நாட்டின் விலை குறைவான சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் பட்டத்தை இழந்த ரெனால்ட் கைகர்! இவ்ளோ ரூபா ஏத்திட்டாங்களா?

3 ஆயிரம் ரூபாய் வித்தியாசத்தால் இந்தியாவின் விலை குறைவான சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் என்ற பட்டத்தை ரெனால்ட் கைகர் இழந்திருக்கின்றது. தற்போது இந்த பட்டத்தை புதிதாக சூடியிருக்கும் கார் மாடல் எது என உங்களுக்கு தெரியுமா?, வாருங்கள் இதுகுறித்த அனைத்து விபரங்களையும் இப்பதிவில் பார்க்கலாம்.

விலை குறைவான சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் பட்டத்தை இழந்த ரெனால்ட் கைகர்! இந்த பட்டத்தை வேறெந்த கார் போயிருக்கு தெரியுமா?

இந்தியாவில் சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவில் பல தரப்பட்ட கார் மாடல்கள் விற்பனைத்து கிடைத்து வருகின்றன. இந்த பிரிவை மேலும் அதகளப்படுத்தும் வகையிலும், பட்ஜெட் வாகன விரும்பிகளை தன் பக்கம் கவரும் பொருட்டும் ரெனால்ட் நிறுவனம் அதன் புதுமுக கார் மாடலான கைகர் (Kiger)-ஐ கடந்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி அன்று நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கியது.

விலை குறைவான சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் பட்டத்தை இழந்த ரெனால்ட் கைகர்! இந்த பட்டத்தை வேறெந்த கார் போயிருக்கு தெரியுமா?

ஆரம்பத்தில் என்னவோ இந்த கார் பட்ஜெட் கார்களை பிரியர்களைக் கவரும் வகையிலேயே விற்பனைக்கு வந்தது. ஆனால், இப்போது இந்த பட்டத்தை இழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம், ரெனால்ட் கைகர் காரின் விலை தற்போது உயர்த்தப்பட்டிருக்கின்றது. ரூ. 31 ஆயிரம் வரை இக்காரின் விலையில் உயர்வு செய்யப்பட்டிருக்கின்றது.

விலை குறைவான சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் பட்டத்தை இழந்த ரெனால்ட் கைகர்! இந்த பட்டத்தை வேறெந்த கார் போயிருக்கு தெரியுமா?

இதன் விளைவாக தற்போது புதிய ரெனால்ட் கார் சந்தையில் ரூ. 5.79 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும் நிலை உருவாகி இருக்கின்றது. இது ஆரம்ப நிலை வேரியண்டான ஆர்எக்ஸ்இ மேனுவலின் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

விலை குறைவான சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் பட்டத்தை இழந்த ரெனால்ட் கைகர்! இந்த பட்டத்தை வேறெந்த கார் போயிருக்கு தெரியுமா?

ஆனால், இதைவிட பல மடங்கு குறைவான விலையிலேயே இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரூ. 5.45 லட்சம் என்ற ஆரம்ப விலையிலேயே ரெனால்ட் கைகர் அறிமுகத்தைப் பெற்றது. இதற்கு பின்னர் மிக சமீபத்தில் இதன் விலையில் ரூ. 15 ஆயிரம் உயர்த்தப்பட்டது. இதன் விளைவாக கைகரின் ஆரம்ப விலை ரூ. 5.64 லட்சமாக உயர்ந்தது.

விலை குறைவான சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் பட்டத்தை இழந்த ரெனால்ட் கைகர்! இந்த பட்டத்தை வேறெந்த கார் போயிருக்கு தெரியுமா?

இந்த அதிகபட்ச விலையிலேயே தற்போது மீண்டும் ரூ. 30 ஆயிரம் உயர்த்தப்பட்டிருக்கின்றது. ஆகையால், விலை குறைவான சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் என்ற பட்டத்தை ரெனால்ட் கைகர் இழந்திருக்கின்றது. தற்போது இந்த இடத்தை நிஸான் நிறுவனத்தின் மேக்னைட் கார் மாடல் பிடித்திருக்கின்றது. ரூ. 5.76 லட்சம் என்ற விலையில் இக்கார் விற்பனைக்குக் கிடைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

விலை குறைவான சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் பட்டத்தை இழந்த ரெனால்ட் கைகர்! இந்த பட்டத்தை வேறெந்த கார் போயிருக்கு தெரியுமா?

