குட்டி காரான டாடா பஞ்சில் 700கிலோ பொருளை ஏற்றி சென்ற நபர்! மைலேஜ் எவ்ளோ கிடைச்சுது தெரிஞ்ச அசந்து போய்டுவீங்க!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் குட்டியான தோற்றம் கொண்ட பஞ்ச் காரில் 700 கிலோ எடையுள்ள பொருட்களை ஏற்றி சென்று ஓர் நபர் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் மலிவு விலை கார் மாடல்களில் டாடா பஞ்ச் (Tata Punch)-ம் ஒன்று. இது ஓர் மைக்ரோ எஸ்யூவி ரக காராகும். இந்தியாவின் அதிக பாதுகாப்பு வசதிக் கொண்ட காராகவும் இந்த கார் காட்சியளிக்கின்றது. விலையும், குறைவும் பாதுகாப்பும் அதிகம் என்பதால் இந்தியர்கள் மத்தியில் இந்த காருக்கு வரவேற்பு பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. அதேவேளையில், இதன் உருவமும் சிறியது என்பதால் பார்க் செய்ய பெரிய அளவு இடம் தேவைப்படாது என்பதாலும் நகர வாசிகள் இந்த கார் மாடலை அதிகளவில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

டாடா பஞ்ச்

இந்த மாதிரியான சூழலிலேயே டாடா பஞ்ச் காரை விசித்திரமான வகையில் ஓர் நபர் பயன்படுத்தி நம்மை ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றார். அவர் சுமார் 700 கிலோ எடையுள்ள பொருட்களை ஏற்றிச் செல்லவே பஞ்ச் காரை பயன்படுத்தி இருக்கின்றார். இந்த அளவு எடை உள்ள பொருட்களை ஏற்றிச் சென்ற போதிலும் மைலேஜ் திறனில் எந்தவிதமான பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்த தகவலை அந்த பஞ்ச் காரின் உரிமையாளரே ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார்.

இந்த தகவல் டாடா பஞ்ச் மீது கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஓர் பழ வியாபாரியே டாடா பஞ்ச் காரை வணிக வாகனம்போல் பயன்படுத்தியவர் ஆவார். கார் முழுக்க பழ பெட்டிகளை அடுக்கிக் கொண்டு சுமார் 125 கிமீ பயணம் மேற்கொண்டு பழங்களைக் கொண்டு போய் ஒப்படைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். கார் முழுக்க பெட்டி பெட்டியாக பழங்களை அடுக்கி சென்ற போதிலும் லிட்டர் ஒன்றுக்கு பஞ்ச் கார் 18 கிமீ மைலேஜை வழங்கி அசத்தி இருக்கின்றது.

டாடா பஞ்ச்

ஆரஞ்சு மற்றும் பப்பாளி போன்ற பல வகை பழங்கள் காரில் ஏற்றி செல்லப்பட்டிருக்கின்றன. காரின் முன் பகுதியில் மட்டுமின்றி பின் பக்கத்திலும் பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டு எடுத்து செல்லப்பட்டிருக்கின்றன. இதுபோன்று வழக்கமான பயணிகள் வாகனங்களை சரக்கு வாகனங்களாக பயன்படுத்துவது சற்றே ஆபத்தான ஒன்று என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். இதை உணராமலேயே பழை வியாபாரி பஞ்ச் காரை வணிக காவனமாக பயன்படுத்தி இருக்கின்றனர்.

பழங்கள் உருண்டு செல்லும் தன்மைக் கொண்டவை. பள்ளம் மேடுகள் நிறைந்த சாலையில் செல்லும்போது ஏதேனும் ஓர் பழம் உருண்டு சென்று பிரேக் அல்லது கிளட்ச் பெடலுக்கு அடியில் சிக்கி கொள்ளும் எனில் மிகவும் ஆபத்தான சூழல் உருவாகிவிடும். இதன் காரணமாகவே வணிக பயன்பாட்டிற்கு பயணிகள் வாகனங்களை பயன்படுத்தக் கூடாது என போக்குவரத்து விதிகள் கூறுகின்றன. இருப்பினும் ஒரு சிலர் தங்களின் தனிப்பட்ட வாகனங்களை வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

டாடா பஞ்ச்

Image Courtesy: Rohan Bhardwaj

அந்தவகையிலேயே பழ வியாபாரியும் தன்னுடைய பஞ்ச் காரை லோடு வண்டிபோல் பயன்படுத்தி இருக்கின்றார். அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைக்கின்ற அளவிற்கு மிக சின்னஞ்சிறிய காரில் அரை டன்னிற்கும் அதிகமான எடையுள்ள பழங்களை ஏற்றி சென்றிருக்கின்றார். இந்த நிலையிலும் டாடா பஞ்ச் மிக சிறப்பாக செயலாற்றி இருப்பதே அனைவருக்கும் கூடுதல் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதிக உறுதியான கட்டமைப்பு மற்றும் உயரமான வீல் பேஸைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த காரால் இந்த பெரும் எடையைத் தாங்க முடிந்திருக்கின்றது.

டாடா பஞ்ச் இந்தியாவில் ரூ. 5.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஒரே ஒரு பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே பஞ்ச் கார் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. 1.2 லிட்டர், 3-சிலிண்டர், ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் தேர்விலேயே அது கிடைக்கின்றது. அதேவேளையில், எம்டி மற்றும் ஏஎம்டி ஆகிய இரு விதமான டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் இந்த மோட்டாருடன் வழங்கப்படுகின்றது.

இந்த காரின் மின்சார வெர்ஷனையே டாடா மோட்டார்ஸ் இன்னும் சில வாரங்களில் வெளியீடு செய்ய இருக்கின்றது. வரும் ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவிலேயே இதன் அறிமுகம் அரங்கேற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு அம்சங்களிலும் இந்த கார் மிக சிறந்ததாகக் காட்சியளிக்கின்றது. டூயல் ஏர் பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், பிரேக் ஸ்வே கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற பன்முக பாதுகாப்பு அம்சங்களை பஞ்ச் கொண்டிருப்பதால் மோதல் ஆய்வில் மிக சிறப்பாக செயலாற்றி ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களை அது பெற்றது. இதுமாதிரியான பன்முக வசதிகளைக் கொண்டிருப்பதாலேயே இந்த கார் விற்பனையில் வெற்றிநடைப் போட்டுக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 29, 2022, 13:53 [IST]
English summary
Punch transports 700 kg load
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+