வாக்குச்சாவடிக்கு விலையுயர்ந்த காரில் வந்த நடிகர் சோனு சூட்... தடுத்து நிறுத்தி காரை பறிமுதல் செய்த போலீஸ்!
வாக்குச்சாவடி மையத்திற்கு வந்த சோனு சூட் தடுத்து நிறுத்தப்பட்டு, அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றது. காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கான காரணத்தையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

திரையில் வில்லனாகவும், ரியல் லைஃபில் ஹீரோவாகவும் செயல்பட்டு வருகிறார் பிரபல நடிகர் சோனு சூட். அண்மையில்கூட நடு ரோட்டில் விபத்துக்குள்ளாகி இருந்த ஓர் நபரை தானே தூக்கி சென்று, தன்னுடைய காரில் வைத்து மருத்துவமனை அழைத்துச் சென்றிருந்தார். இதனால் பலரின் புகழை அவர் சம்பாதித்தார். இதுமட்டுமின்றி கொரோனா காலத்தில் எண்ணற்ற நற்பணிகளை அவர் செய்திருந்தார்.

குறிப்பாக, போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் போக்குவரத்து வசதியையும், உணவையும் அவர் வழங்கினார். இதுபோன்ற செயல்களினால் சோனு சூட்-க்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலையிலேயே நடிகரின் காரை காவல்துறையினர் பறிமுதல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற தொடங்கியிருக்கின்றது. ஆகையால், காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு பஞ்ஜாப் மாநிலத்தின் மோகா மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களே நடிகரின் விலையுயர்ந்த காரை பறிமுதல் செய்திருக்கின்றனர்.

வாக்களிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் சோனு சூட் தேவையில்லாமல் வாக்குச்சாவடி மையத்திற்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படுகின்றது. இதைக் காரணம் காட்டி போலீஸார் சம்பவ இடத்தில் வைத்து காரை பறிமுதல் செய்திருக்கின்றனர்.

சோனு சூட்-இன் விலையுயர்ந்த ஃபோர்டு என்டீயோவர் காரே தற்போது பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றது. இக்கார் தற்போது இந்தியாவில் விற்பனையில் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஃபோர்டு நிறுவனத்தின் வெளியேற்றத்தால் இந்த நிலை உருவாகியுள்ளது. மிகவும் பிரமாண்டமான தோற்றம் கொண்ட இந்த காருக்கு செல்வந்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. ரூ. 29.99 லட்சத்திற்கும் அதிகமான விலையில் இக்கார் நாட்டில் விற்பனைச் செய்யப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

இத்தகைய ஓர் விலையுயர்ந்த காரையே காவலர்கள் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து, சிறிது நேரத்திலேயே அவரை காவலர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேலையில் அவரை வீட்டுக் காவலலில் வைத்து போலீஸார் கண்கானித்திருக்கின்றனர். சோனு சூட்-இன் தங்கை மாளவிகா சூட், மோகா தொகுதியில் காங்கிரஸ் வேட்பளாராக தேர்தலில் நின்றிருக்கின்றார்.

இந்த நிலையிலேயே தேர்தல் சரிவர நடக்கின்றதா என்பதை ஆராயவே தான் தொகுதிக்கு வந்ததாக சோனு சூட் காரணம் தெரிவித்தார். மேலும், "எதிர்கட்சியினர் பணப்பட்டுவாடா மற்றும் வாக்காளர்களை மிரட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதாக எங்களுக்கு தகவல் வந்தது. இதுகுறித்து கள ஆய்வு செய்யவே தான் வந்திருப்பதாகவும்" அவர் தெரிவித்தார்.

ஆனால், இதற்கு அனுமதி வழங்க முடியாது என மறுப்பு தெரிவித்த காவல்துறையினர், சோனு சூட்-ஐ வழியிலேயே தடுத்து நிறுத்தி, அவரது காரையும் பறிமுதல் செய்தனர். இதுதவிர வேறு எந்த காரணமும் காரை பறிமுதல் செய்வதற்கு போலீஸார் தரப்பில் இருந்து கூறப்படவில்லை. ஆகையால், கார் எந்தவித போக்குவரத்து விதிமீறலிலும் ஈடுபடவில்லை என்பது தெரிகின்றது.

இப்போது சோனு சூத்-இன் காரை காவலர்கள் பறிமுதல் செஞ்சுட்டாங்களே அவர் எப்படிங்க பயணங்களை மேற்கொள்வாருனு கேக்குறீங்களா... கவலையேப்படாதீங்க, அவரு கிட்ட இதுபோல இன்னும் பல கார்கள் இருக்கின்றன. அந்தவகையில், சோனு சூட் இடத்தில் போர்ஷே பனமேரா (Porsche Panamera), ஆடி க்யூ7 (Audi Q7), மெர்சிடிஸ் பென்ஸ் எம்எல் கிளாஸ் (Mercedes-Benz ML-Class) மற்றும் மாருதி சுசுகி ஜென் (Maruti Suzuki Zen) உள்ளிட்ட கார்கள் இருக்கின்றன.

இதுதவிர, அவரிடத்தில் பழைய பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) ஸ்கூட்டர் மற்றும் மிக மிக விலையுயர்ந்த காரான மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ்600 (Mercedes Maybach GLS 600) கார் உள்ளிட்ட வாகனங்களும் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications