டொயோட்டா ஒரு நல்ல கார் தயாரிப்ப நிப்பாட்டுனதுக்கு இது தான் காரணமா? இவங்கள புரிஞ்சிக்கவே முடியலயே!

டொயோட்டா நிறுவனம் தனது சப்-காம்பேக்ட் எஸ்யூவி காரான அர்பன் க்ரூஸர் காரை காரின் தயாரிப்பை நிறுத்தியுள்ளது, இதற்கான காரணம் என்ன?

டொயோட்டா நிறுவனம் தனது அர்பன் க்ரூஸர் காரை தனது வெப்சைட்டிலிருந்து நீக்கியுள்ளது. கடந்த மாதம் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை. டொயோட்டாவின் இந்த திடீர் முடிவிற்கு என்ன காரணமாக இருக்கும் என அலசலாம் வாருங்கள்.

டொயோட்டா ஒரு நல்ல கார் தயாரிப்ப நிப்பாட்டுனதுக்கு இது தான் காரணமா? இவங்கள புரிஞ்சிக்கவே முடியலயே!

டொடயோட்டா நிறுவனத்தின் அர்பன் க்ரூஸர் கார் மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா காரின் ரீபேட்ஜ் வெர்ஷன் காராகும். டொயோட்டா நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு முதன் முறையாக இந்த அர்பன் க்ரூஸர் காரை இந்தியாவில் ரூ8.40 லட்சம்என்ற விலையில் அறிமுகப்படுத்தியது. அதிகமாகப் போட்டிகள் கொண்ட சப் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் இந்த காரை அந்நிறுவனம் களம் இறக்கியது. இதன் மூலம் சிறப்பான விற்பனையைப் பெற முடியும் என நம்பியது.

இந்த அர்பன் க்ரூஸர் காரில் 1.5 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 103 எச்பி பவரையும் 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த கார் அறிமுகமான புதிதில் ஓரளவிற்கு நல்ல விற்பனையையே பெற்றது. ஆனால் நாளாக நாளாக இந்த காருக்கான வரவேற்பு குறைந்து கொண்டே வந்தது. இறுதியாகக் கடந்த அக்டோபர் மாதம் இந்தியா முழுவதும் ஒருவர் கூட இந்த காரை வாங்கவில்லை.

கடந்த அக்டோபர் மாதம் தசரா, தீபாவளி எனப் பண்டிகைகள் நிறைந்த மாதம் என்பதால் அந்த காலகட்டங்களில் கார்களின் விற்பனை அதிகமாக இருக்கும். இருந்தாலும் அர்பன் க்ரூஸர் கார் ஒரு கார் கூட விற்காதது அந்நிறுவனத்திற்கு மட்டுமல்ல நமக்கும் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது. இந்த கார் அறிமுகமாகி 2 ஆண்டுகளில் மொத்தம் 65 ஆயிரம் கார்கள் விற்பனையாகியுள்ளன.

இந்த 65 ஆயிரம் கார்களிலும் பெரும்பாலும் இந்த காரை டயர் 2 மற்றும் டயர்3 நகரங்களில் தான் அதிகம் விற்பனை செய்தனர். டயர்1 மக்கள் இந்த காரை அதிகம் விரும்பவில்லை. இதற்கிடையில் டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்திவிட்டது. இந்த கார் மிட்-சைஸ் எஸ்யூவி காராக இருக்கிறது.

டொயோட்டா நிறுவனம் இந்த ஹைரைடர் காருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கிறது. டொயோட்டா நிறுவனத்தின் மிகப்பெரிய ஹிட் கார்களான இன்னோவா க்ரைஸ்டா, ஃபார்ச்சூனர் ஆகிய கார்களை போல ஹைரைடர் காரையும் மக்கள் அதிகம் விரும்புவார்கள் என எதிர்பார்க்கிறது.

இந்நிலையில் தான் அர்பன் க்ரூஸர் என்ற பெயரில் உள்ள கார் விற்பனையில் மந்தமாக இருப்பது கிட்டத்தட்ட அதே பெயரில் உள்ள அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் விற்பனையைப் பாதிக்கும் என அந்நிறுவனம் நினைத்திருக்கலாம். அதனால் தற்காலிகமாக அர்பன் க்ரூஸர் காரை நிறுத்திவிட்டு, அதே காரை டைசூர் என பெயரை மாற்றி மீண்டும் புதிய காராக சப்-காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் களம் இறக்கும் என்றே கூறப்படுகிறது.

Article Published On: Friday, November 11, 2022, 13:08 [IST]
English summary
Reason behind Toyota discontinued Urban Cruiser SUV
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+