அமைச்சரின் உதவியாளர் செய்ய கூடிய காரியமா இது?.. இப்படி ஒரு காரியத்தை இனி அவர் வாழ் நாளில் செய்யவே மாட்டாரு!

இதெல்லாம் நீங்க செய்ய கூடிய காரியமா? என கேட்குமளவிற்கு ஓர் காரியத்தை அமைச்சரின் உதவியாளர் ஒருவர் செய்திருக்கின்றார். இதற்காக அவர் போலீஸிடத்தில் தக்க பாடத்தைக் கற்றிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

அமைச்சரின் உதவியாளர் செய்ய கூடிய காரியமா இது?.. இப்படி ஒரு காரியத்தை இனி அவர் வாழ் நாளில் செய்யவே மாட்டாரு!

பஞ்சாப் மாநிலத்தின் பாதுகாப்பு சேவைகள் நலன் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறையின் அமைச்சர் ஃபௌஜா சிங் சராரி. இவரின் உதவியாளராக பணியாற்றி வருபவரே ஜோனி கபூர். இவரையே பஞ்சாப் மாநில காவல்துறையினர் தற்போது கைது செய்திருக்கின்றனர். இவரின் கைதிற்கு முக்கிய காரணமே அவர் பயன்படுத்தி வந்த இந்த வெள்ளை ஹோண்டா சிட்டி கார்தான் என்றால் உங்களால் நம்ப முடிகின்றது.

அமைச்சரின் உதவியாளர் செய்ய கூடிய காரியமா இது?.. இப்படி ஒரு காரியத்தை இனி அவர் வாழ் நாளில் செய்யவே மாட்டாரு!

அமைச்சரின் உதவியாளரான ஜோனி கபூர் அமைச்சருக்கே இல்லாத அதிகாரத்தை அவர் கையில் எடுத்திருக்கின்றார். அதாவது, அவரது சொந்த காரில் தேசிய கொடியை பறக்க விட்ட வண்ணம் பயணித்திருக்கின்றனர். இந்த காரணத்திற்காகவே ஜோனி கபூரை காவல்துறையினர் தற்போது கைது செய்திருக்கின்றார். அவர் மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரின் உதவியாளர் செய்ய கூடிய காரியமா இது?.. இப்படி ஒரு காரியத்தை இனி அவர் வாழ் நாளில் செய்யவே மாட்டாரு!

இவர் பயன்படுத்த தடைச்செய்யப்பட்ட ஹூட்டர் வகை அலாரங்களையும் பயன்படுத்தியிருக்கின்றார். ஆகையால், தேசிய கொடியை அவமானப்படுத்தியது மற்றும் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்ட ஒலிப்பான்களை பயன்படுத்தியது உள்ளிட்டவற்றிற்காக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 170 மற்றும் 336 ஐபிசி பிரிவுகளின்கீழும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரின் உதவியாளர் செய்ய கூடிய காரியமா இது?.. இப்படி ஒரு காரியத்தை இனி அவர் வாழ் நாளில் செய்யவே மாட்டாரு!

அமைச்சரின் உதவியாளரை காவல்துறையினர் கைது செய்ததற்கு ஆம் ஆத்மி கட்சியினர் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாராக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் ஒன்றே கூறி காவல்துறையினரை எதிர்கட்சியினர் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆகையால், பஞ்சாபில் இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கின்றது.

அமைச்சரின் உதவியாளர் செய்ய கூடிய காரியமா இது?.. இப்படி ஒரு காரியத்தை இனி அவர் வாழ் நாளில் செய்யவே மாட்டாரு!

அனைவராலும் இந்திய தேசிய கொடியை தங்களின் வாகனங்களில் பறக்கவிட முடியுமா?

