ரெனால்ட் கார்களுக்கு ரூ.1.30 லட்சம் வரையில் சலுகைகள்!! இந்த பிப்ரவரியில் வாங்குறது செம்ம லக்கு!

இந்தியாவில் விற்பனையில் உள்ள அனைத்து விதமான ரெனால்ட் கார்களுக்கும் 2022ஆம் ஆண்டிற்கான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ரெனால்ட் கார்களுக்கு ரூ.1.30 லட்சம் வரையில் சலுகைகள்!! இந்த பிப்ரவரியில் வாங்குறது செம்ம லக்கு!

பிரெஞ்சு கார் பிராண்டான ரெனால்ட்டில் இருந்து இந்திய சந்தையில் க்விட், ட்ரைபர், டஸ்டர் மற்றும் கிகர் உள்ளிட்ட கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவை அனைத்திற்கும் ரெனால்ட்டின் நடப்பு 2022 பிப்ரவரி மாதத்திற்கான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

ரெனால்ட் கார்களுக்கு ரூ.1.30 லட்சம் வரையில் சலுகைகள்!! இந்த பிப்ரவரியில் வாங்குறது செம்ம லக்கு!

இந்த சலுகையினை பெற 2022ஆம் ஆண்டில் மட்டுமின்றி, கடந்த 2021ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ரெனால்ட் காரையும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். இந்த அறிவிப்பின்படி, வாடிக்கையாளர்கள் மாடல், வேரியண்ட் மற்றும் வசிக்கும் மாநிலத்தை பொறுத்து அதிகப்பட்சமாக ரூ.1.3 லட்சம் வரையில் மதிப்பிலான சலுகைகளை பெற முடியும்.

ரெனால்ட் கார்களுக்கு ரூ.1.30 லட்சம் வரையில் சலுகைகள்!! இந்த பிப்ரவரியில் வாங்குறது செம்ம லக்கு!

கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதலே அமலுக்கு வந்துவிட்ட இந்த ரெனால்ட் சலுகை வருகிற பிப்.28ஆம் தேதியோடு நிறைவு பெற உள்ளது. இந்த சலுகையின்படி, இந்த பிப்ரவரி மாதத்தில் க்விட் காரினை அதிகப்பட்சமாக ரூ.35,000 வரையிலான தள்ளுபடிகளுடன் வாங்கலாம். இதில், ரூ.10,000 மதிப்பிலான பணம் தள்ளுபடி, ரூ.15,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.10,000 கார்ப்பிரேட் தள்ளுபடிகள் உள்ளிட்டவை அடங்குகின்றன.

ரெனால்ட் கார்களுக்கு ரூ.1.30 லட்சம் வரையில் சலுகைகள்!! இந்த பிப்ரவரியில் வாங்குறது செம்ம லக்கு!
Renault Kwid Offers
Standard Offers Benefits
Cash Discount Up to ₹10,000
Exchange Bonus Up to ₹15,000 (On 1.0L)

Up to ₹10,000 (On 0.8L

Corporate / Rural Discounts Up to ₹10,000 / ₹5,000
Total Savings * Up to ₹35,000
Alternative Offers
Loyalty Benefits Up to ₹37,000
Exchange Benefit under R.E.L.I.V.E. scrappage program Up to ₹10,000

2021 மற்றும் 2022 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட க்விட் ஹேட்ச்பேக் கார்களை வாங்குவோர் இந்த ரூ.35,000 வரையிலான சலுகையினை பெற முடியும். இத்துடன் R.E.L.I.V.E என்கிற பெயரிலான வாகன அழித்தல் திட்டத்தின் கீழ் ரூ.10,000 வரையிலான பணத்தையும் க்விட் கார்களை வாங்குவோர் சேமிக்க முடியும். 2 விதமான என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்படும் ரெனால்ட் க்விட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.4.24 லட்சத்தில் இருந்து ரூ.5.70 லட்சம் வரையில் உள்ளன.

ரெனால்ட் கார்களுக்கு ரூ.1.30 லட்சம் வரையில் சலுகைகள்!! இந்த பிப்ரவரியில் வாங்குறது செம்ம லக்கு!

ரெனால்டின் எம்பிவி மாடலாக விளங்கும் டிரைபரை பொறுத்தவரையில், இந்த காருக்கு ரூ.40,000 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ரூ.10,000 வரையிலான பணம் தள்ளுப்படி, ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.10,000 கார்ப்பிரேட் தள்ளுப்படிகள் உள்ளிட்டவை அடங்குகின்றன. ஆனால் டிரைபருக்கான சலுகைகளில் மட்டும் ஒரு விதிவிலக்கு உண்டு.

Renault Triber Offers
Standard Offers 2021 Benefits 2022 Benefits
Cash Discount Up to ₹10,000 (Except RXE) Up to ₹10,000
Exchange Bonus Up to ₹20,000 Up to ₹20,000
Corporate / Rural Discounts Up to ₹10,000 / ₹5,000 Up to ₹10,000 / ₹5,000
Total Savings * Up to ₹40,000 Up to ₹40,000
Alternative Offers
Loyalty Benefits Up to ₹44,000 Up to ₹44,000
Exchange Benefit under R.E.L.I.V.E. scrappage program Up to ₹10,000 Up to ₹10,000
ரெனால்ட் கார்களுக்கு ரூ.1.30 லட்சம் வரையில் சலுகைகள்!! இந்த பிப்ரவரியில் வாங்குறது செம்ம லக்கு!

