அற்பத்தனமாக நடந்து கொண்டாரா நடிகை தீபிகா படுகோனின் கணவர்! பெரும் அபராதத்தில் இருந்து கிரேட் எஸ்கேப் ஆன ரன்வீர்

பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனின் கணவரும், இந்தி திரையுலகின் நட்சத்திர நடிகருமான ரன்வீர் சிங் மீது இன்சூரன்ஸ் இல்லாமல் காரை பயன்படுத்தி வந்ததாக குற்றச்சாட்டு எழும்பியிருக்கின்றது. இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் இருக்கும் உண்மை என்ன என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

அற்பத்தனமாக நடந்து கொண்டாரா நடிகை தீபிகா படுகோனின் கணவர்! ரூ. 2,000 அபராதத்தில் இருந்து கிரேட் எஸ்கேப் ஆன ரன்வீர் சிங்!

சொகுசு கார்களை அதிக எண்ணிக்கையில் வைத்திருக்கும் இந்தி நடிகர்களில் ரன்வீர் சிங்கும் ஒருவர். இவரிடத்தில் ரூ. 50 லட்சம் தொடங்கி ரூ. 4 கோடி வரை மதிப்புள்ள கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த நிலையிலேயே அவர் வைத்திருக்கும் கார் ஒன்றிற்கு இன்சூரன்ஸ் இல்லை என்ற புகார் எழும்பியிருக்கின்றது.

அற்பத்தனமாக நடந்து கொண்டாரா நடிகை தீபிகா படுகோனின் கணவர்! ரூ. 2,000 அபராதத்தில் இருந்து கிரேட் எஸ்கேப் ஆன ரன்வீர் சிங்!

ரன்வீர் இடத்தில் இருக்கும் பல சொகுசு கார்களில் அஸ்டன் மார்ட்டின் ரேபிட் -ம் ஒன்று. இந்த காரையே இன்சூரன்ஸ் இல்லாமல் நடிகர் சாலையில் பயன்படுத்தி வருவாதக குற்றச்சாட்டு எழும்பியிருக்கின்றது. அண்மையில், வெள்ளை நிறத்திலான இந்த காரை நீல நிறத்திற்கு நடிகர் மாற்றினார். இதனால், இந்த கார் பற்றிய படங்கள் மிக வேகமாக இணையத்தில் வைரலாகியது.

அற்பத்தனமாக நடந்து கொண்டாரா நடிகை தீபிகா படுகோனின் கணவர்! ரூ. 2,000 அபராதத்தில் இருந்து கிரேட் எஸ்கேப் ஆன ரன்வீர் சிங்!

இந்த படத்தில் இருக்கும் பதிவெண்ணை ஆதாராமாகக் கொண்டு சில இணைய வாசிகள் இன்சூரன்ஸ் விபரத்தை ஆன்லைன் வாயிலாக பெற்றிருக்கின்றனர். அதில், ரன்வீர் சிங் பயன்படுத்தி வரும் அஸ்டன் மார்ட்டின் காரில் இன்சூரன்ஸ் இல்லை என்பது தெரிய வந்திருக்கின்றது. எனவே, நெட்டிசன் பலர் ஆன்லைன் வாயிலாக இதுகுறித்து புகார் அளித்தும், காவல்துறையை டேக் செய்து சமூக வலைதளங்களில் பதிவையும் போட்டனர்.

அற்பத்தனமாக நடந்து கொண்டாரா நடிகை தீபிகா படுகோனின் கணவர்! ரூ. 2,000 அபராதத்தில் இருந்து கிரேட் எஸ்கேப் ஆன ரன்வீர் சிங்!

எனவே, இந்த விவகாரம் தற்போது இணையத்திலும் சரி, பாலிவுட் திரையுலகிலும் சூட்டை கிளப்பியிருக்கின்றது. பலர் விடுத்த புகாரை அடுத்து மும்பை நகர காவல்துறை இந்த விவகாரத்தை போக்குவரத்துத்துறைக்கு மாற்றியிருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த நிலைியல், நடிகர் ரன்வீர் சிங் சார்பில் குறிப்பிட்ட சில ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அற்பத்தனமாக நடந்து கொண்டாரா நடிகை தீபிகா படுகோனின் கணவர்! ரூ. 2,000 அபராதத்தில் இருந்து கிரேட் எஸ்கேப் ஆன ரன்வீர் சிங்!

