அம்பானி கராஜில் இணைந்த புதிய சிவப்பு நிற பென்ட்லி பென்ட்யகா கார்... இதே கார் இவரிடம் ஏற்கனவே 3 உள்ளது...

அம்பானி குடும்பத்தினர் தனது கராஜில் புதிதாகச் சிவப்பு பென்ட்லீ பென்ட்யகா காரை வாங்கியுள்ளனர். இதே கார் இவர்களிடம் ஏற்கனவே 3 உள்ள நிலையில் தற்போது 4வதாக இந்த காரை இணைத்துள்ளனர். இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம்.

அம்பானி கராஜில் இணைந்த புதிய சிவப்பு நிற பென்ட்லி பென்ட்யகா கார் . . . இதே கார் இவரிடம் ஏற்கனவே 3 உள்ளது . . .

அம்பானி குடும்பம் என்றால் இந்தியாவில் தெரியாதவர்களே இருக்க முடியாது. இந்தியாவில் நம்பர் 1 பணக்காரராக இருந்தவர். இவர் குடும்பத்தினருக்கு சொந்தமான வீடு, இவர் நடத்தி வரும் தொழில்கள் எல்லாம் மக்கள் உற்ற கவனிக்க வைக்கும் விஷயம் இந்த பட்டியலில் நீண்ட நாட்களாக இருப்பது இவரிடம் உள்ள கார்கள்தான். மக்கள் பலர் இவர் வைத்திருக்கும் கார்களை பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள்.

அம்பானி கராஜில் இணைந்த புதிய சிவப்பு நிற பென்ட்லி பென்ட்யகா கார் . . . இதே கார் இவரிடம் ஏற்கனவே 3 உள்ளது . . .

அம்பானி குடும்பத்தினரிடம் உலகின் மிகப்பெரிய பிராண்ட்களான ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லி, மெர்சிடீஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, உள்ளிட்ட ஏராளமான சொகுசு கார்கள் எல்லாம் இருக்கிறது. இவர் சமீபத்தில் தனது கார் கலெக்ஷனில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லீனன் காரை சேர்ந்தார். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. ரோல்ஸ் ராய்ஸ் கல்லீனன் கார் இவருக்கு ஒன்றும் புதிதல்ல புதிதாகச் சேர்க்கப்பட்டது. இவரது கராஜில் இணையும் 5 வது கார்.

அம்பானி கராஜில் இணைந்த புதிய சிவப்பு நிற பென்ட்லி பென்ட்யகா கார் . . . இதே கார் இவரிடம் ஏற்கனவே 3 உள்ளது . . .

இந்நிலையில் இவர் சமீபத்தில் பென்ட்லி பென்ட்யகா காரை வாங்கியிருப்பதாகச் செய்திகள் வெளிவரத்துவங்கியுள்ளன. இது குறித்து யூடியூபில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் அம்பானி குடும்பத்தினருக்குச் சொந்தமான பென்ட்யகா எஸ்யூவி கார் ஒன்று இருந்தது. இந்த வீடியோவில் அவரது பாதுகாவலர்கள் இந்த காரில் இருந்தது. வீடியோவாக பதிவாகியுள்ளது. இந்த கார் மும்பை சாலையில் சென்றது பலரை கவனத்தை ஈர்த்துள்ளது.

அம்பானி கராஜில் இணைந்த புதிய சிவப்பு நிற பென்ட்லி பென்ட்யகா கார் . . . இதே கார் இவரிடம் ஏற்கனவே 3 உள்ளது . . .

அம்பானி குடும்பத்திற்கு பென்ட்யகா காரும் ஒன்று புதிது அல்ல ஏற்கனவே 3 பென்ட்யகா காரை அவர்கள் வைத்திருக்கின்றனர். 4வதாக சிவப்பு நிற பென்ட்லி பென்ட்யகா காரை வாங்கியுள்ளனர். இவரிடம் ஏற்கனவே எமரால்டு க்ரீன் நிறத்தில் ஒரு பென்ட்லி பென்ட்யகா கார் உள்ளது. இந்த கார் தான் அவரது கராஜில் சேர்ந்த முதல் பென்ட்யகா கார். அதன் பின்னர் ஆகாஷ் அம்பானி மற்றும் ஷோலோகா மேத்தா ஆகியோர் ரன்பீன் கபூர் வீட்டிற்கு வரும் போது வெள்ளை நிற பென்ட்யகா காரில் வந்திருந்தனர்.

அம்பானி கராஜில் இணைந்த புதிய சிவப்பு நிற பென்ட்லி பென்ட்யகா கார் . . . இதே கார் இவரிடம் ஏற்கனவே 3 உள்ளது . . .

பென்ட்லீ பென்ட்யகா காரை முதன் முறையாக இந்தியாவில் வாங்கியது அம்பானி குடும்பத்தினர் தான். இது ஒரு ரேஸிங் க்ரீஸ் ஷேடு காராகும். இந்த காரில் தான் பிரிட்லிங் நிறுவனத்தின் முல்லீனர் டூர்பில்லியன் இருக்கிறது. இது ஒரு சுழலும் வாட்ச் ஆகும். இந்த வாட்சின் விலை மட்டுமே ரூ1 கோடி வரும். அந்த வாட்ச் கொண்டு இந்தியாவில் இருக்கும் ஒரே ஒரு கார் இது தான்.