அதாவது 2021ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட டிரைபரின் ஆர்.எக்ஸ்.இ வேரியண்ட்டை வாங்குபவர்களுக்கு மட்டும் இந்த சலுகைகள் கிடைக்காதாம். இத்துடன் க்விட் காரை போன்று, டிரைபர் எம்பிவி காரை இந்த மாதத்தில் வாங்குவோரும் ரூ.10,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் சலுகையினை ஸ்க்ராபேஜ் திட்டத்தின் கீழ் பெறலாம். 7-இருக்கை எம்பிவி காரான டிரைபரின் விலைகள் ரூ.5.69 - 8.25 லட்சங்கள் ஆகும்.

ரெனால்ட் கார்களுக்கு ரூ.1.30 லட்சம் வரையில் சலுகைகள்!! இந்த பிப்ரவரியில் வாங்குறது செம்ம லக்கு!

கிகர் ஹேட்ச்பேக் காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.55,000 வரையிலான சலுகைகள் இந்த பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ரூ.10,000 வரையிலான கார்ப்பிரேட் சலுகைகளும் அடங்குகின்றன. இந்தியாவின் மலிவான காம்பெக்ட் எஸ்யூவி காராக விளங்கும் ரெனால்ட் கிகரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5.79 லட்சங்களில் இருந்து ரூ.10.22 லட்சங்கள் வரையில் உள்ளன.

Renault Kiger Offers
Offers Benefits
Loyalty Benefits Up to ₹55,000
Corporate / Rural Discounts Up to ₹10,000 / ₹5,000
Total Savings Up to ₹65,000
ரெனால்ட் கார்களுக்கு ரூ.1.30 லட்சம் வரையில் சலுகைகள்!! இந்த பிப்ரவரியில் வாங்குறது செம்ம லக்கு!

இவை எல்லாவற்றையும் விடவும் டஸ்டர் எஸ்யூவி மாடலுக்கே அதிகப்படியான சலுகையினை இந்த பிப்ரவரி மாதத்தில் ரெனால்ட் அறிவித்துள்ளது. இந்த எஸ்யூவி காரினை இந்த பிப்ரவரியில் வாங்குவதன் மூலமாக அதிகப்பட்சமாக ரூ.1.30 லட்சம் வரையில் சேமிக்கலாம். இதில் ரூ.50,000 வரையிலான பணம் தள்ளுபடி (ஆர்.எக்ஸ்.இசட் 1.5 லிட்டர் ட்ரிம்-ஐ தவிர்த்து), ரூ.50,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.30,000 வரையிலான கார்ப்பிரேட் போனஸ் உள்ளிட்டவை அடங்குகின்றன.

ரெனால்ட் கார்களுக்கு ரூ.1.30 லட்சம் வரையில் சலுகைகள்!! இந்த பிப்ரவரியில் வாங்குறது செம்ம லக்கு!

அத்துடன் வாடிக்கையாளர்கள் அவர்களது ரெனால்ட் கார்களை இந்த சலுகையின்படி வாங்கி பிற்காலத்தில் அழிக்கும்போது ரூ.10,000 கூடுதல் தள்ளுப்படி ஆனது மற்ற கார்களை போல் டஸ்டரிலும் கிடைக்கும். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ரெனால்ட் கார்களிலேயே ஆற்றல்மிக்கதாக விளங்கும் டஸ்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9.86 லட்சங்களில் இருந்து ரூ.14.25 லட்சங்கள் வரையில் உள்ளன.

Renault Duster Offers
Standard Offers Benefits
Cash Discount Up to ₹50,000 (Except RXZ 1.5-litre)
Exchange Bonus Up to ₹50,000
Corporate / Rural Discounts Up to ₹30,000 / ₹15,000
Total Savings * Up to ₹1.30 lakh
Alternative Offers
Loyalty Benefits Up to ₹1.10 lakh
Exchange Benefit under R.E.L.I.V.E. scrappage program Up to ₹10,000
ரெனால்ட் கார்களுக்கு ரூ.1.30 லட்சம் வரையில் சலுகைகள்!! இந்த பிப்ரவரியில் வாங்குறது செம்ம லக்கு!

தொடர்ந்து அதிகரித்துவரும் உலோகங்களின் விலையினாலும், பாகங்கள் விநியோக சங்கிலியில் உருவாகும் தாமதங்களினாலும் கார்களின் விலைகளை ஒவ்வொரு வருடத்திற்கும் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தள்ளப்படுகின்றன. இதில் ரெனால்ட் நிறுவனம் மட்டும் என்ன விதிவிலக்கா. இத்தகைய விலை அதிகரிப்புகள் விற்பனையை பெரிய அளவில் பாதிக்காத வண்ணம்தான் இவ்வாறான சலுகைகள் அவ்வப்போது அறிவிக்கப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Sunday, February 6, 2022, 8:30 [IST]
English summary
Renault cars offers february 2022 discounts benefits on all models
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+