ஃபஸ்ட் டைம் கார் வாங்க போறீங்களா.. இந்த கார நம்பி வாங்கலாம்.. எக்கசக்கமான பலன்கள் இருக்குது...

மாருதி நிறுவனம் தனது ஆல்டோ காரை 20 ஆண்டுகளாக விற்பனை செய்து வரும் நிலையில் இந்த காரை மக்கள் ஏன் விரும்பி வாங்கிறார்கள்? முதன்முறையாக வாங்குவதற்கு இந்த கார் ஏன் சிறந்தது என காணலாம் வாருங்கள்.

மாருதி சுஸூகி நிறுவனம் வெளியிடும் ஆல்டோ கார் இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக தனக்கென ஒரு இடத்தை பிடித்த காராக இருக்கிறது. 20 ஆண்டுகளாக இந்த கார் தான் சிறப்பாக விற்பனையாகும் காராக இருந்தது. இந்நிலையில் மாருதி நிறுவனம் தனது ஆல்டோ கே 10 காரின் புதிய வெர்ஷனை பல்வேறு அப்டேட்களுடன் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பதிவில் முன் முதலாக கார் வாங்குபவர்கள் ஏன் ஆல்டோ காரை தேர்வு செய்வது தான் சிறப்பாக இருக்கும் என காரணத்தை காணலாம்.

டிரெண்டி லுக்

மாருதி நிறுவனம் 20 ஆண்டுகளாக இந்த ஆல்டோ காரை விற்பனை செய்து வந்தாலும் அவ்வப்போது டிரெண்டிற்கு ஏற்ப இதை அப்டேட் செய்து கொண்டே வந்துள்ளது. தற்போதும் புதிய அப்டேட்களாக ஹனிகோம்ப் முகப்பு பக்க கிரில், பெப்பி ஹைட்லைட், அகலமான டிசைன், புரோஃபைல் பகுதியிலும் ஹனி கோம்ப் டிசைன், எல்இடி டெயில் லைட், கண்களை கவரும் எர்த் கோல்டு, சாலிட் ஒயிட், சில்கி சில்வர், கிரானைட் க்ரே, ஸ்பீடி ப்ளூ, மற்றும் சிசிலிங் ரெட் ஆகிய 6 கலர்கள் இருக்கிறது.

பட்ஜெட்

மாருதி ஆல்டோ கே10 ஒரு பட்ஜெட் கார், பட்ஜெட் கார் என்றால் காரின் விலை மட்டுமல்ல காரின் ஓட்டு மொத்த ஆயுள் முழுவதும் உள்ள பெட்ரோல், பராமரிப்பு என எல்லா விதமான செலவுகளிலும் இத பட்ஜெ கார் தான். இந்த கார் ரூ3.99 லடசம் என்ற விலையில் கிடைக்கிறது. இது லிட்டருக்கு 24.9 கி.மீ மைலேஜை வழங்குகிறது. இந்த காருக்கான சர்வீஸ் மற்றும் உதிரி பாகங்களின் விலையும் குறைவு தான்.

சிறியது ஆனால் பெருசு

புதிய ஆல்டோ கே10 கார் சிறிய கார் தான், அதனால் இதை எளிதாக எங்கு வேண்டுமானாலும் பார்க் செய்து கொள்ள முடியும். மிக குறைவான பார்க்கிங் ஸ்பேஸ் மட்டுமே இந்த காருக்கு தேவைப்படும். இந்த கார் மெத்தம் 3530 மிமீ நீளம், 1490 மிமீ அகலம், 1520 மிமீ உயரம் மற்றும் 4.5 மீட்டர் ரேடியஸ் ஆகியன உள்ளன. அதனால் இந்த காரை சிறிய சந்துகளில் கூட ஓட்டிச்செல்லமுடியும்.