அம்பானி கராஜில் இணைந்த புதிய சிவப்பு நிற பென்ட்லி பென்ட்யகா கார் . . . இதே கார் இவரிடம் ஏற்கனவே 3 உள்ளது . . .

அம்பானி குடும்பத்தினர் வாங்கியிருக்கும் இந்த பென்ட்லி பென்ட்யகா கார் ஒரு டாப் எண்ட் மாடல் காராகும். இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 6.0 லிட்டர் டபிள்யூ12 பெட்ரோல் இன்ஜின் இருக்கிறது. இது 600 பிஎச்பி பவரையும், 900 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த காரை அதிக முறை முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி ஓட்டிச்செல்வதைப் பார்க்க முடிகிறது.

அம்பானி கராஜில் இணைந்த புதிய சிவப்பு நிற பென்ட்லி பென்ட்யகா கார் . . . இதே கார் இவரிடம் ஏற்கனவே 3 உள்ளது . . .

அம்பானி குடும்பத்தினர் வாங்கிய இரண்டாவது பென்ட்யகா காரை அவரது இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானி அதிகமாகப் பயன்படுத்துகிறார். இந்த காரில் பல ஹை என்ட் அம்சங்கள் இருக்கின்றன. இதுவரை தயாரிக்கப்பட்ட சொகுசு வசதிகள் நிறைந்த காரில் அதுவும் ஒன்று. இந்த கார் 4.0 லிட்டர் வி8 இன்ஜின் உடன் 542 பிஎச்பி பவரையும் 770 என்எம் டார்க் திறனையும் கொண்டது.

அம்பானி கராஜில் இணைந்த புதிய சிவப்பு நிற பென்ட்லி பென்ட்யகா கார் . . . இதே கார் இவரிடம் ஏற்கனவே 3 உள்ளது . . .

இந்த பென்ட்யகா காரை தவிர இவரது குடும்பத்தினருக்கு பென்ட்லீ நிறுவனத்தின் மேலும் பல சொகுசு கார்களும் சொந்தமாக இருக்கின்றன. குறிப்பாக பென்ட்லீ முல்சேன், கார்டினென்னடல் ஜிடி, ஃப்லையிங் ஸ்பூர், ஆகிய கார்களும் இவருக்குச் சொந்தமாக இருக்கிறது. பெட்லி கார்கள் போக இவர் குடும்பத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லீனன், பாந்தம், பாந்தம் ட்ராப்ஹெட் கூபே, மெர்சிடீஸ் மேபீச் எஸ் கிளாஸ், ரெகுலர் வெர்சன் எஸ்-கிளாஸ் மேலும் பல மெர்சிடீஸ்-பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எஸ்யூவி மற்றும் செடான் கார்களும் இருக்கின்றன.

அம்பானி கராஜில் இணைந்த புதிய சிவப்பு நிற பென்ட்லி பென்ட்யகா கார் . . . இதே கார் இவரிடம் ஏற்கனவே 3 உள்ளது . . .

இது போக அம்பானி குடும்பத்தாருக்குச் சொந்தமாக சில ஸ்போர்ட்ஸ் கார்களும் இருக்கின்றன. குறிப்பாக ஆஸ்டன் மார்டின், லார்போர்கினி உரூஸ், மசரெட்டி லிவன்டே உள்ளிட்ட பல கார்கள் இருக்கின்றன. தற்போது அவர் வாங்கியுள்ளது நாம் முன்னரே சொன்னது போல பென்ட்லீ பென்ட்யகா சிறப்பு நிற கார் தான். இந்த கார் 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு வி8 இன்ஜினை கொண்டது.

அம்பானி கராஜில் இணைந்த புதிய சிவப்பு நிற பென்ட்லி பென்ட்யகா கார் . . . இதே கார் இவரிடம் ஏற்கனவே 3 உள்ளது . . .

இதே இன்ஜின் மேலும் சில எஸ்யூவிகளான போர்ஷே கேயீன், லார்போர்கினி உரூஸ், ஆடி ஆர்எஸ் க்யூ8 ஆகிய கார்களிலும் இருக்கிறது. ஆனால் இது ஒவ்வொரு காரிலும் ஒவ்வொரு விதமாக ட்யூன் செய்யப்பட்டுள்ளது. இந்த காரை பொருத்தவரை 550 பிஎஸ் பவரையும், 770 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. பென்ட்லீ பென்ட்யகா காரில் உள்ள ஒரே கியர் ஆப்ஷன் இது தான். இந்த காரின் சரியான விலை விபரம் தெரியவில்லை, ஆனால் நிச்சயம் கோடிகளில் இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Red colored Bentley bentayga SUV added in Mukesh Ambanis car collection
Story first published: Saturday, October 1, 2022, 12:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X