இரண்டு கார்களுக்கும் 3 ஆயிரம் ரூபாய் மட்டுமே வித்தியாசம் உள்ளது. ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்து வரும் இன்னும் சில கார் மாடல்களின் விலையையும் உயர்த்தி இருக்கின்றது. க்விட் மற்றும் ட்ரைபர் ஆகிய கார் மாடல்களின் விலையே உயர்த்தப்பட்டுள்ளன. இதுகுறித்த தகவலை பார்ப்பதற்கு முன்னதாக கைகர் காரின் எந்தெந்த வேரியண்ட் எவ்வளவு விலை உயர்வைப் பெற்றிருக்கின்றன என்பது பற்றிய தகவலைக் கீழே பட்டியலாகப் பார்க்கலாம்.

விலை குறைவான சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் பட்டத்தை இழந்த ரெனால்ட் கைகர்! இந்த பட்டத்தை வேறெந்த கார் போயிருக்கு தெரியுமா?
கைகர் பழைய விலை புதிய விலை வித்தியாசம்
RXE ₹5.64 Lakh ₹5.79 Lakh ₹15,000
RXL ₹6.54 Lakh ₹6.72 Lakh ₹18,000
RXT ₹7.02 Lakh

₹7.23 Lakh

₹21,000
RXL AMT ₹7.04 Lakh ₹7.27 Lakh ₹23,000
RXT Dual Tone ₹7.22 Lakh ₹7.46 Lakh ₹24,000
RXT (O) ₹7.37 Lakh ₹7.58 Lakh ₹21,000
RXT AMT ₹7.52 Lakh ₹7.78 Lakh ₹26,000
RXT (O) Dual Tone ₹7.57 Lakh ₹7.81 Lakh ₹24,000
RXT AMT Dual Tone ₹7.72 Lakh ₹8.01 Lakh ₹29,000
RXZ ₹7.91 Lakh ₹8.10 Lakh ₹19,000
RXT (O) AMT ₹7.87 Lakh ₹8.13 Lakh ₹26,000
RXZ Dual Tone ₹8.11 Lakh ₹8.33 Lakh ₹22,000
RXT (O) AMT Dual Tone ₹8.07 Lakh ₹8.36 Lakh ₹29,000
RXZ AMT ₹8.41 Lakh ₹8.65 Lakh ₹24,000
RXZ AMT (Dual Tone) ₹8.61 Lakh ₹8.88 Lakh ₹27,000
Turbo-petrol
RXT ₹8.12 Lakh ₹8.33 Lakh ₹21,000
RXT Dual Tone ₹8.32 Lakh ₹8.56 Lakh ₹24,000
RXT CVT ₹9.00 Lakh ₹9.13 Lakh ₹13,000
RXZ Turbo ₹9.01 Lakh ₹9.20 Lakh ₹19,000
RXT CVT Dual Tone ₹9.20 Lakh ₹9.36 Lakh ₹16,000
RXZ Turbo Dual Tone ₹9.21 Lakh ₹9.43 Lakh ₹22,000
RXZ Turbo CVT ₹9.89 Lakh ₹9.9 Lakh ₹10,000
RXZ Turbo CVT Dual Tone ₹10.09 Lakh ₹10.23 Lakh ₹14,000
விலை குறைவான சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் பட்டத்தை இழந்த ரெனால்ட் கைகர்! இந்த பட்டத்தை வேறெந்த கார் போயிருக்கு தெரியுமா?

க்விட் மற்றும் ட்ரைபர் ஆகிய இரு கார்களும் இந்தியாவின் விலை குறைவான கார்களின் பட்டியில் இடம் பிடித்திருந்தவை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், புதிய விலை உயர்வால் சற்று காஸ்ட்லியான வாகனங்களாக அவை மாறியுள்ளன. ரெனால்ட் க்விட் காரின் விலையில் ரூ. 11 ஆயிரம் தொடங்கி ரூ. 16 ஆயிரம் விலை உயர்வு செய்யப்பட்டிருக்கின்றது.

விலை குறைவான சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் பட்டத்தை இழந்த ரெனால்ட் கைகர்! இந்த பட்டத்தை வேறெந்த கார் போயிருக்கு தெரியுமா?

இதன் விளைவாக ரூ. 4.12 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைத்து வந்த க்விட் தற்போது ரூ. 4.25 லட்சம் என்ற ஆரம்ப விலைக்கு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இதன் உயர் நிலை தேர்வான கிளிம்பர் ஏஎம்டி வேரியண்டின் விலை ரூ. 5.71 லட்சமாக மாறியுள்ளது.

விலை குறைவான சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் பட்டத்தை இழந்த ரெனால்ட் கைகர்! இந்த பட்டத்தை வேறெந்த கார் போயிருக்கு தெரியுமா?

க்விட் காரின் விலை விபர பட்டியலைக் கீழே காணலாம்.

