட்ருங்க பாஸ்:

மழை மற்றும் புயல் போன்ற இயற்கை சீற்றத்திற்கு பின்னர் வாகனங்களை சர்வீஸ் விடுவது புத்திசாலிதனமான செயல் ஆகும். எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பிரச்னைகளை இதன் வாயிலாக முன் கூட்டியே தவிர்த்துவிட முடியும். எனவேதான் இதனை வாகனத்துறை வல்லுநர்கள் புத்திசாலித் தனமான நகர்வு என கூறுகின்றனர். மழை மற்றும் புயலுக்கு பின்னர் வாகனங்களில் கசிவு மற்றும் அரிப்பு ஏற்பட ஆரம்பிக்கும். இதனை வழக்கமான சர்வீஸ் வாயிலாக மட்டுமே தவிர்க்க முடியும். இதற்கு தயங்கினால் விரைவில் பெரிய செலவிற்கு தயாராக இருங்கள் என்றே கூற முடியும். அதுவே, உங்கள் வாகனம் பாதுகாப்பான பார்க்கிங் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தால் இதை பற்றி துளியளவும் நீங்கள் கவலைப்பட தேவையில்லை.

Most Read Articles
English summary
Post cyclone mandous car care
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X