கார் ஓடி கொண்டிருக்கும்போது மயங்கிய ஓட்டுநர்... 25கிமீ பாதுகாப்பாக அழைத்து சென்ற கார்... என்ன காருங்க அது?

மயங்கி காரின் ஸ்டியரிங் வீல் மீதே விழுந்த ஓட்டுநரை, ரெனால்ட் கிளியோ (Renault Clio) கார் பத்திரமாக 25 கிலோ மீட்டர் அழைத்து சென்றுள்ளது.

Recommended Video

Maruti Alto K10 Launched At Rs 3.99 Lakh In TAMIL | What’s New On The Hatchback? Dual-Jet VVT & AMT

உலகம் முழுவதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த வித்தியாசமான சம்பவம் குறித்த சுவாரஷ்யமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கார் ஓடி கொண்டிருக்கும்போது மயங்கிய ஓட்டுநர்... 25கிமீ பாதுகாப்பாக அழைத்து சென்ற கார்... என்ன காருங்க அது? அதோட விலை எவ்வளவு?

ஓவர் ட்யூட்டி பார்க்கும் நபர்கள் தூங்கி வழிவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், ஓட்டுநர்கள் அவ்வாறு செய்வது மிகுந்த ஆபத்தானது. தூக்க கலக்கத்தில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்துகள் பல உள்ளன. இதனால்தான் வாகன ஓட்டிகளுக்கு ஓவர் ட்யூட்டி வழங்கக் கூடாது என சில விதிகள் கூறுகின்றன. மேலும், தூக்க கலக்கத்தில் இருக்கும்போது வாகனங்களை எடுத்துச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகின்றது.

கார் ஓடி கொண்டிருக்கும்போது மயங்கிய ஓட்டுநர்... 25கிமீ பாதுகாப்பாக அழைத்து சென்ற கார்... என்ன காருங்க அது? அதோட விலை எவ்வளவு?

Image Courtesy: Twitter

இந்த மாதிரியான சூழலில் நீங்க என்னதான் தூங்கி வழிஞ்சாலும் பிரச்னை இல்லை என கூறும் வகையில் ஓர் கார் செயல்பட்டிருக்கின்றது. வாகன ஓட்டி மயங்கி ஸ்டியரிங் வீலில் விழுந்த நிலையில் அவ்வாகனம் பத்திரமாக 25 கிமீ கடந்து அவரை அழைத்துச் சென்றிருக்கின்றது. கடந்த ஆகஸ்டு 14 ஆம் தேதி பெல்ஜியம் நாட்டிலேயே இந்த விநோத சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

கார் ஓடி கொண்டிருக்கும்போது மயங்கிய ஓட்டுநர்... 25கிமீ பாதுகாப்பாக அழைத்து சென்ற கார்... என்ன காருங்க அது? அதோட விலை எவ்வளவு?

நவீன கால கார்களில் வழங்கப்படும் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக தானியங்கி அம்சம் இருக்கின்றது. இந்த அம்சம் தற்போது இந்தியாவில் விற்பனையில் சில கார்களில்கூட வழங்கப்பட்டு வருகின்றது. மஹிந்திரா எக்ஸ்யூவி 700, ஹூண்டாய் டூஸான், எம்ஜி குளோஸ்டர் மற்றும் ஆஸ்டர் உள்ளிட்ட கார் மாடல்களில் அடாஸ் எனப்படும் மேம்பட்ட டிரைவர் உதவி அமைப்பு சிஸ்டத்தின்கீழ் வழங்கப்படுகின்றது.

கார் ஓடி கொண்டிருக்கும்போது மயங்கிய ஓட்டுநர்... 25கிமீ பாதுகாப்பாக அழைத்து சென்ற கார்... என்ன காருங்க அது? அதோட விலை எவ்வளவு?

இந்த அம்சம் டிரைவரின் உதவி இல்லாமலேயே சில முக்கிய வேலைகளை மேற்கொள்ளும். குறிப்பாக, அவசர காலங்களில் தானாக பிரேக் பிடித்தல், மோதலை ஏற்படுத்தும் வகையில் வரும் வாகனங்கள் குறித்து எச்சரிக்கை வழங்குதல், பாதசாரிகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்து அதுகுறித்த தகவலை வழங்குதல் மற்றும் பிளைண்ட் ஸ்பாட்டைக் கண்டறிவது என பாதுகாப்பு செயல்களை அது தன்னிச்சையாக செய்யும்.

கார் ஓடி கொண்டிருக்கும்போது மயங்கிய ஓட்டுநர்... 25கிமீ பாதுகாப்பாக அழைத்து சென்ற கார்... என்ன காருங்க அது? அதோட விலை எவ்வளவு?

இதுமட்டுமில்லைங்க, ஓட்டுநரின் உதவியே இல்லாமல் லேனுக்கு ஏற்றவாறு காரை இயக்கவும் இந்த அம்சம் செய்யும். இந்த மாதிரியான அம்சம் இருந்த காரணத்தினாலேயே பெல்ஜியத்தில் இளைஞர் மயங்கி விழுந்தபோதிலும் கார் தானாக சென்றிருக்கின்றது. இந்த 25 கிமீ பயணத்தில் வாகனம் எந்தவித பாதிப்பையும் சந்திக்கவில்லை. குறிப்பாக, சிறு விபத்தைகூட அது நிகழ்த்தவில்லை.