க்விட் பழைய விலை புதிய விலை விலை வித்தியாசம்
RXE 0.8L ₹4.12 Lakh ₹4.25 Lakh ₹13,000
RXL 0.8L ₹4.42 Lakh ₹4.58 Lakh ₹16,000
RXL 1.0L ₹4.58 Lakh ₹4.69 Lakh ₹11,000
RXT 0.8L ₹4.72 Lakh ₹4.88 Lakh ₹16,000
RXL AMT ₹4.98 Lakh ₹5.09 Lakh ₹11,000
RXT 1.0L ₹4.95 Lakh ₹5.10 Lakh ₹15,000
Climber ₹5.16 Lakh ₹5.31 Lakh ₹15,000
RXT AMT ₹5.35 Lakh ₹5.50 Lakh ₹15,000
Climber AMT ₹5.56 Lakh ₹5.71 Lakh ₹15,000
விலை குறைவான சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் பட்டத்தை இழந்த ரெனால்ட் கைகர்! இந்த பட்டத்தை வேறெந்த கார் போயிருக்கு தெரியுமா?

ரெனால்ட் ட்ரைபர் இந்தியாவின் மலிவு விலை எம்பிவி ரக வாகனமாக காட்சியளிக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, இந்த கார் மாடல் அதிக பாதுகாப்பான காராகவும் காட்சியளிக்கின்றது. குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் (விபத்து) ஆய்வில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார் ரேட்டிங்கை ட்ரைபர் பெற்றது.

விலை குறைவான சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் பட்டத்தை இழந்த ரெனால்ட் கைகர்! இந்த பட்டத்தை வேறெந்த கார் போயிருக்கு தெரியுமா?

இத்தகை சிறப்பு மிக்க காரின் விலையேயே நிறுவனம் தற்போது ரூ. 15 ஆயிரம் தொடங்கி 31 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தி இருக்கின்றது. இந்த புதிய விலை உயர்வின் காரணத்தினால் ரூ. 5.54 லட்சத்திற்கு கிடைத்து வந்த ஆர்எக்ஸ்இ (ஆரம்ப நிலை) வேரியண்ட் தற்போது ரூ. 5.69 லட்சம் என்ற ஆரம்ப விலைக்கு உயர்ந்திருக்கின்றது.

விலை குறைவான சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் பட்டத்தை இழந்த ரெனால்ட் கைகர்! இந்த பட்டத்தை வேறெந்த கார் போயிருக்கு தெரியுமா?

இதன் உச்ச நிலை தேர்வான ஆர்எக்ஸ்இசட் ஏஎம்டி ட்யூவல் டோன் வேரியண்டின் விலை ரூ. 8.02 லட்சத்தில் இருந்து ரூ. 8.25 லட்சமாக உயர்ந்திருக்கின்றது. இந்த விலை உயர்வுகள் அனைத்தும் உற்பத்தி மற்றும் கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்து வருவதனால் உயர்த்தப்பட்டுள்ளது.

விலை குறைவான சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் பட்டத்தை இழந்த ரெனால்ட் கைகர்! இந்த பட்டத்தை வேறெந்த கார் போயிருக்கு தெரியுமா?

ஆனால், ரெனால்ட் நிறுவனம் அதன் பிரபல எஸ்யூவி கார் மாடலான டஸ்டரின் விலையில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இந்த கார் மாடல் அதன் பழைய விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கும் என ரெனால்ட் தெரிவித்திருக்கின்றது. தற்போது ரெனால்ட் டஸ்டர் ரூ. 9.86 லட்சம் தொடங்கி ரூ. 10.25 லட்சம் ஆகிய விலைகளில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. மேலே பார்த்த அனைத்து விலை விபரங்களும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை விபரங்கள் ஆகும்.

விலை குறைவான சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் பட்டத்தை இழந்த ரெனால்ட் கைகர்! இந்த பட்டத்தை வேறெந்த கார் போயிருக்கு தெரியுமா?

ட்ரைபர் காரின் விலை உயர்வு பற்றிய தகவலை பட்டியலாகக் கீழே காணலாம்.

ட்ரைபர் பழைய விலை புதிய விலை விலை வித்தியாசம்
RXE ₹5.54 Lakh ₹5.69 Lakh ₹15,000
RXL ₹6.20 Lakh ₹6.41 Lakh ₹21,000
RXL AMT ₹6.70 Lakh ₹6.93 Lakh ₹23,000
RXT ₹6.75 Lakh ₹6.96 Lakh ₹19,000
RXT AMT ₹7.25 Lakh ₹7.48 Lakh ₹23,000
RXZ ₹7.35 Lakh ₹7.56 Lakh ₹31,000
RXZ Dual Tone ₹7.52 Lakh ₹7.73 Lakh ₹19,000
RXZ AMT ₹7.85 Lakh ₹8.08 Lakh ₹23,000
RXZ AMT Dual Tone ₹8.02 Lakh ₹8.25 Lakh ₹23,000
Most Read Articles

English summary
Renault hikes cars price up To rs 31000
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X