ரூ.50,000 மட்டுமே... BMW X4 Black Shadow Edition சொகுசு காருக்கு ப்ரீ லாஞ்ச் புக்கிங் ஆரம்பம்!
பிஎம்டபிள்யூ எக்ஸ்4 பிளாக் ஷேடோவ் எடிசன் (BMW X4 Black Shadow Edition) சொகுசு காருக்கு இந்தியாவில் ப்ரீ லாஞ்ச் புக்கிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனம் மிக விரைவில் புதுமுக சொகுசு கார் மாடல் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. எக்ஸ்4 பிளாக் ஷேடோவ் எடிசன் (BMW X4 Black Shadow Edition) எனும் சிறப்பு பதிப்பையே நிறுவனம் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. அடுத்த மாதம் (மார்ச்) இதன் அதிகாரப்பூர்வ வருகை அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே இந்த காருக்கான புக்கிங் பணிகளை நிறுவனம் நாட்டில் தொடங்கியுள்ளது. மிக விரைவில் விற்பனைக்கு வர இருப்பதை முன்னிட்டு இந்த பணியை பிஎம்டபிள்யூ தொடங்கியிருக்கின்றது. ப்ரீ லாஞ்ச் புக்கிங் கட்டணமாக ரூ. 50 ஆயிரம் வசூலிக்கப்படுகின்றது. இந்த டோக்கன் கட்டணத்திலேயே எக்ஸ்4 சொகுசு காருக்கு பிம்டபிள்யூ கார் விற்பனையாளர்கள் முன் பதிவுகளை ஏற்க தொடங்கியிருக்கின்றனர்.

2019 பிஎம்டபிள்யூ எக்ஸ்4 சொகுசு காரை தழுவிய ஓர் வாகனமாகவே எக்ஸ்4 பிளாக் ஷேடோவ் காட்சியளிக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இக்காரை பல நிலைகளில் பிஎம்டபிள்யூ அப்டேட் செய்திருக்கின்றது. வெளி மற்றும் உட்புறம் என அனைத்திலும் அப்டேட்டுகள் செய்யப்பட்டுள்ளன. இத்துடன், சிறப்பம்சங்களையும் நிரம்பி வழியும் வகையில் இக்காரில் பிஎம்டபிள்யூ வாரி வழங்கியிருக்கின்றது.

அப்டேட் செய்யப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் இக்காரில் வழங்கப்பட்டுள்ளது. பன்முக அப்கிரேஷன் பணிகள் செய்யப்பட்டும் இதன் ஸ்டைல் மற்றும் தோற்றம் முந்தைய வெர்ஷனைப் போன்றே காட்சியளிக்கின்றது. ஆனால், அலங்காரப் பணிகள் வேற லெவலில் செய்யப்பட்டிருப்பதால் அதிக கவர்ச்சியான தோற்றத்தை எக்ஸ்4 பிளாக் எடிசன் பெற்றிருக்கின்றது.

எக்ஸ்4 காரின் டேஷ்போர்டு மறு வேலைப்பாடு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், 10.25 இன்ச் அளவுள்ள டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 12.3 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. காரை சூப்பரான மற்றும் கவர்ச்சியான வாகனமாக காண்பிப்பதற்காக ஸ்போர்ட்டி லுக் கிட்னி க்ரில் முகப்பு பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், அடாப்டீவ் எல்இடி ஹெட்லைட் மேட்ரிக்ஸ் வசதியுடன், முழு எல்இடி வால் பகுதி மின் விளக்கு, புதிய ஏப்ரான் மற்றும் ரெஃப்ளக்டர்கள் உள்ளிட்டவை எக்ஸ்4 பிளாக் ஷேடோவ் எடிசனில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இத்துடன், கூடுதல் சிறப்பு அம்சங்களாக எக்ஸ்4 சொகுசு எஸ்யூவி காரில் 3 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், எஞ்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பொத்தான், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ட்வீக்கட் சென்டர் கன்சோல் மற்றும் புதிய கியர் லிவர் உள்ளிட்டவையும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஹில் டெசன்ட் கன்ட்ரோல், பிஎம்டபிள்யூ லைவ் காக்பிட் ப்ளஸ், ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உள்ளிட்ட அம்சங்களும் சொகுசு காரில் வழங்கப்பட்டுள்ளன.

எஞ்ஜினை பொருத்தவரை இரு விதமான தேர்வுகள் கொடுக்கப்பட இருக்கின்றது. அந்தவகையில், பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான தேர்வும் கொடுக்கப்படும். 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் ஆகிய மோட்டார் தேர்வுகளே கொடுக்கப்பட உள்ளன.

இதில், பெட்ரோல் எஞ்ஜின் 248 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. டீசல் எஞ்ஜின் 282 பிஎச்பி பவர் மற்றும் 650 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இத்துடன், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட இருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே காருக்கு போட்டியாக அமைய இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