கார் ஓடி கொண்டிருக்கும்போது மயங்கிய ஓட்டுநர்... 25கிமீ பாதுகாப்பாக அழைத்து சென்ற கார்... என்ன காருங்க அது? அதோட விலை எவ்வளவு?

இதனால்தான் இந்த நிகழ்வு பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக ஒட்டுமொத்த உலகையே அது வியக்கச் செய்திருக்கின்றது. இளைஞர் இயக்கியது ரெனால்ட் கிளியோ (Renault Clio) காராகும். இந்த காரே அதன் 41 வயதுமிக்க ஓட்டுநர் மயங்கி விழுந்த போதிலும் பத்திரமாக 25 கிமீ வரை கொண்டு சென்றிருக்கின்றது. முதலில் இந்த கார் மெல்ல ஊர்ந்து செல்வதைப் பார்த்த சக வாகன ஓட்டிகள் டிரைவர் ஏதோ காரணத்திற்காக மெல்ல சென்றுக் கொண்டிருக்கின்றார் என நினைத்திருக்கின்றனர்.

கார் ஓடி கொண்டிருக்கும்போது மயங்கிய ஓட்டுநர்... 25கிமீ பாதுகாப்பாக அழைத்து சென்ற கார்... என்ன காருங்க அது? அதோட விலை எவ்வளவு?

ஆனால், உற்று பார்த்தபோதே ஓட்டுநர் மயங்கிக் கிடப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த நிலையிலேயே கார் நிறுத்தப்பட்டு மயங்கிக் கிடந்த நபருக்கு முதல் உதவி வழங்கப்பட்டிருக்கின்றது. அவரை பத்திரமாக மீட்டெடுத்த போக்குவரத்து அதிகாரிகள், சிறு காயம்கூட அந்த நபருக்கு ஏற்படவில்லை என தெரிவித்தனர். இங்கிலாந்து போன்ற உலகின் குறிப்பிட்ட சந்தையில் மட்டுமே ரெனால்ட் கிளியோ கார் விற்பனைச் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

கார் ஓடி கொண்டிருக்கும்போது மயங்கிய ஓட்டுநர்... 25கிமீ பாதுகாப்பாக அழைத்து சென்ற கார்... என்ன காருங்க அது? அதோட விலை எவ்வளவு?

இந்த காரில் பெரிய தொடு திரை இணைப்பு வசதியுடன் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுதவிர, நேவிகேஷன், கூகுள் பிளேசஸ் என எக்கசக்க அம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. 9.3 அங்குல திரையே இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இது ஓர் அட்வான்ஸ்ட் மல்டிமீடியா சிஸ்டம் ஆகும். இந்த திரை ப்ளூடூத், ஸ்மார்ட் ஃபோன் இணைப்பு, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய அம்சங்கள் கொண்டது.

கார் ஓடி கொண்டிருக்கும்போது மயங்கிய ஓட்டுநர்... 25கிமீ பாதுகாப்பாக அழைத்து சென்ற கார்... என்ன காருங்க அது? அதோட விலை எவ்வளவு?

இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளைக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் ஐரோப்பியர்கள் மத்தியில் ரெனால்ட் கிளியோவிற்கு மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மேலும், இது பல விருதுகளை வென்ற வாகனமாகவும் இருக்கின்றது. அந்தவகையில், சூப்பர்மினி ஆஃப் தி இயர் 2021, பெஸ்ட் ஃபர்ஸ்ட் கார் 2021, பெஸ்ட் ஸ்மால் கார் 2021 மற்றும் ஸ்மால் கார் ஆஃப் தி இயர் 2021 ஆகிய விருதுகளை அவ்வாகனம் வென்றிருக்கின்றது.

கார் ஓடி கொண்டிருக்கும்போது மயங்கிய ஓட்டுநர்... 25கிமீ பாதுகாப்பாக அழைத்து சென்ற கார்... என்ன காருங்க அது? அதோட விலை எவ்வளவு?

நான்கு விதமான ட்ரிம் தேர்வுகள் கிளியோ விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்துடன், பெட்ரோல் - ஹைபிரிட் ஆகிய ஆப்ஷன்களும் இந்த வாகனத்தில் வழங்கப்படுகின்றது. பாதுகாப்பு அம்சங்களாக இதன் உயர்நிலை வேரியண்டில் ஈகோமோட் ஃபங்க்சன், அவசரகால தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம், டிராஃபிக் சிக்னலின்போது வேகம் குறித்து எச்சரிக்கை வழங்குதல், ரியர் வியூ பார்க்கிங் கேமிரா, டயர் இன்ஃபிளேசன் கிட், எமெர்ஜென்சி பிரேக் அசிஸ்ட், கியர் ஷிஃப் இன்டிகேட்டர், ஆட்டோ ஹை-லோ பீம், முன் மற்றும் பின் பக்கத்தில் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இவற்றுடன், க்ரூஸ் கன்ட்ரோல், முன் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் ஏர் பேக்குகள், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் லேன் டிபார்ச்சர் வார்னிங் ஆகிய பாதுகாப்பு அம்சங்களும் ரெனால்ட் கிளியோவில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த அம்சங்களே பெல்ஜியம் இளைஞர் மயங்கி விழுந்த போதிலும் பாதுகாப்பாக பயணித்துக் கொண்டிருக்க உதவியாக இருந்திருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, August 18, 2022, 8:30 [IST]
English summary
Renault clio car carried the unconscious driver safely for 25 km
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+