இமைக்கா நொடிகள் நடிகை வாங்கிய விலையுயர்ந்த சொகுசு கார்... யாருக்காக வாங்கினாங்க தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

பிரபல நடிகை ராஷி கண்ணா ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கியிருக்கின்றார். ஆனால், இந்த காரை அவருக்காக வாங்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இமைக்கா நொடிகள் நடிகை வாங்கிய விலையுயர்ந்த சொகுசு கார்... யாருக்காக வாங்கினாங்க தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

மெட்ராஸ் கஃபே எனும் இந்தி படத்தின் வாயிலாக முதல் முறையாக திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. துணை நடிகையாகவே இந்தப் படத்தில் அவர் தோன்றினார். இதன் பின்னரே தெலுங்கில் முன்னணி நடிகையாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. நடிப்பு மட்டுமின்றி பாடல் துறையிலும் கால் தடம் பதிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

இமைக்கா நொடிகள் நடிகை வாங்கிய விலையுயர்ந்த சொகுசு கார்... யாருக்காக வாங்கினாங்க தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஆகையால், நடிப்பு மற்றும் இசை என இரண்டிலும் அவருக்கு ரசிக பட்டாளம் பரந்து விரிந்துக் காணப்படுகின்றது. தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, சங்கத் தமிழன், அரண்மனை 3 போன்ற முன்னணி திரைப்படங்களில் ராஷி கண்ணா நடித்திருக்கின்றார். ஆகவே, அவருக்கு தமிழ் திரையுலகிலும் ரசிகர்கள் உள்ளனர்.

இமைக்கா நொடிகள் நடிகை வாங்கிய விலையுயர்ந்த சொகுசு கார்... யாருக்காக வாங்கினாங்க தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

வளர்ந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவராக மாறியிருக்கின்றார். இத்தகைய ஓர் ஃபேமஸான நடிகையே அன்னையர் தினமான நேற்று (மே 8) ஓர் தரமான சம்பவத்தை நிகழ்த்தியிருக்கின்றார். அவரது அம்மாவிற்கு விலையுயர்ந்த ஓர் பொருளை பரிசாக அவர் வாங்கிக் கொடுத்திருக்கின்றார். பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வரும் பிரபலமான கார் மாடல்களில் 7 சீரிஸ் மாடலும் ஒன்று. இந்த காரையே தனது தாய்க்கு ராஷி கண்ணா பரிசாக வழங்கியிருக்கின்றார்.

இமைக்கா நொடிகள் நடிகை வாங்கிய விலையுயர்ந்த சொகுசு கார்... யாருக்காக வாங்கினாங்க தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இது ஓர் செடான் ரக சொகுசு கார் ஆகும். அன்னையர் தினத்தில் தனது தாயை ஆச்சரிய பரிசால் மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக இக்காரை அவர் பரிசளித்திருக்கின்றார். கிளாசிக் ப்ளூ மெட்டாலிக் நிற 740எல்ஐ (BMW 740Li) தேர்வே பரிசளிக்கப்பட்டிருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் ரூ. 1.41 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இமைக்கா நொடிகள் நடிகை வாங்கிய விலையுயர்ந்த சொகுசு கார்... யாருக்காக வாங்கினாங்க தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

கார் பரிசளிப்பு செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட படம் தற்போது இணையத்தின் வாயிலாக வெளியாகியுள்ளது. ராசி கண்ணா, அவரது அப்பா மற்றும் அம்மா ஆகிய மூவரும் காருடன் போஸ் கொடுக்கும் படமே வெளியாகியிருக்கின்றது. இது ஓர் அதிக சொகுசு வசதிகள் நிறைந்த கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இமைக்கா நொடிகள் நடிகை வாங்கிய விலையுயர்ந்த சொகுசு கார்... யாருக்காக வாங்கினாங்க தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை, ஆம்பியன்ட் மின் விளக்குகள், 4 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஸ்டோரேஜ் வசதியுடன் கூடிய ஆர்ம்ரெஸ்ட், முன் பக்கத்தில் மெமரி வசதிக்கொண்ட எலெக்ட்ரிக் இருக்கைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இமைக்கா நொடிகள் நடிகை வாங்கிய விலையுயர்ந்த சொகுசு கார்... யாருக்காக வாங்கினாங்க தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதுதவிர, பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், மசாஜ் செய்யும் இருக்கை, ஹீட்டிங் வசதிக் கொண்ட இருக்கை, வெல்கம் லைட் கார்பெட் போன்ற அம்சங்களும் 7 சீரிஸில் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், எக்கசக்க தொழில்நுட்ப வசதிகளும் இந்த காரில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இமைக்கா நொடிகள் நடிகை வாங்கிய விலையுயர்ந்த சொகுசு கார்... யாருக்காக வாங்கினாங்க தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

அந்தவகையில், ஒயர்லெஸ் வசதிக் கொண்ட ஆப்பிள் கார் ப்ளே, எல்சி வண்ண திரை, கெஸ்சர் கன்ட்ரோல், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட், 12.3 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் திரை, 10.25 கன்ட்ரோல் திரை, 3டி நேவிகேஷன் மேப், வாய்ஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இமைக்கா நொடிகள் நடிகை வாங்கிய விலையுயர்ந்த சொகுசு கார்... யாருக்காக வாங்கினாங்க தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

மேலும், இந்த காரில் பாதுகாப்பு வசதிகளும் மிக ஏராளமாக வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், பன்முக ஏர் பேக்குகள், பிரேக் அசிஸ்ட் உடன் கூடிய ஏபிஎஸ், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல், கிராஷ் சென்சார், எலெக்ட்ரானிக் வெயிக்கிள் இம்மொபிலைசர், ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை மவுண்ட், சைடு இம்பேக்ட் புரடெக்சன் மற்றும் டயர் பிரஷ்ஷர் மானிட்டர் உள்ளிட்ட அம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன.

Article Published On: Tuesday, May 10, 2022, 8:30 [IST]
English summary
Raashi khanna gifts a luxury sedan bmw 7 series to her mother
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+