இந்திய சந்தையை விட்டு வெளியேறிய டஸ்டர் கார்... பரிதாப நிலையில் ரெனால்ட் நிறுவனம்... என்னங்க இப்படி ஆயிருச்சு?

இந்திய சந்தையில் ரெனால்ட் நிறுவன கார்களின் விற்பனை மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையை விட்டு வெளியேறிய டஸ்டர் கார்... பரிதாப நிலையில் ரெனால்ட் நிறுவனம்... என்னங்க இப்படி ஆயிருச்சு?

ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் நடப்பாண்டு மார்ச் மாதம் 8,518 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 12,356 ஆக இருந்தது. இது 31 சதவீத வீழ்ச்சியாகும். வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும் கூட, மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் ரெனால்ட் நிறுவனம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இந்திய சந்தையை விட்டு வெளியேறிய டஸ்டர் கார்... பரிதாப நிலையில் ரெனால்ட் நிறுவனம்... என்னங்க இப்படி ஆயிருச்சு?

நடப்பாண்டு பிப்ரவரி மாதம் ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் வெறும் 6,568 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் அதன்பின் வந்த மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 8,518 ஆக உயர்ந்தது. இது சுமார் 30 சதவீத வளர்ச்சியாகும். கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் ரெனால்ட் 7வது இடத்தை பிடித்துள்ளது.

இந்திய சந்தையை விட்டு வெளியேறிய டஸ்டர் கார்... பரிதாப நிலையில் ரெனால்ட் நிறுவனம்... என்னங்க இப்படி ஆயிருச்சு?

ஹோண்டா, ஸ்கோடா, எம்ஜி, நிஸான், ஜீப் மற்றும் சிட்ரோன் ஆகிய நிறுவனங்கள் ரெனால்ட்டிற்கு பின்னால் இருக்கின்றன. இந்திய சந்தையில் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் ரெனால்ட் நிறுவனத்தின் மார்க்கெட் ஷேர் எனப்படும் சந்தை பங்கு 3.9 சதவீதமாக இருந்தது. ஆனால் நடப்பாண்டு மார்ச் மாதம் இது 2.7 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது 1.2 சதவீதம் குறைந்துள்ளது.

இந்திய சந்தையை விட்டு வெளியேறிய டஸ்டர் கார்... பரிதாப நிலையில் ரெனால்ட் நிறுவனம்... என்னங்க இப்படி ஆயிருச்சு?

இந்திய சந்தையில் நடப்பாண்டு மார்ச் மாதம் அதிகம் விற்பனையான ரெனால்ட் கார் என்ற பெருமையை ரெனால்ட் ட்ரைபர் பெற்றுள்ளது. இது எம்பிவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். நடப்பாண்டு மார்ச் மாதம் 3,561 ட்ரைபர் கார்களை ரெனால்ட் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 4,133 ஆக இருந்தது. இது 14 சதவீத வீழ்ச்சியாகும்.

இந்திய சந்தையை விட்டு வெளியேறிய டஸ்டர் கார்... பரிதாப நிலையில் ரெனால்ட் நிறுவனம்... என்னங்க இப்படி ஆயிருச்சு?

இந்த பட்டியலில் ரெனால்ட் கைகர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். நடப்பாண்டு மார்ச் மாதம் ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் 2,496 கைகர் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கையானது, கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 3,839 ஆக இருந்தது. இது 35 சதவீத வீழ்ச்சியாகும்.

இந்திய சந்தையை விட்டு வெளியேறிய டஸ்டர் கார்... பரிதாப நிலையில் ரெனால்ட் நிறுவனம்... என்னங்க இப்படி ஆயிருச்சு?

இந்த பட்டியலில் மூன்றாவது மற்றும் கடைசி இடத்தை ரெனால்ட் க்விட் பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 4,132 க்விட் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு மார்ச் மாதம் 2,461 ஆக குறைந்துள்ளது. இதன் காரணமாக ரெனால்ட் க்விட் கார் விற்பனையில் 40 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இந்திய சந்தையை விட்டு வெளியேறிய டஸ்டர் கார்... பரிதாப நிலையில் ரெனால்ட் நிறுவனம்... என்னங்க இப்படி ஆயிருச்சு?

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த 3 கார்களை மட்டுமே ரெனால்ட் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. முன்னதாக டஸ்டர் காரையும் ரெனால்ட் நிறுவனம் விற்பனை செய்து கொண்டிருந்தது. ஆனால் டஸ்டர் காரை ரெனால்ட் நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் விற்பனையில் இருந்து விலக்கி விட்டது. ரெனால்ட் டஸ்டர் காரானது, எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும்.

இந்திய சந்தையை விட்டு வெளியேறிய டஸ்டர் கார்... பரிதாப நிலையில் ரெனால்ட் நிறுவனம்... என்னங்க இப்படி ஆயிருச்சு?

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரெனால்ட் நிறுவனம் விற்பனை செய்து வரும் 3 கார்களுமே நடப்பாண்டு மார்ச் மாதம் சரிவை சந்தித்துள்ளன. அத்துடன் மிக நீண்ட காலமாக விற்பனை செய்யப்பட்டு வந்த டஸ்டர் காரின் உற்பத்தியையும் ரெனால்ட் நிறுவனம் நிறுத்தியிருப்பது, வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையை விட்டு வெளியேறிய டஸ்டர் கார்... பரிதாப நிலையில் ரெனால்ட் நிறுவனம்... என்னங்க இப்படி ஆயிருச்சு?

ஆனால் டஸ்டர் காரை விற்பனையில் இருந்து விலக்கியது ஏன்? என்பதற்கான அதிகாரப்பூர்வ காரணம் எதையும் ரெனால்ட் நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால் விற்பனை மந்தமாக இருந்ததும், போட்டி மிக கடுமையாக அதிகரித்து கொண்டே வந்ததும்தான், ரெனால்ட் டஸ்டர் காரின் விற்பனை நிறுத்தப்பட்டதற்கு காரணமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

இந்திய சந்தையை விட்டு வெளியேறிய டஸ்டர் கார்... பரிதாப நிலையில் ரெனால்ட் நிறுவனம்... என்னங்க இப்படி ஆயிருச்சு?

ரெனால்ட் டஸ்டர் காரின் மிக முக்கியமான போட்டியாளர்களாக கருதப்படும் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களும் விற்பனையில் கொடி கட்டி பறக்கின்றன. அத்துடன் புதிய போட்டியாளர்களின் வருகையும் ரெனால்ட் டஸ்டர் காருக்கு விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி விட்டது.

இந்திய சந்தையை விட்டு வெளியேறிய டஸ்டர் கார்... பரிதாப நிலையில் ரெனால்ட் நிறுவனம்... என்னங்க இப்படி ஆயிருச்சு?

இதன் காரணமாகவே டஸ்டர் காரை விற்பனையில் இருந்து விலக்கும் முடிவை ரெனால்ட் நிறுவனம் எடுத்திருக்கும் என கூறப்படுகிறது. இதற்கிடையே க்விட் ஹேட்ச்பேக் மற்றும் கைகர் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் 2022 மாடல்களை ரெனால்ட் நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது ரெனால்ட் நிறுவனத்திற்கு உதவி செய்யுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, April 25, 2022, 8:32 [IST]
English summary
Renault india model wise sales report march 2022 triber leads chart
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+