பஞ்சாப் மாநில காவல்துறையினரின் இந்த நடவடிக்கை எக்கசக்க கேள்விகளை நம் மத்தியில் எழுப்பியிருக்கின்றது. குறிப்பாக, தேசிய கொடியை யாராலும் அவர்களுது வாகனங்களில் பயன்படுத்த முடியாதா? அப்படி பயன்படுத்த முடியும் என்றால் யார் யாரெல்லாம் தேசிய கொடியை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற சந்தேகமே எழும்பியிருக்கின்றது.

அமைச்சரின் உதவியாளர் செய்ய கூடிய காரியமா இது?.. இப்படி ஒரு காரியத்தை இனி அவர் வாழ் நாளில் செய்யவே மாட்டாரு!

கார்களில் இந்திய தேசியக் கொடியை காண்பிக்கும் சிறப்புரிமை இந்திய ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, ஆளுநர்கள் மற்றும் லெப்டினன்ட் கவர்னர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரக தலைவர்கள், பிரதமர், கேபினட் அமைச்சர்கள், மக்களவை சபாநாயகர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோரே பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அமைச்சரின் உதவியாளர் செய்ய கூடிய காரியமா இது?.. இப்படி ஒரு காரியத்தை இனி அவர் வாழ் நாளில் செய்யவே மாட்டாரு!

பிறரால் இந்திய தேசியக் கொடியை தங்களின் வாகனங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும். தேசிய கொடியை வாகனங்களில் பயன்படுத்த சில வழிக்காட்டுதல் உள்ளன. இதற்காக பிரிவு 3.12 ஐ அரசு உருவாக்கியிருக்கின்றது. இதுவே ஒருவர் தேசிய கொடியை எப்படி காட்ட வேண்டும் என்பதை நமக்கு கூறுகின்றது. அதாவது, மோட்டார் காரில் தேசிய கொடி தனியாக காட்டப்பட வேண்டும், பானட்டின் நடுவில் அல்லது காரின் முன் வலது பக்கத்தில் உறுதியாகப் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதையே அப்பிரிவு கூறுகின்றது.

அமைச்சரின் உதவியாளர் செய்ய கூடிய காரியமா இது?.. இப்படி ஒரு காரியத்தை இனி அவர் வாழ் நாளில் செய்யவே மாட்டாரு!

அதேவேலையில், தேசியக் கொடி தலைகீழாக பொருத்தியிருந்தால் அல்லது பாதிப்புக்கு உள்ளாகி இருந்தால் அல்லது வேறு ஏதேனும் அவமானப்படுத்தும் வகையில் இருக்குமானால் கடுமையான நடவடிக்கையை எடுக்கவும் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விதிகள் தேசிய கொடி பற்றி அவதூறாக பேசுவது, அவமரியாதையாக பயன்படுத்துவது உள்ளிட்டவற்றிற்கும் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வழிவகை செய்கின்றது.

அமைச்சரின் உதவியாளர் செய்ய கூடிய காரியமா இது?.. இப்படி ஒரு காரியத்தை இனி அவர் வாழ் நாளில் செய்யவே மாட்டாரு!

இதற்கு முன்னதாக இந்திய குடிமக்கள் தேசிய கொடியை பயன்படுத்தத் தெரியாமல் பயன்படுத்திய காரணங்களுக்காக தண்டனைக்கு ஆளாகியிருக்கின்றனர். ஆனால், இதுவரை எத்தனை வாகன ஓட்டிகள் மீது இதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய புள்ளி விபரங்கள் வெளியிடப்படவில்லை.

அமைச்சரின் உதவியாளர் செய்ய கூடிய காரியமா இது?.. இப்படி ஒரு காரியத்தை இனி அவர் வாழ் நாளில் செய்யவே மாட்டாரு!

சமீபத்தில், தேசிய கொடியை ஒருவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தை துடைக்க பயன்படுத்தியதற்காக டெல்லி போலீஸார் ஓர் இளைஞரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இளைஞரின் செயல்குறித்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பு: முதல் படத்தை தவிர மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 13, 2022, 18:58 [IST]
English summary
Punjab minister s aide arrested for using indian flag on his private car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+