இவ்ளோ பாதுகாப்பானதா இந்த ரெனால்ட் கைகர்! இக்காரை நடுத்தர மக்களாலும் வாங்க முடியுங்க... விலை ரொம்ப கம்மி!
இந்தியாவில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் ரெனால்ட் கைகர் அதிக பாதுகாப்பான கார் என தகவல் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ரெனால்ட் நிறுவனத்தின் முக்கியமான தயாரிப்பாக கைகர் (Kiger) கார் காட்சியளிக்கின்றது. ஏற்கனவே, இந்தக் கார் நாட்டின் மலிவு விலை வாகனம், அதிகம் விற்பனையாகும் சப்-காம்பேக்ட் எஸ்யூவிக்களில் ஒன்று எனப் பல்வேறு புகழ்களுக்கு சொந்தக்காரராகக் காட்சியளிக்கின்றது. இந்த நிலையிலேயே ரெனால்ட் கைகர் அதிகம் பாதுகாப்பான வாகனம் என்கிற தகவல் வெளி வந்துள்ளது.

குளோபல் என்சிஏபி மிக சமீபத்தில் ரெனால்ட் கைகர் காரை மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது. இந்த ஆய்வில் கைகர் கார் ஐந்திற்கு நான்கு ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்று அசத்தியிருக்கின்றது. இது நிறுவனத்திற்கு பெருமிதம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இதுமட்டுமின்றி, தன்னுடைய பயனர்களுக்கு அதிக பாதுகாப்பான உணர்வையும் இக்கார் வழங்கியிருக்கின்றது.

பெரியவர்களுக்கான பாதுகாப்பு குறித்து செய்யப்பட்ட ஆய்வில் 17 புள்ளிகளுக்கு 12.34 புள்ளிகளையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பு குறித்து செய்யப்பட்ட ஆய்வில் 49 புள்ளிகளுக்கு 21.05 புள்ளிகளையும் அக்கார் பெற்றிருக்கின்றது. சிறுவர்கள் விஷயத்தில் கைகர் பெற்றிருப்பது மிக மிக குறைவான புள்ளிகள் ஆகும். சிறுவர்களை பிரதிபலிக்கும் வகையில் காருக்குள் இருந்த டம்மிக்கு போதிய பாதுகாப்பை கைகர் வழங்க தவறியதன் காரணத்தினால் இத்தகைய குறைவான புள்ளிகளை அது பெற்றிருக்கின்றது.

இதன் விளைவாக சிறுவர்களின் பாதுகாப்பிற்கான தர ஆய்வில் ஐந்திற்கு இரண்டு ஸ்டார்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. அதேவேலையில், பெரியவர்களுக்கான பாதுகாப்பான விஷயத்தில் இக்கார் மிக சிறப்பாக செயல்பட்டிருப்பது தெரிகின்றது. ஆனால், சில இடங்களில் மட்டும் அது சிறப்பாக செயல்பட தவறியிருக்கின்றது. இதனால் ஐந்திற்கு நான்கு ஸ்டார்களை மட்டுமே பெரியவர்களுக்கான பாதுகாப்பு தர ஆய்வில் கைகர் பெற்றிருக்கின்றது.

எதிர்பாராத நிகழ்வுகளின்போது டிரைவரின் மார்பக பகுதி, தொடை பகுதி மற்றும் கோ டிரைவரின் தொடை பகுதிகளுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படலாம் என்பது ஆய்வின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. இதுமட்டுமின்றி, டிரைவரின் இரு கால்களுக்கும், கோ டிரைவர் பயணியின் வலது கால் மற்றும் மார்ப பகுதிக்கும் லேசான காயங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளும் அதிகளவில் இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

இதுபோன்ற காரணங்களினாலேயே ரெனால்ட் கைகர் ஐந்து ஸ்டார்களை பெற தவறியிருக்கின்றது. இது லேசான கவலையளிக்கும் விஷயமாக இருந்தாலும், நான்கு நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை இந்த குறைந்த விலை காம்பேக்ட் எஸ்யூவி கார் பெற்றிருக்கின்றது. இது பட்ஜெட் கார் விரும்பிகள் மத்தியில் அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

இந்தியாவில் 2021ம் ஆண்டே ரெனால்ட் கைகர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதிக கவர்ச்சி, ஸ்போர்ட்டி மற்றும் ஸ்மார்ட்டான காராக இது இந்திய சந்தையில் காட்சியளிக்கின்றது. இந்த நிலையிலேயே அதிக பாதுகாப்பான வாகனம் என்பதையும் கைகர் நிரூபித்திருக்கின்றது.
ரெனால்ட் நிறுவனம் இக்காரை சிஎம்எஃப்ஏ-ப்ளஸ் (CMFA+) பிளாட்பாரத்தில் வைத்தே கட்டமைக்கின்றது. இக்காரை ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிலும் விற்பனைச் செய்கின்றது. இதற்கான கைகர் கார்கள் இந்தியாவில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரெனால்ட் கைகர் காரில் டிரைவருக்கான பாதுகாப்பு அம்சமாக ப்ரீ டென்ஷனர் மற்றும் லோட் லிமிட்டர் வசதிக் கொண்ட முன் மற்றும் பக்கவாட்டு சீட் பெல்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, நான்கு ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார், இம்பேக்ட் சென்சிங் டூர் அன்லாக், ஸ்பீடு சென்சிங் டூர் லாக், சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் ஆங்கர்கள் என பல அம்சங்கள் கைகர் காரில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இதுபோன்ற பாதுகாப்பு அம்சங்களை இக்கார் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே ரெனால்ட் கைகர் கார் தற்போது குளோபல் என்சிஏபி நிகழ்த்திய மோதல் ஆய்வில் நான்கு நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. இக்காரில் 1.0 லிட்டர் டர்போசார்ஜட் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் ஒரு லிட்டருக்கு அதிகபட்சமாக 20.5 கிமீ வரை மைலேஜ் தரும். சமீபத்தில் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றான ட்ரைபர் (Triber) எம்பிவி-யும் இதேபோன்று அதிக பாதுகாப்பான கார் என்ற பெருமையை ரெனால்டிற்கு பெற்றுக் கொடுத்தது. இதுவும், நான்கு ஸ்டார் ரேட்டிங்கையே பெற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








