ரெனால்ட் கார்களை வாங்குவதற்கு சரியான நேரம் வந்தாச்சு!! இந்த செப்டம்பரிலேயே புக் பண்ணிடுங்க, அப்போ தான்...

செப்டம்பர் மாதத்தை முன்னிட்டு ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் அதன் கார்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அவற்றை பற்றி முழுமையாக இனி தொடர்ந்து பார்க்கலாம்.

ரெனால்ட் கார்களை வாங்குவதற்கு சரியான நேரம் வந்தாச்சு!! இந்த செப்டம்பரிலேயே புக் பண்ணிடுங்க, அப்போ தான்...

பிரெஞ்சு நாட்டை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் இந்திய சந்தையில் தற்சமயம் க்விட், கைகர் & ரெனால்ட் என 3 கார் மாடல்களை மட்டுமே சந்தைப்படுத்தி வருகிறது. இவை மூன்றும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப விலை குறைவானவைகளாக இருப்பது மட்டுமின்றி, செயல்முறைகளுக்கும் ஏற்றவைகளாக உள்ளன.

ரெனால்ட் கார்களை வாங்குவதற்கு சரியான நேரம் வந்தாச்சு!! இந்த செப்டம்பரிலேயே புக் பண்ணிடுங்க, அப்போ தான்...

அதேநேரம் தோற்றத்திலும் இந்த ரெனால்ட் கார்கள் எந்தவொரு குறையும் சொல்ல முடியாத அளவிற்கு உள்ளன. இருப்பினும், இவற்றின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் பொருட்டு ரெனால்ட் நிறுவனம் நடப்பு செப்டம்பர் மாதத்திற்கான சலுகைகளையும் தள்ளுபடிகளையும் அறிவித்துள்ளது. இதனால், இந்த சலுகைகளுடன் ரெனால்ட் கார்களை வாடிக்கையாளர்கள் இந்த செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் மட்டுமே வாங்க முடியும்.

ரெனால்ட் கார்களை வாங்குவதற்கு சரியான நேரம் வந்தாச்சு!! இந்த செப்டம்பரிலேயே புக் பண்ணிடுங்க, அப்போ தான்...
Renault Cash Discount Exchange Bonus + Corporate Discount
Triber ₹15000 + ₹5000 (Rural Offer) ₹15000 + ₹10000
Kwid ₹10000 + ₹5000 (Rural) ₹15000 + ₹10000
Kiger ₹5000 (Rural) ₹10000 + ₹10000

விற்பனையில் உள்ள 3 ரெனால்ட் கார்களில், டிரைபர் அதிகப்படியான சலுகைகளை பெற்றுள்ளது. ரெனால்ட்டின் எம்பிவி காரான டிரைபரை இந்த செப்டம்பர் மாதத்தில் சுமார் ரூ.45,000 வரையிலான சலுகைகள் உடன் வாங்க முடியும். இதில் ரூ.15,000 மதிப்பிலான பணம் தள்ளுபடி, ரூ.15,000 மதிப்பிலான கார்ப்பிரேட் போனஸ் மற்றும் ரூ.10,000 மதிப்பிலான கார்ப்பிரேட் போனஸ் உள்ளிட்டவை அடங்குகின்றன.

ரெனால்ட் கார்களை வாங்குவதற்கு சரியான நேரம் வந்தாச்சு!! இந்த செப்டம்பரிலேயே புக் பண்ணிடுங்க, அப்போ தான்...

இவற்றுடன் கூடுதலாக, கிராமப்புறங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.5,000 கூடுதல் பணம் தள்ளுபடியை பெறலாம். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டிரைபரின் லிமிடெட் எடிசனை ரூ.35,000 வரையிலான சலுகைகளுடன் இந்த மாதத்தில் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரைபர் எம்பிவி காரில் தற்போதைக்கு ஒரேயொரு பெட்ரோல் என்ஜின் தேர்வை மட்டுமே ரெனால்ட் வழங்குகிறது.

