கிராண்ட் விட்டாரா எல்லாம் இதுக்கு முன்னாடி ஒன்னுமே இல்ல! மஹிந்திரா திட்டத்தால் ஆடி போயிருக்கும் மாருதி சுஸுகி!

மஹிந்திரா நிறுவனம் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் காரின் டீசர் படம் வெளியாகியுள்ளது. இதனை நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பு அதிகாரியான பிரதாப் போஸே வெளியிட்டிருக்கின்றார். இந்த டீசர் படம் வாயிலாக வெளியாகி இருக்கும் முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்காலம், வாங்க.

மஹிந்திரா நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகங்களான எக்ஸ்யூவி 700 மற்றும் தார் ஆகிய இரு எஸ்யூவி ரக கார்களுக்கும் செம்ம வரவேற்பு நாட்டு மக்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டும் என்கிற அளவிற்கே இந்த இரு கார்களுக்கும் டிமாண்ட் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே மேலும் ஓர் புதிய தயாரிப்பை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் மஹிந்திரா நிறுவனம் களமிறங்கி இருப்பது தகவல்கள் வெளியாகி உள்ளன.

மஹிந்திரா

இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் ஓர் புதுமுக கார் மாடலின் டீசர் படத்தை வெளியிட்டு உள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பு அதிகாரியான பிரதாப் போஸே அந்த டீசர் படத்தை வெளியிட்டிருக்கின்றார். கார் ஒன்றை கவர் கொண்டு முழுமையாக போர்த்தி வைத்திருப்பதைப் போன்ற படத்தையே அவர் வெளியிட்டுள்ளார். கவர் கொண்டு போர்த்தி வைத்திருந்தாலும் காரின் ஷேப் முழுமையாக தெரியும் வகையில் இருக்கின்றது.

வீல் ஆர்ச்சுகள், ரூஃப்லைன், அப்ரைட் வின்ட்ஷீல்டு மற்றும் பின் பகுதி ஆகியவற்றின் வடிவத்தையே டீசர் படம் வெளிக்காட்டுகின்றது. மஹிந்திரா நிறுவனம் கடந்த ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி அன்று புதிய பிஇ.05 இவி எனும் கான்செப்ட் மாடலை இந்தியாவில் காட்சிப்படுத்தியது. இந்த காரின் பின் பகுதியை பிரதிபலிக்கும் வகையிலேயே தற்போது நிறுவனம் டீசர் வெளியிட்டிருக்கும் புதிய காரின் பின் பகுதியும் உள்ளது.

மஹிந்திரா

ஆகையால், பிஇ.05 காரைதான் நிறுவனம் விரைவில் வெளியீடு செய்யும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றதோ என்கிற சந்தேகம் எழும்பியுள்ளது. டீசர் வெளியிடப்பட்டிருக்கும் கார்குறித்த எந்தவொரு தகவலையும் நிறுவனம் வெளியிடாததால், எங்களால் அதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிட முடியவில்லை. பிஇ.05 எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் 4370 மிமீ நீளத்திலும், 1900 மிமீ அகலத்திலும், 1635 மிமீ உயரத்திலும் மற்றும் 2775 மிமீ வீல் பேஸிலும் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுமட்டுமில்லைங்க மாறுபட்ட சிறப்பு வசதிகளாக ஃப்ளஷ் ரக டூர் ஹேண்டில்கள், ஸ்லோப் டைப் ரூஃப் லைன், கூர்மையான தோற்றம் கொண்ட ரியர் பம்பர் மற்றும் சி வடிவ டெயில் லேம்ப்பும் அந்த காரில் இடம் பெற்றிருந்தன. தற்போது டீசர் வெளியிடப்பட்டிருக்கும் காரிலும் இந்த மாதிரியான அம்சங்கள் இடம் பெற்றிருப்பதை நம்மால் உணர முடிகின்றது. இதன் அடிப்படையிலேயே நிறுவனம் பிஇ.05 இவி-யை அறிமுகம் செய்ய இருப்பது யூகிக்கப்பட்டுள்ளது.

இந்த அம்சங்கள் கொண்ட கார் இந்தியாவில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் மாருதி சுஸுகியின் கிராண்ட் விட்டாரா மற்றும் ஹூண்டாய் கிரெட்டா ஆகிய கார் மாடல்களுக்குக் கடுமையான போட்டியாக அமையும். முன்னதாக மஹிந்திரா நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட எக்ஸ்யூவி 500காரை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியிட்டிருந்தது. ஆகையால், தற்போது வெளியிடப்பட்டிருக்கும் டீசர் படம் அப்டேட் செய்யப்பட்ட எக்ஸ்யூவி 500 காருடையதாககூட இருக்க வாய்ப்பு உள்ளது.

சந்தையில் தற்போது போட்டி அதிகரித்துக் காணப்படுகின்றது. இதன் காரணமாகவே மஹிந்திரா நிறுவனம் இந்தியாவிற்காக புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. இந்த அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனை 'எஸ்301' என்ற கோடு பெயரில் நிறுவனம் குறிப்பிட்டு வருகின்றது. இதனை எக்ஸ்யூவி 700 காரை கட்டமைத்து வரும் தளத்தில் வைத்தே மஹிந்திரா நிறுவனம் அப்டேட் செய்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், எக்ஸ்யூவி 700-ஐ போலவே மிக தரமான காராக எக்ஸ்யூவி 500 வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக, பெரிய தொடு திரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம், அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம், பிரீமியம் ஆடியோ சிஸ்டம், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 2 க்கும் மேற்பட்ட ஏர் பேக்குகள்,லேன் கீப் அசிஸ்ட் போன்ற எக்கசக்க நவீன கால அம்சங்களுடன் புதிய எக்ஸ்யூவி 500 உருவாகிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி இன்னும் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் இந்த கார் விற்பனைக்கு வர இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 22, 2022, 19:57 [IST]
English summary
Pratap bose released teaser of upcoming suv
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+