ஆனால் இந்த காரில் 2380 மிமீ வீல்பேஸ் இருக்கிறது. இது காருக்குள் நல்ல இட வசதிகளை வழங்குகிறது. இதே போல 214 லிட்டர் பூட் ஸ்பேஸூம் இருக்கிறது. ஆக மொத்தத்தில் இந்த கார் வெளியிலிருந்து பார்க்கும் போது சிறிய கார், உள்ள இருந்து அனுபவிக்கும் போது பெரிய காராக இருக்கும்.

தொழிற்நுட்ப வசதிகள்

20 ஆண்டு பாரம்பரிய காராக இருந்தாலும், புதிதாக அப்டேட் செய்யப்பட்ட இந்த காரில் பல தொழிற்நுட்ப வசதிகள் இருக்கிறது. முதலில் இன்ஜினை பொருத்தவரை கே10சி பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினில் முக்கிய தொழிற்நுட்பமான டூயல்ஜெட் மற்றும் டூயல் விவிடி தொழிற்நுட்பம் இருக்கிறது. இது காருக்கு சிறப்பான ஃபெர்பாமென்ஸையும், நல்ல மைலேஜையும், நீண்ட கால உழைப்பையும் வழங்கும்.

இந்த காரில் ஏஜிஎஸ் ஆட்டோ கியர் தொழிற்நுட்ப வசதியம் வழங்கப்படுகிறது. இதனால் சிட்டி டிராஃபிக்கிற்குள் காரை நிறுத்தி நிறுத்தி பயணிக்கும் போது எரிச்சல் இல்லாமல் நிம்மதியாக பயணிக்க முடியும். இது போக இந்த ஆட்டோமெட்டிக் கியர் 24.9 கி.மீ மைலேஜை வழங்குகிறது. மேனுவல் கியர் கார் 24.39 கி.மீ மைலேஜை தான் வழங்குகிறது.

இந்த மாருதி ஆல்டோ கே10 கார் HEARTECT பிளாட்ஃபார்மில் தயாரகிறது. இந்த காரில் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், ட்வின் ஏர்பேக், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஹை ஸ்பீடு அலர்ட் மற்றும் சீட் பெல்ட் ரிமைன்டர்கள் இருக்கிறது. இது போக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஸ்மார்ட் போன் நேவிகேஷன் உடன் கூடிய ஸ்மார்ட்ப்ளே ஸ்டுடியோ சிஸ்டம் உள்ளது. இதில் போன் பேசுவது, மியூசிக் ஸ்டிரீம் செய்வது உள்ளிட்ட வசதிகளும் சுஸூகி கனெக்ட் வசதியும் இருக்கிறது.

இது போக இந்த காரில் சுஸூகி கனெக்ட் மூலம் வாகன டிராக்கிங் தகவல்கள், பாதுகாப்பு அலாரங்கள், ரிமோட் செயல்பாடுகள், இருக்கிறது. காரின் ஸ்டியரிங்கில் கண்ட்ரோல்கள் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

நம்பகமான நிறுவனம்

மாருதி நிறுவனம் இந்தியாவில் அதிகமான கார்களை விற்பனை செய்வதற்கு அதன் கார்கள் மட்டும் காரணமல்ல, அந்நிறுவனம் கார்களுடன் சேர்த்து நம்பகதன்மையையும் வழங்குகிறது. இந்தியா முழுவதும் இந்த காருக்கு சர்வீஸ் சென்டர் இருக்கிறது. விற்பனைக்கு பிறகான சப்போர்ட்டும் இந்த காரில் அதிகமாக இருக்கிறது. இது மட்டுமல்ல மாருதி பேட்ஜ் கொண்ட கார்களுக்கு மார்கெட்டில் ரீசேல் வெல்யூவும் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாகவே மாருதி நிறுவனம் இதுவரை இந்தியாவில் 43 லட்சம் ஹேட்ச் பேக் கார்களை விற்பனைசெய்துள்ளது. இதனால் நீங்களும் இந்த காரை நம்பி வாங்கலாம்.

Article Published On: Tuesday, November 8, 2022, 12:24 [IST]
English summary
Reason why most of people buy maruti suzuki alto k10 as their first car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+