ரெனால்ட் கார்களை வாங்குவதற்கு சரியான நேரம் வந்தாச்சு!! இந்த செப்டம்பரிலேயே புக் பண்ணிடுங்க, அப்போ தான்...

ஆனால் இந்த பெட்ரோல் என்ஜினை மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுடன் பெறலாம். டிரைபருக்கு அடுத்தப்படியாக, ரெனால்ட்டின் ஹேட்ச்பேக் காரான க்விட் மாடலுக்கு ரூ.40,000 மதிப்பிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ரூ.10,000 மதிப்பில் பணம் தள்ளுபடி, ரூ.15,000 வரையில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.10,000 மதிப்பிலான கார்பிரேட் போனஸ் உள்ளிட்டவை அடங்குகின்றன.

ரெனால்ட் கார்களை வாங்குவதற்கு சரியான நேரம் வந்தாச்சு!! இந்த செப்டம்பரிலேயே புக் பண்ணிடுங்க, அப்போ தான்...

டிரைபரை போல், ரெனால்ட் க்விட் ஹேட்ச்பேக் காரை வாங்கும் கிராமப்புறவாசிகள் ரூ.5000இல் கூடுதல் பணம் தள்ளுபடியை பெறலாம். இந்தியாவின் மிகவும் மலிவான ஹேட்ச்பேக் காராக விளங்கும் க்விட் 800சிசி பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் என இரு பெட்ரோல் என்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. மூன்றாவது காரும், ரெனால்ட்டின் ஒரேயொரு எஸ்யூவி காருமான கைகர் மாடலை குறைந்தப்பட்சமாக ரூ.25,000 வரையிலான சலுகைகள் உடன் பெற முடியும்.

ரெனால்ட் கார்களை வாங்குவதற்கு சரியான நேரம் வந்தாச்சு!! இந்த செப்டம்பரிலேயே புக் பண்ணிடுங்க, அப்போ தான்...

கைகருக்கு பணம் தள்ளுபடி எதையும் ரெனால்ட் வழங்கவில்லை. கிராமப்புற வாடிக்கையாளர்கள் மட்டும் ரூ.5,000 மதிப்பிலான பணம் தள்ளுபடியை இந்த காரில் பெற முடியும். அதாவது, கிராமப்புறங்களில் இருந்து கைகர் காம்பெக்ட் எஸ்யூவி காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் மொத்த கார் தொகையில் ரூ.5,000 குறைக்கப்படுமாம்.

ரெனால்ட் கார்களை வாங்குவதற்கு சரியான நேரம் வந்தாச்சு!! இந்த செப்டம்பரிலேயே புக் பண்ணிடுங்க, அப்போ தான்...

அதேநேரம் கைகர் மாடலை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.10,000 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.10,000 மதிப்பிலான கார்பிரேட் போனஸ் உள்ளிட்டவற்றையும் இந்த செப்டம்பர் மாதத்தில் பெற முடியும். இந்தியாவில் மிகவும் போட்டிமிகுந்த சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவில் நிலைநிறுத்தப்படும் கைகரில் 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் & 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரு விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

ரெனால்ட் கார்களை வாங்குவதற்கு சரியான நேரம் வந்தாச்சு!! இந்த செப்டம்பரிலேயே புக் பண்ணிடுங்க, அப்போ தான்...

ரெனால்ட் பிராண்டில் இருந்து கடந்த 2021 பிப்ரவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கைகருக்கு விற்பனையில் நிஸான் மேக்னைட், ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், டாடா நெக்ஸான் மற்றும் மிக சமீபத்திய அறிமுகமான மாருதி சுஸுகி பிரெஸ்ஸா உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன. டிரைபர் மட்டுமின்றி, க்விட் & கைகர் கார்களிலும் லிமிடெட் எடிசன்களை ரெனால்ட் சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, September 5, 2022, 19:03 [IST]
English summary
Renault cars festive discounts in september 2022 offers on kiger kwid triber details
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+