அந்த ஆவணங்கள் ரன்வீர் பயன்படுத்தும் விலையுயர்ந்த காருக்கு இன்சூரன்ஸ் இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. மேலும், முறையான ஆவணம் இன்றி யாரும் குற்றம் சாட்ட வேண்டாம் என்று ஆவணங்களைத் தொடர்ந்து அனைவருக்கும் ரன்வீர் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓர் வாகனம் பற்றிய முக்கிய விபரங்கள் அனைத்தும் பாரிவாஹன் தளத்தில் இடம் பெற்றிருக்கும்.

அற்பத்தனமாக நடந்து கொண்டாரா நடிகை தீபிகா படுகோனின் கணவர்! ரூ. 2,000 அபராதத்தில் இருந்து கிரேட் எஸ்கேப் ஆன ரன்வீர் சிங்!

இந்த தளத்தில் சில நேரங்களில் முறையான அப்டேட் வழங்கப்படுவதில் சிக்கல் ஏற்படுகின்றது. இதுமாதிரியான ஓர் காரணத்தினாலேயே ரன்வீர் சிங் மீது பொய்யான குற்றச்சாட்டு எழும்பியிருப்பதாக கூறப்படுகின்றது. அனைத்து வாகனங்களுக்கும் முறையான ஆவணங்களை ரன்வீர் வைத்திருப்பதாக அவரது தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அற்பத்தனமாக நடந்து கொண்டாரா நடிகை தீபிகா படுகோனின் கணவர்! ரூ. 2,000 அபராதத்தில் இருந்து கிரேட் எஸ்கேப் ஆன ரன்வீர் சிங்!

மும்பையில் இன்சூரன்ஸ் இல்லாத வாகனதாரர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வரை அபராதம் வழங்கப்படுகின்றது. இந்த பெருத்த அபராதத்தில் இருந்தே தற்போது தீபிகா படுகோனின் நடிகரும், முன்னணி பாலிவுட் திரைநட்சத்திரமுமான ரன்வீர் சிங் தற்போது தப்பித்திருக்கின்றார். இவர் பயன்படுத்தி வரும் அஸ்டன் மார்ட்டின் ரேபிட் எஸ் காரின் மதிப்பு ரூ. 3.29 கோடி என கூறப்படுகின்றது.

அற்பத்தனமாக நடந்து கொண்டாரா நடிகை தீபிகா படுகோனின் கணவர்! ரூ. 2,000 அபராதத்தில் இருந்து கிரேட் எஸ்கேப் ஆன ரன்வீர் சிங்!

இந்த காரில் ஏஎம்29 வி12 மோட்டாரையே நிறுவனம் பயன்படுத்துகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 552 பிஎச்பி பவரையும், 620 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 327 கிமீ ஆகும். இதுமட்டுமில்லைங்க, இந்த சூப்பர் சொகுசு கார் வெறும் 4.2 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறன் கொண்டது.

அற்பத்தனமாக நடந்து கொண்டாரா நடிகை தீபிகா படுகோனின் கணவர்! ரூ. 2,000 அபராதத்தில் இருந்து கிரேட் எஸ்கேப் ஆன ரன்வீர் சிங்!

இதுமட்டுமின்றி இவர்களிடத்தில் இன்னும் பல சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. ஆடி க்யூ5, ஆடி க்யூ7, ஜாகுவார் எக்ஸ்ஜே எல், லம்போர்கினி உருஸ் பியர்ல் கேப்சூல், மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600, ரேஞ்ஜ் ரோவர் வோக் எஸ்இ உள்ளிட்ட கார் மாடல்களையே இந்த பிரபலங்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு கார்களின் விலையும் பல லட்சங்களைக் கொண்டவை ஆகும். சில பல கோடிகளைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 19, 2022, 8:30 [IST]
English summary
Ranveer singh car insurance issue details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+