கார்கள் சேமிப்பில் அம்பானி, தோனியே தோத்திடுவாங்க போல.. யாருகிட்டையுமே இல்லாத கார் மாடலை இவரு வச்சிருக்காரு!

தல தோனியையே மிஞ்சும் அளவிற்கு மிகுந்த ஆர்வத்துடன் ஓர் இளைஞர் அரிய வகை விண்டேஜ் கார்கள் சேமிப்பில் ஈடுபட்டு வருகின்றார். அந்த இளைஞர் பற்றியும், அவர் வைத்திருக்கும் விண்டேஜ் கார்களை பற்றியும் விரிவாக காணலாம், வாங்க.

தொழிலதிபர் அம்பானி, தல தோனி இவர்கள் இருவரும் மிகப் பெரிய கார் பிரியர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. குறிப்பாக, தல தோனி அரிய வகை வாகனங்களை சேகரிப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களைபோல் இன்னும் பலர் வாகன காதலர்கள் இந்தியாவில் இருக்கின்றனர்.

அரிய கார்

குறிப்பாக, திரை நட்சத்திரங்கள் எக்கசக்கமானோர் கார்களை அதிகம் நேசிக்கக் கூடியவர்களாக உள்ளனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக அவர்களிடத்தில் எண்ணற்ற சொகுசு மற்றும் அரிய வகை வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இவர்கள் அனைவரையும் மிஞ்சும் வகையில் பஞ்சாப் மாநிலத்தில் ஓர் நபர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரிடத்தில் அதிக எண்ணிக்கையில் மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார்கள் பயன்பாட்டில் உள்ளன.

அவை அனைத்தும் அரிய வகை விண்டேஜ் ரக வாகனங்களாகும். அதேவேலையில், அவரிடத்தில் இருக்கும் ஒரு கார்கூட இப்போது வெளிச்சந்தையில் விற்பனைக்குக் கிடைக்க வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக சில கார் மாடல்கள் செகண்ட் ஹேண்ட் சந்தையில் கிடைப்பதுகூட அரிதான ஒன்றாக இருக்கின்றது. இத்தகைய விண்டேஜ் வகை பென்ஸ் கார்களையே பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அந்நபர் தன் வசம் வைத்திருக்கின்றார்.

https://www.youtube.com/embed/ckatM06Pvsg?rel=0

சுக் டேக்கர் எனும் அந்த இளைஞரே மிகப் பெரிய விண்டேஜ் கார் கலெக்டராக வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். தனது தந்தையை ரோல் மாடலாகக் கொண்டு விண்டேஜ் கார் கலெக்சனில் அவர் ஈடுபட்டு வருகின்றார். சுக் டேக்கரின் தந்தை ஹேண்ட் டூல்ஸ்களை தயாரிக்கும் ஆலையை நடத்தி வந்திருக்கின்றார். இந்த நிலையிலேயே அவர் ஓர் கிளாசிக் காரைப் பயன்பாட்டிற்கு வாங்கியிருக்கின்றார்.

அந்த வாகனம் அவருக்கு பிடித்துபோகவே அடுத்தடுத்தாக சில கிளாசிக் கார்களை அவர் வாங்கியிருக்கின்றார். குறிப்பாக, பென்ஸ் நிறுவனத்தின் கிளாசிக் கார்களாக தேடிப் பிடித்து அவர் வாங்கியிருக்கின்றார். இதே பாணியைத் தற்போது தந்தையைத் தொடர்ந்து சுக் டேக்கரும் கடைப்பிடித்து வருகின்றார். இதன் விளைவாக அவர்களிடத்தில் விண்டேஜ் கார்களின் எண்ணிக்கைக் கணிசமாக உயர்ந்துக் காணப்படுகின்றது. சுக் டேக்கர், தான் வாங்கும் விண்டேஜ் கார்களை அப்படியே பயன்படுத்துவதில்லை.

முதல் வேளையாக அந்த வாகனங்களை புதுப்பித்தல் மற்றும் டீடெய்லிங் ஆகியவற்றிற்கு அவர் உட்படுத்துவாராம். இதன் பின்னரே விண்டேஜ் வாகனங்களை பயன்பாட்டிற்கு உட்படுத்துகின்றார். மெர்சிடிஸ் பென்ஸ் டபிள்யூ123 செடான் சொகுசு காரே அவர்கள் வாங்கிய முதல் விண்டேஜ் வாகனம் என கூறப்படுகின்றது. இந்த வாகனம் இங்கிலாந்து நாட்டில் விற்பனைச் செய்யப்பட்ட மாடல் ஆகும்.

ஆகையால், அந்த கார் இப்போதும் வலது கை இயக்கம் வசதிக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. இதுமட்டுமின்றி இன்னும் சில டபிள்யூ123 கார் மாடல்களும் சுக் டேக்கர் இடத்தில் பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக, ஜெர்மனி நாட்டில் தயாரிக்கப்பட்ட யூனிட்டும் அவரிடத்தில் இருக்கின்றது. தன்னிடம் இருக்கும் விண்டேஜ் கார்களை சுக் டேக்கர் புதுப்பித்தலுக்கு உட்படுத்தினாலும், அதன் ஒரிஜினல் பாகங்களை அவர் பெரும்பாலும் மாற்ற மாட்டார் என கூறப்படுகின்றது.

ஒரிஜினல் பாகங்களுக்கு புத்துயிர் வழங்கி அதையே பயன்படுத்துவாராம். இதன் வாயிலாக அந்தந்த கார்களின் ஒரிஜினாலிட்டி அப்படியே பாதுகாப்படுகின்றது. மேலும், இந்த கார்களை பாதுகாப்பதற்கு என தனி கராஜையும் அவர் ஒதுக்கி வைத்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Article Published On: Sunday, November 20, 2022, 8:30 [IST]
English summary
Punjab man vintage mercedes benz car collection
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+