இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ரெனால்ட் கார் ட்ரைபர்... இந்த விலைக்கு சூப்பரான காருங்க... எவ்ளோனு தெரியுமா?

இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டு அதிகம் விற்பனை செய்யப்பட்ட ரெனால்ட் கார் என்ற பெருமையை ட்ரைபர் பெற்றுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ரெனால்ட் கார் ட்ரைபர்... இந்த விலைக்கு சூப்பரான காருங்க... எவ்ளோனு தெரியுமா?

ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த 2021ம் ஆண்டு ஒட்டுமொத்தமாக 95,578 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 19.08 சதவீத வளர்ச்சியாகும். ஏனெனில் ரெனால்ட் நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு இந்திய சந்தையில் 80,518 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ரெனால்ட் கார் ட்ரைபர்... இந்த விலைக்கு சூப்பரான காருங்க... எவ்ளோனு தெரியுமா?

ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த 2021ம் ஆண்டு 32,766 ட்ரைபர் கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டு இந்திய சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ரெனால்ட் நிறுவன கார் என்ற பெருமையை ட்ரைபர் பெற்றுள்ளது. அதே நேரத்தில் இந்த பட்டியலில் ரெனால்ட் க்விட் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ரெனால்ட் கார் ட்ரைபர்... இந்த விலைக்கு சூப்பரான காருங்க... எவ்ளோனு தெரியுமா?

ரெனால்ட் நிறுவனம் கடந்த ஆண்டு 31,656 க்விட் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த பட்டியலில் ரெனால்ட் கைகர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. ரெனால்ட் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு 28,586 கைகர் கார்களை விற்பனை செய்துள்ளது. அதே நேரத்தில் கடந்த ஆண்டு ரெனால்ட் டஸ்டர் காரின் விற்பனை படுமோசமாக இருந்துள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ரெனால்ட் கார் ட்ரைபர்... இந்த விலைக்கு சூப்பரான காருங்க... எவ்ளோனு தெரியுமா?

கடந்த ஆண்டு முழுவதும் ரெனால்ட் நிறுவனம் வெறும் 2,570 டஸ்டர் கார்களை மட்டும்தான் விற்பனை செய்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ரெனால்ட் நிறுவனத்தின் கார் என்ற பெருமையை பெற்ற ட்ரைபர் கார் கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ரெனால்ட் கார் ட்ரைபர்... இந்த விலைக்கு சூப்பரான காருங்க... எவ்ளோனு தெரியுமா?

அப்போதில் இருந்தே குறிப்பிட்ட இடைவெளிகளில் ரெனால்ட் நிறுவனம் ட்ரைபர் காரை மேம்படுத்தி கொண்டே வருகிறது. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் ஒரே ஒரு இன்ஜின் தேர்வுடன் மட்டுமே ரெனால்ட் ட்ரைபர் கார் கிடைத்து கொண்டுள்ளது. இது 1.0 லிட்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட், இன்லைன்-3 பெட்ரோல் இன்ஜின் ஆகும்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ரெனால்ட் கார் ட்ரைபர்... இந்த விலைக்கு சூப்பரான காருங்க... எவ்ளோனு தெரியுமா?

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 72 பிஎஸ் பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி ஆகிய கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ட்ரைபர் காரில் ரெனால்ட் நிறுவனம் வெகு விரைவில் 1.0 லிட்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ரெனால்ட் கார் ட்ரைபர்... இந்த விலைக்கு சூப்பரான காருங்க... எவ்ளோனு தெரியுமா?

ரெனால்ட் கைகர் காரில் தற்போது இந்த இன்ஜின் தேர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 100 பிஎஸ் பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. ரெனால்ட் ட்ரைபர் காரில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் தேர்வுகளுடன் இந்த இன்ஜின் தேர்வு வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ரெனால்ட் கார் ட்ரைபர்... இந்த விலைக்கு சூப்பரான காருங்க... எவ்ளோனு தெரியுமா?

ரெனால்ட் ட்ரைபர் காரின் டாப் வேரியண்ட்டில், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், மல்டி ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், எல்இடி பகல் நேர விளக்குகள் உடன் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, கூல்டு ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ரெனால்ட் கார் ட்ரைபர்... இந்த விலைக்கு சூப்பரான காருங்க... எவ்ளோனு தெரியுமா?

மேலும் 4 ஏர்பேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளையும் ரெனால்ட் ட்ரைபர் கார் பெற்றுள்ளது. பட்ஜெட் காராக இருந்தாலும் கூட குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் ரெனால்ட் ட்ரைபர் கார் அசத்தியுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திரங்களையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 3 நட்சத்திரங்களையும் ரெனால்ட் ட்ரைபர் கார் பெற்றுள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ரெனால்ட் கார் ட்ரைபர்... இந்த விலைக்கு சூப்பரான காருங்க... எவ்ளோனு தெரியுமா?

தற்போதைய நிலையில் ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப விலை 5.69 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 8.25 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை புது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எர்டிகா உள்ளிட்ட கார்களுடன் ரெனால்ட் ட்ரைபர் போட்டியிட்டு வருகிறது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ரெனால்ட் கார் ட்ரைபர்... இந்த விலைக்கு சூப்பரான காருங்க... எவ்ளோனு தெரியுமா?

குறைவான விலை, போதுமான வசதிகள், சிறந்த பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்தான் ரெனால்ட் ட்ரைபர் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான காராக திகழ்கிறது. நாங்கள் மேலே கூறியபடி புதிய இன்ஜின் தேர்வு வழங்கப்பட்டால், ரெனால்ட் ட்ரைபர் காரின் விற்பனை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault india sales report 2021 triber mpv leads chart
Story first published: Sunday, January 9, 2022, 11:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X